தமிழ் திரைப்படஙகளான ஆட்டோகிராப், ஆடுகளம் உட்பட பல படங்களுக்கு பாடல் எழுதியதால் பிரபலமானவர் கவிஞர் சினேகன்
தற்போது நடிகர் கமல்ஹாசன் நடத்தும் ம.நீ.மையம் கட்சியில் உள்ளார். அவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தான் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்திவருவதாகக் கூறும் சினேகம் அறக்கட்டளையை முறையாக பதிவு செய்துள்ளேன். இந்த அறக்கட்டளையை வருமானவரித்துறை அங்கீகரித்து அனுமதி வழங்கியுள்ளது என்று கூறி புகார் தாக்கல் செய்த நிலையில்
செய்தியாளர்களிடம் சினேகன் பேசியபோது:- 'கடந்த 2015 ஆம் ஆண்டு சினேகம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி நடத்தி வருவதன் மூலம் பலருக்கும் உதவிகள் செய்கிறேன். சில நாட்களுக்கு முன் எனது நண்பர்கள் என்னிடம் அதிர்ச்சியான தகவல் சொன்னார்கள் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி என்பவர் எனது அறக்கட்டளையின் பெயரில் வெப்சைட் தொடங்கி, அதன் மூலம் நன்கொடை வசூலிப்பதாகச் சொன்னார்கள்.
அதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்... அடுத்த சில நாட்களிலேயே வருமான வரித் துறையினர் அது சம்பந்தமாக என்னிடம்.? விசாரணை செய்தனர். என்னுடைய அறக்கட்டளையின் வரவு செலவு விபரங்களைக் கேட்டார்கள்.. அப்போது தான் ஜெயலட்சுமியின் அத்தனை மோசடியும் அம்பலமானது. அதையடுத்து ஜெயலட்சுமியிடம் இரண்டு முறை விளக்கம் கேட்டும் எந்தப் பதிலும் வரவில்லை. அதனால், இந்த விவகாரம் குறித்து சென்னை காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனப் புகார் கொடுத்துள்ளேன்' என்றார்.
மேலும் நான் இது தொடர்பாக என்னுடைய அறக்கட்டளையின் பெயரை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றுகூறி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினால்... அது தவறான அஞ்சல் முகவரி என்று தபால் திருப்பி விட்டது. நான் நேரடியாக என்னுடைய மேலாளரை அனுப்பி விசாரித்த போது அந்த சினேகம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசம் போலியானதென்பது தெரியவந்தது. போலியான விலாசத்தில் என்னுடைய அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து தொலைபேசி மூலம் பொதுமக்களை தனியாகச் சந்தித்து, அவர்களைத் தன் வலையில் வீழ்த்திப் பணம் பறிக்கும் ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து பொதுமக்களை பாதுகாப்பு வேண்டும். மேலும், சினேகம் ஃபவுண்டேஷன் பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக ஜெயலட்சுமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும்... அந்தப் போலியான இணையதளத்தை முடக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று புகாரில் குறிப்பிட்டிருந்த நிலையில் கவிஞர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்கும் படி நேற்று சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-. ``என் மீது கவிஞர் சினேகன் அவதூறாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார். நான் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சினேகம் அறக்கட்டளையைத் தொடங்கி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு சேவைகளை செய்துவருகிறேன். கொரோனா பேரிடர் ர். காலத்தில் மக்களுக்கு எங்களின் சினேகம் அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறோம். ஆனால், கவிஞர் சினேகன் தன்னுடைய சினேகம் அறக்கட்டளையின் பெயரை நான் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களை தனியாகச் சந்தித்துப் பணம் பறித்ததாக புகார் அளித்திருக்கிறார். அது முற்றிலும் என்னுடைய நிறுவனம். அதன் பெயரைக் களங்கப்படுத்தும் வகையிலும், நான் பெண் என்று கூட பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையில் கவிஞர் சினேகன் இந்தக் குற்றச்சாட்டுக்களை சொல்லியிருக்கிறார். மேலும், நான் பாரதிய ஜனதா.கட்சியில் மாநில மகளிரணித் துணைத் தலைவியாக இருந்து வருகிறேன். அதைப் போல கவிஞர் சினேகனும் ஒரு கட்சியில் இருந்து வருகிறார். அரசியல் ஆதாயத்துக்காகக்கூட அவர் என்மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம் என நான் கருதுகிறேன். ஏனெனில் தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்து வருவது மற்ற கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பா.ஜ.க நிர்வாகிகள்மீது இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். என்னுடைய அறக்கட்டளை, அண்ணாநகரில் தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் கவிஞர் சினேகன், இணையதளத்தில் கிடைத்த முகவரி, போலி என்று குறிப்பிட்டிருக்கிறார். என் மீது அவதூறாகக் குற்றம்சாட்டிய கவிஞர் சினேகன், பொது வெளியில் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையென்றால் அவர்மீது மானநஷ்ட வழக்குத் தொடர்வேன் என்றார். சின்னத்திரை நடிகை
ஜெயலட்சுமியை பொறுத்தவரை, டிவி சீரியல்களில் பிரபலம்.. திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.. பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டனர்.. பாஜக சார்பாக சட்டசபைத் தேர்தலிலும் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர் மீது ஏற்கெனவே பல மோசடி வழக்குகள் உள்ளது.. மகளிர் சுய உதவிக் குழுவினர் அளித்த மோசடிப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது, கடன்வாங்கிய சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள், மாதமாதம் தவணைத் தொகை கட்டிய பிறகும், அதெல்லாம் வட்டி பணம், அசல் எங்கே? என்று நடிகை கேட்டு மிரட்டுவதாகவும், இரவு நேரத்தில் எங்கள் வீட்டிற்கு ஆண்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆணையர் அலுவலகத்தில் இவர் மீது புகார் ஒன்றை தந்திருந்த நிலையில் இப்படி பல புகார்கள் ஜெயலட்சுமி மீதுள்ள நிலையில், இன்னொரு புகாரை சினேகன் தந்திருப்பது இப்போது விவாதம் ஆனாலும் இதன் மீது சில ஆய்வுகள் தேவை. நடிகை ஜெயலட்சுமி பாஜக பொறுப்பு வகித்தவர் அங்கு பல ஆடிட்டர் உள்ள கட்சி அது அவருக்கு கை கொடுக்கும் ஆனால் இதில் கவிஞர் சினேகன் நடத்தும் டிரஸ்ட் வரவு செலவு தணிக்கை மற்றும் ஆண்டு அறிக்கை சரியாக இருந்தால் மட்டுமே இதில் நடவடிக்கை இயலும். எடுத்தேன் கவிழ்த்தேன் என இதில் நடவடிக்கை வர வாய்ப்பு இல்லை.
ஒரே பெயரில் பலர் இருக்கலாம் ஆனால் ஒரே பெயரில் அறக்கட்டளை சட்டப்படி பதிவு இருக்க வாய்ப்பு இல்லை ஒருவர் அறக்கட்டளைகள் சட்டப்படியும் மற்றொருவர் சங்கப் பதிவு சட்டப்படியும் பதிவு செய்திருந்தால் கூட அதை வைத்து நிதி திரட்டும் செயல் முடியாது காரணம் மத்திய உள்துறை அனுமதி தேவை மேலும் கம்பெனிகள் சட்டம் பிரிவு 25 ன் படி துவங்கி அதே பெயரில் வேறு ஒருவர் நிறுவனங்கள் நடத்தினாலும் டிரஸ்ட் சட்டப்படி வருமான வரித்துறை அனுமதிக்காது கணக்கு எண் வழங்காதுஅப்படி இருக்க வருமான வரி சோதனை நடத்தினர் என சினேகன் கூறுவது சரியா எனப் பார்த்தால் உண்மை வெளிவரும் டிரஸ்ட் சட்டப்படி முதலில் வருமான வரி கணக்கு எண் மற்றும் டிரஸ்ட் பதிவு பத்திரம் மற்றும் தீர்மானம் இல்லாமல் வங்கிகள் கணக்கு துவக்க அனுமதிப்பது இல்லை மேலும் கணக்கு வருடம் தோறும் தாக்கல் செய்த நிலை இருந்து அதன் அடிப்படையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் 10 A ,10B 12A,12B, மற்றும் 80 A முதல் 80 G வரை வழங்கும் அதன் பின்னர் தான் நிதி திரட்டும் பணிகள் டிரஸ்ட் துவங்கும் இதில் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு கட்டாயம் FCRA பெற வேண்டும் இவ்வளவு நடைமுறை உள்ள போது கவிஞர் சினேகனும் நடிகை ஜெயலெட்சுமியும் தவறு யார் செய்தது என கண்டறிவது பெரிய செயல் இல்லை ஆனால் இது பின்னணி வேறு ஏதோ உண்டு அது விரைவில் தெரியலாம். என்பதே இங்கு பொது நீதி. "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்". இது சினேகன் எழுதிய பாடல் அந்த மாற்றம் விரைவில் வரலாம்.
கருத்துகள்