முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யங் இந்தியா' அலுவலகத்திற்குச் சீல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிகாரிகள் சம்மன்


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்களிடம் தொடர் விசாரணையை மேற்கொண்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல இடங்களில் அதிகாரிகள் மேற்கொண்டனர். சோதனையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் யாருமில்லாததால் அதிகாரிகள் 'யங் இந்தியா' அலுவலகத்திற்குச் சீல் வைத்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.  இந்தச் சோதனையின் போது உடனிருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.அவ்வாறு இருப்பதாக முன்வந்தால் மட்டுமே சீல் அகற்றப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், டெல்லி ஜன்பத் ரோட்டில் அமைந்துள்ள சோனியா காந்தியின் வீடு மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், மல்லிகார்ஜுன் கார்கே, பவன் பன்சால்,         

      ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.  நேற்று தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லி ஹெரால்டு ஹவுஸில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகங்களிலும் அமலாக்க இயக்குநரகம் சோதனையை நடத்தியது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. நாடு விடுதலைக்கு முன்னரே 'அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தை ஜவகர்லால் நேரு தொடங்கி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் இந்தப் பத்திரிகையை நடத்தி வந்தார்.இப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. 2010-ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதன் பங்குதாரர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அப்போது அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாகக் கடன் வழங்கப்பட்டது.


இக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவனப் பங்குகள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். அது தொடர்பாக ஏற்கனவே வருமான வரித் துறை வழக்குப் பதிவு செய்து அவ்வழக்கு நிலுவையிலுள்ளது. டெல்லியிலுள்ள நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் செயல்படும் யங் இந்தியா நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர், தங்களின் அனுமதியின்றி அலுவலகத்தைத் திறக்கக் கூடாதெனவும் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் வீட்டின் முன்பும் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அமலாக்கத் துறையின்  நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திசை திருப்பப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் இந்தச் சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.  நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய புள்ளிகளிடம் தொடர் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல இடங்களில் அதிகாரிகள் நேற்றும் இன்றும் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் யாரும் இல்லாததால் அதிகாரிகள் 'யங் இந்தியா' அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் முக்கிய தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சோதனையின் போது உடன் இருக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. நாடு விடுதலைக்கு முன்னரே 'அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தை நேரு தொடங்கி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் இந்த பத்திரிகையை நடத்தி வந்த . இப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. 2010-ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதன் பங்குதாரர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அப்போது அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடன் வழங்கப்பட்டது. கடனுக்கு மாற்றாக அந்நிறுவனப் பங்குகள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி பாஜகவின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். தொடர்பாக ஏற்கனவே வருமான வரி துறை வழக்குப் பதிவு செய்து அவ்வழக்கும் நிலுவையில் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...