அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கையில் திரிசூலம் – ஒரு காலை உயர்த்தி, ஒரு காலை இறக்கி அமர்ந்த நிலையில் வேகம். கண்களில் உக்கிரத்துடன் காட்சிதரும் அம்மனுக்குப் பின்னணி வரலாறு 18 ஆம் நூற்றாண்டில் துவங்கும்.
சிவகங்கைச் சமஸ்தானத்தின் மன்னர், முத்து வடுகநாதர் எனும் பெரிய உடையனத் தேவரைக் கொலை செய்ய நேரம் பார்த்துக் காத்திருக்கும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிப் படைத் தளபதி கா்னல் ஜோசப் ஸ்மித் காளையார் கோவில் மதில் சுவர் பகுதியில் ஒளிந்திருந்த போது உள்ளே நுழைந்த மன்னர் முத்து வடுகநாதர் எனும் உடையனத்தேவரையும் அவரது இரண்டாவது மனைவி கௌரி நாச்சியாரையும்
துப்பாக்கியால் ஸ்மித் சுட்ட நிலையில் உயிர் துறந்த மன்னரும் அவரது இரண்டாவது மனைவியும் 1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதியில். முத்து உடையத்தேவரின் முதல் மனைவியான வேலுநாச்சியார், தனது தளபதியும் பிரதானிகளுமானன மருது சகோதரர்களுடன் காளையார் கோவிலுக்கு வந்து கணவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து நாட்டரசன்கோட்டைக்குக் கிளம்புகிறார். அரியாக்குறிச்சி காட்டு வழியில், ஆங்கிலேயப் படை வேலு நாச்சியாரைப் பிடிக்கத் துரத்துகிறது. விரைந்து கீரனூா் கண்மாய்க்கரையைப் படை பரிவாரங்களுடன் தாண்டி விடுகிறார் ராணியார் அதை அறிந்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிப்படை வருகிறது.
காட்டிற்குள் அய்யனார் கோவில் முன்பாக மாடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணைப் பார்த்ததும் நின்று வினவியது
“இந்தப்பக்கம் வேலுநாச்சியார் படை போனதைப் பார்த்தாயா? எந்தப் பக்கம் போனார்கள் கூறு ?” அந்தப் பெண் பார்வையில் பயமோ, மிரட்சியோ இல்லாமல, போன திசை தெரியும். ஆனால் சொல்ல முடியாது”எனப் பதில்
வந்த படைக்குக் கோபம் வாள் கொண்டு ஆங்கிலேயப் படை வீரனின் ஒரே வீச்சு தலை தனியான காரணமாக. உடையாள் என்கிற அந்தப் பெண் வெட்டுபட்டதும் ‘வெட்டுடையாள்' அன்று துவங்கி நாடு காக்கும் காவல் தெய்வமாக ‘அம்மன்’அருள் மிகு வெட்டுடையார் காளியம்மன். அதன் பின்னர்
எட்டு வருடங்கள் ஓடின மைசூர் மன்னர் ஹைதர் அலி, அவரது தளபதி திப்பு சுல்தான் உதவியுடன் சிவகங்கைச் சீமையை மீட்டாா்கள் மருத்துவர்கள் மற்றும் இராணி வீரமங்கை வேலுநாச்சியார். அரசியான பின்னர் தனக்காக வெட்டுடையாள் வெட்டுண்ட இடத்திற்குச் சென்றார்.
அங்கு தெய்வாமாய் வரம் வழங்கும் சத்தியம் காகக நீதி வழங்கும் தேவதையாக அருள் கொண்ட வெட்டுடையாள் விளங்குவதை வேலு நாச்சியாரிடம் சொல்கிறார்கள் மருது சகோதரர்கள் கேட்டதும் இராணி வேலு நாச்சியாருக்கும் மகிழ்ச்சி. உடனே அந்தக் கோவிலுக்கு பூசாரிகளாக கருப்பு வேளார், காாி வேளார் என இருவரை இராணியார் நியமித்தார் தன்னுடைய காணிக்கையாக தன் வைரத் தாலியைச் செலுத்தி வணங்கினார்.
அதர்மத்தை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கான தெய்வீகமான இன்னும் இன்றும் அடையாளமாக சமஸ்தானத்தின் காவல் தெய்வமாக நிற்கிறாள் அருளும் வெட்டுடையாள் தேவி அம்மன்.
மனதில் இருக்கும் கஷ்டத்தோடு நேரில் இங்கு வந்து, மனப்பாரத்தை இறக்குகிறார்கள் பக்தர்கள் தீராத நோய்களுக்கு வேண்டிக்கொள்கிறார்கள் வியாபார நஷ்டம் குழந்தைப்பேறு இல்லா நிலை எல்லாவற்றிற்கும் இங்கே வந்து வேண்டிக்கொண்டு நிறைவேறியதும் நேர்த்திக் கடன் செலுத்தும் மக்களுக்கு
“எப்படியாவது நீதி வழங்குவாள் வெட்டுடையாள்” என்ற நம்பிக்கை இருப்பதால், நீதிக்காக பல ஏழைகள் நீதிமன்றம் முறையிட இயலாமல் இங்கு காசு வெட்டிப் போடும் பாங்கு அனா காலம் முதல்
10 பைசா காலத்திலிருந்து , ஐம்பது பைசா பின்னர் ஒரு ரூபாய் வெட்டுடையாளுக்கு நேர்ந்து கொண்டு வெட்டினால் சம்பந்தப்பட்ட எதிரியை நீதி கேட்டு பழி தண்டிக்கும் அம்மன் என்று ஒரு நம்பிக்கை அணைத்து மக்களிடம் உள்ளது.
அநீதியை, மோசடியை நீதிமன்றம் சென்று வரும் நிலை மாதிரி நேரே இங்கு வந்து காசு வெட்டுகிறார்கள்.
வெட்டுடையாள் முன்பு சில வழக்குகளும் நடப்பதுண்டு. வழக்கு சம்பந்தப்பட்ட இரு கோஷ்டியினரும் சூடத்துடன் வந்து அம்மன் முன் சூடத்தைக் கொளுத்திக் கையால் அணைக்கச் சொல்கிறார்கள். அவுங்கப் போன திசை தெரியும். ஆனா சொல்ல மாட்டேன்”
அந்த வாக்கு நாடு காக்கும் காவல் தெய்வம் தற்போது அருள் தரும் ஆலயத்தில் ஆடி மாதம் திருவிழா சிறப்பாக நடந்தது
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் கொல்லங்குடி அறியாகுறிச்சி ஆலயத்தில் நுழைந்ததும் ஆங்காரத்துடன் வெட்டுடையாள் காளியம்மன். காலடியில் பழிவாங்கப்படும் ஒருவன். திரிசூலம், கழுத்தைச் சுற்றி நிறைந்திருக்கும் எலுமிச்சம்பழத்தால் மாலைகள்.
காசு வெட்டிப் போட்டு வேண்டியது நிறைவேறிய நிலையில் தங்கம், வெள்ளியிலான சிறு பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.தினமும் நான்குகால பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு திறக்கும் கோவிலை, மாலை 6 மணி வரை தரிசனம்
கோவிலுக்குள் வெட்டுடைய அய்யனார், சோனைக் கருப்பசாமி எனும் பரிகார தேவதைகள் உட்பட கிழக்கு நோக்கியிருக்கிற அய்யனார் முகத்தில் சூரியோதயத்தின் போது வெயில் சிறு சதுரமாக வந்து போகும் . மாலை மறையும்போது மேற்கு நோக்கி இருக்கிற வெட்டுடையாள் தேவி முகத்தில் வந்து போகும் வெயில் கீற்று.
தீர்ப்பு கூறும் முன்பாக சில நீதிபதிகளும் வணங்கும் தேவதை அம்மா ஆலயத்தில் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொடியேற்றம்.
துவங்கி 10 நாட்கள் ஊரே களைகட்ட நடக்கும் திருவிழா. அணைத்து ஜாதி மதம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வணங்கும் விழா.
ஆடி மாதம் 19 ஆம் தேதி பூச்சொரிதல் விழா பிரமாண்டமாக நடந்தது நவராத்திரியில் விஜயதசமி அன்று குதிரை வாகனத்தில் வரும் வெட்டுடையார் காளி அம்மனை வழிபட செவ்வாய்க்கிழமை, மற்றும் வெள்ளியன்று மட்டும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வருகிறது.
கோவிலுக்குப் பக்கவாட்டில், நீண்ட அரிவாளுடன் கற்சிலைகளாக அமர்ந்திருக்கிறார்கள் வெட்டுடையாளுக்குப் பூசாரிகளாக நியமிக்கப்பட்ட இரு குலாலர் வழி வந்த வேளார்கள்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய மக்கள் என்று பாகுபாடில்லாமல் பலரும் வருகிறார்கள். காரணம் தனக்கு எப்படியும் நீதி கிடைக்கும் என்று மக்கள் மனதில் பதிந்து கிடக்கும் நம்பிக்கை தான்.சிவகங்கை காளையார் கோவில் செல்லும் சாலையில் இடையே பத்தாவது கி.மீ தொலைவில் உள்ளது அணைவரும் பணிந்து சென்று வணங்கி வாரீர் ! பொய்யில்லை கண்ட உண்மை.
கருத்துகள்