வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகாவில் அம்பலூர் அஜித் (வயது 25) அரசு (வயது 26). இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு அம்பலூர் கிராமத் தலையாரியான வருவாய் கிராம உதவியாளர் கஸ்தூரியிடம்
மாதம் மாமூல் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அந்தப் பகுதியிலுள்ள பாலாற்றில் மணல் அள்ளிக்கடத்தி அதை வியாபாரம் செய்துள்ள நிலையில், மணல் வியாபாரம் துவங்கிய பத்து நாட்களில் இவர்களுக்குச் சொந்தமான மணல் கடத்தல் வாகனத்தை, கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சிறைப் பிடித்து வைத்து ரூபாய் 50 ஆயிரம் தங்களுக்கும் தரும்படி கேட்டதில் அதற்கு உடன்படாத திருட்டு மணல் கடத்தல்காரர்கள் முடிவில் இறுதியாக ரூபாய் 25 ஆயிரம் மாமூல் தருவதாக ஒப்புக்கொண்டு முதல் தவனையாக ரூபாய் பத்தாயிரத்தைக் கொடுத்துள்ளனர் அந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட பஞ்சாயத்து நபர்கள் கிராம உதவியாளர் தலையாரி கஸ்தூரி,
மீதமுள்ள பதினைந்தாயிரம் ரூபாய்காக மணல் கடத்தல்காரர்களின் செல்போனை அடமானமாக வைத்துக் கொண்டதாகவும். அதனால், ஆத்திரமடைந்த திருட்டு மணல் கடத்தல்காரர்கள், மேலும் பதினைந்தாயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு செல்போனை மீட்ட நிலையில் பணம் கொடுத்ததை தங்களது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதை. அறிந்த தலையாரி கஸ்தூரி திருட்டு மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரை தனது இரு சக்கர வாகனத்தில் அமரவைத்து பணத்தை பெற வைத்து சிறிது தூரம் சென்றதும் பணத்தை அவரிடமிருந்து கஸ்தூரி
முன் எச்சரிக்கை காரணமாக பெற்றுக்கொண்டதாகவும். கூறப்படுவது குறித்த தகவல் அறிந்த தலையாரி கஸ்தூரி மகன்கள் இருவர், திருட்டு மணல் கடத்தல்காரர்களை புத்துகோவில் பகுதியில் நேற்றிரவு நேரில் சந்தித்து தலையாரி கஸ்தூரி லஞ்சம் வாங்கிய வீடியோ பதிவைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட வாக்குவாதம் முற்றியதில் அது கைகலப்பாக மாறியதில் தலையாரி கஸ்தூரியின் மகன்கள் இருவரும் திருட்டு மணல் கடத்தல் நபர்கள் அரசு மற்றும் அஜித் இருவரையும் பலமாக தாக்குதல் நடத்தி மண்டையை உடைத்துள்ளனர். நிலைகுலைந்து மயங்கி விழுந்து ரத்தமாக இருந்த இருவரையும் அந்தப்பகுதியினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
திருட்டு மணல் கடத்தல்காரர்கள் பதிலுக்கு த் தாக்கியதில் தலையாரி மகன்கள் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தகவலறிந்த அம்பலூர் காவல் துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கிராம தலையாரி கஸ்தூரி மணல் கடத்தலைச் சேர்ந்த நபரிடம் பணம் பெற்றுக்கொண்ட காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது காரணமாகஅதனைத் தொடர்ந்து வாணியம்பாடி வருவாய் வட்டாட்சியர் சம்பத், மணல் கொள்ளையர்களிடம் மாதம் மாதம் மாமூலாக லஞ்சம் வாங்கிய தலையாரி கஸ்தூரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்
கருத்துகள்