தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி சென்ற முதல்வரை
அமைச்சர்கள் துரைமுருகன் கே.என். நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் தா.மோ.அன்பரசன் சேகர்பாபு ஆவடி நாசர் உள்ளிட்டோர்கள் வழியனுப்பி வைத்தனர்.
டெல்லியில் புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். தொடர்ந்து துணைக் குடியரத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் நேரில் சந்தித்து வாழத்து தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பிரதமர் திரு நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதுதில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் சந்தித்து, 15ஆவது இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்து, தமிழ்நாட்டில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த “Home of Chess” என்ற புத்தகத்தை வழங்கினார். அரசு முறைப் பயணமாக புதுதில்லிக்கு வருகை தந்த தமிழகத்தின் முதலமைச்சரை புதுதில்லி விமான நிலையத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள். டி.ஆர்.பாலு, கனிமொழி கருணாநிதி,. ஆ.ராசா, தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி . ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி வகைகளையும் சிறுதானிய வகைகளையும் கொண்டு 'கூலங்குவித்த கூலவீதியும்' எனச் சிலப்பதிகாரம் சிறப்பித்துப் பாடும் வளம் நிறைந்தது தமிழ் நிலம்! புதுதில்லியில் இன்று குடியரசுத் தலைவரையும், குடியரசுத் துணைத்தலைவரையும், பிரதமரையும் சந்தித்து தமிழ் மண்ணின் மரபார்ந்த அரிசி மற்றும் சிறுதானிய வகைகளின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தினை அன்பளிப்பாக வழங்கினார்.
புதுதில்லியில் பிரதமரை முதலமைச்சர் சந்தித்த நிலையில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்து, தமிழகத்தின் பாரம்பரிய தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். மேலும்
புதுதில்லியிலுள்ள அறிஞர் அண்ணா - கலைஞர் அறிவாலயத்திற்கு முதலமைச்சர் சென்று, முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினார்.
கருத்துகள்