முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் தனுஷின் மகிழ்ச்சியின் பின்னணி சிக்கலில் நடிகர் ரஜினிகாந்த்

2022 ஜனவரி மாதம் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை  அவருடைய கணவர் நடிகர் தனுஷ் இருவரும், 17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக அறிவித்தனர்.


இதன் பின்பு இவர்கள் பிரிவை  ஏற்றுக்கொள்ளாத நடிகர் ரஜினிகாந்த், இந்த விவகாரத்தில் தன்னுடைய குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விருப்பத்திற்கு மீண்டும் பிரிந்த தம்பதியினரை இணைந்து வைக்கும் முயற்சியில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஆனால் நடிகர் தனுஷ் திட்டவட்டமாக மறுத்ததாகத் தெரிகிறது. நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவைப் பிரிந்த பின்னர் தொடர்ந்து சினிமாவில் சோதனை மேல் சோதனையைச் சந்தித்தார். அவருடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்,

பாடலாசிரியர், கதையாசிரியர்கள் என ஒவ்வொருவராக பாதியில் விலகிக்

கொண்டனர்.அதாவது அதன் பின்புலம் பெரிது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகாவிலுள்ள பம்மனேந்தல் கிராமத்தில் நடுத்தரமான குடும்பத்தில் பிறந்தவர் அன்புச்செழியன். வறண்ட பூமியில் போதிய வேலை வாய்ப்பில்லாத காரணத்தினால் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்த அன்புச் செழியன் தனது ஊரைச் சார்ந்த சிலர் ஒரு சில அரசியல்வாதிகளின் ஆதரவோடு மதுரையில் லாபகரமாக கந்து வட்டித் தொழில் செய்து வந்ததைப் பார்த்தார்.

அதையடுத்து, தன்னிடமிருந்த ஒரு சில ஆயிரங்களோடு அவர் 1994 ஆம் ஆண்டு மதுரைக்கு வந்தவர் சிறு வியாபாரிகளுக்கு முதலில் வட்டிக்குப் பணம் கொடுக்க தொடங்கினார். சிறிய முதலீட்டிலேயே குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்க ஆரம்பித்தது. அப்போது ஒரு சிலர் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்து அதிக லாபம் பெறுவதைக் கண்டார். அவர்களது வட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் திரைப்பட வினியோகஸ்தர்கள் பலருக்கு பணம் கொடுத்து பின்னர் அன்புச்செழியன் 2000 ம் ஆண்டில் திரைப்படத்துறையில் பெரிய ஃபைனான்சியராக அறிமுகமானார்.



தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களிடம் நிதியுதவியைப் பெற பல கட்டுப்பாடுகள் இருந்த நிலையில். பல தருணங்களில் பணத்தை ரொக்கமாகத் தராமல், வங்கியில் செலுத்துவோம் என்றும் கூறிவந்தனர்.  ஆனால், அன்புச்செழியனிடம் பணம் எளிதில் கிடைத்தது. கேட்டவுடன் ரொக்கமாகவும் கடன்களைத் தந்துள்ளார். இதனால், தமிழ் சினிமாவிலிருந்த தயாரிப்பாளர்கள், வட மாநில ஃபைனான்சியர்களுக்குப் பதிலாக அன்புச்செழியனை நாடத்துவங்கினர். 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆளும் கட்சியினரின் ஆதரவும் கிடைத்ததால், மிக வேகமாக வளரத் துவங்கினார். இவருக்குத் துணையாக அவருடைய சகோதரர் அழகரும் இணைந்து செயல்பட்டார். தயாரிப்பாளர்களுக்கு பணத்தைக் கொடுக்கும் போது அன்புச்செழியன் பெரிதாக கேள்விகள் கேட்கமாட்டார், மிக மரியாதையாக நடந்துகொள்வார் என்றாலும், கொடுத்த பணம் திரும்ப வராவிட்டால், அவருடைய கடுமையான முகத்தை பார்க்க நேரிடும்.

ஆரம்ப காலத்தில் தான் கடன் கொடுத்த தொகைக்கு குறைந்த வட்டியே பெற்று வந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியைத் தராவிட்டால் வட்டியின் அளவும் மடங்கும் வேகமாக அதிகரிக்கும் என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத, அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.


"தமிழ்நாட்டில் தற்போது எந்த படம் வெளியாக வேண்டும் என்றாலும் அதில் அன்புச்செழியன் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இன்று பல கோடிகளை தமிழ் திரையுலகில் முதலீடு செய்திருக்கிறார் அவர். இந்தப் பணத்தில் அவரது சொந்தப் பணம் மட்டுமல்லாது, தொழிலதிபர்கள், ஒரு சில அரசியல் புள்ளிகளின் பணமும் இருக்கிறது. ஆகவே, அரசியல் புள்ளிகளும் அவருக்கு அரணாக இருப்பார்கள். ஒரு கட்சியோடு நெருக்கமாக இருந்தாலும், எந்தக் கட்சியையும் பகைத்துக்கொள்ள மாட்டார்" என்கிறார் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஒருவர்.

அதே நேரத்தில் இவரால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. உதாரணமாக சுந்தரா ட்ராவல்ஸ் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் என்பவர் தான் வாங்கிய 20 லட்ச ரூபாய் கடனுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை எழுதி கொடுக்க வேண்டியிருந்தது. இது தொடர்பாக தங்கராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்புச்செழியன் 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.இயக்குனர் லிங்குசாமியிடம் அவர் தயாரித்த 'ரஜினி முருகன்' படத்தின் லாபம் முழுவதையும் எழுதி வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமாரின் தற்கொலைக்கும் அன்புச் செழியனே காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அன்புச் செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் தொடர்ச்சியான நடவடிக்கை இல்லை என்பதுபோக, அரசியலில் உயர் மட்டங்களில் இருப்பவர்களோடு தொடர்ந்து நல்லுறவைப் பேணுவது இவரை சக்தி வாய்ந்த நபராகவே நீடிக்கச் செய்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டிலும் 2020 ஆம் ஆண்டிலும் பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை செய்தனா். 2020 ஆம் ஆண்டு நடந்த சோதனையில் கணக்கில் வராத தொகையாக சுமார் 65 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் தான் இப்போது மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று இருக்கிறது. ஃபைனான்ஸ் செய்வது போக, கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் ஆண்டவன் கட்டளை, வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது உள்ளிட்ட படங்களையும் அன்புச் செழியன் தயாரித்துள்ளார். உத்தமவில்லன், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு பிரபல படங்களின் தயாரிப்புகளுக்கு கடனுதவி செய்துள்ளார்.

இவர் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரினை தொடர்ந்து சென்னை, மதுரை மாவட்டங்களில் அன்புசெழியன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில தினம் முன்  தற்போது மூன்று நாள் சோதனை மேற்கொண்டனர்.

மதுரையில் அன்புச்செழியன், அவரது மகள் சுஷ்மிதா, இளைய சகோதரர் அழகர் ஆகியோர் தொடர்புடைய வீடுகள், தெற்குமாசி வீதியில் உள்ள அலுவலகம், செல்லூரில் உள்ள திரையரங்கம், மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள ஹோட்டல் என சுமார் 30 இடங்களில் 50 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செரியனிடம் நெருக்கமாக இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர், அன்புச் செழியன் மூலம் தனுசுக்கு சினிமாவில் மறைமுகமாக பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். தனுஷ் நடிக்கும் படங்களுக்கு பைனான்ஸ் செய்ய மாட்டேன், தனுஷ் நடிக்கும் படங்களை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு கடன் கொடுப்பதில்லை என மறைமுகமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் அன்புச் செழியன்.

இது தனுஷ் நடிக்கும் படங்களில் மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இது போன்ற செயலுக்கு பின்னணியில் நடிகர் ரஜினிகாந்த்  மனைவி லதா ரஜினிகாந்த், மற்றும் அவருடைய மகள்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. நடிகர் தனுசுக்கு பல்வேறு நெருக்கடியை கொடுத்து அவரை தங்களிடம் சரணடைய செய்ய வைத்து, தங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினரின் திட்டமாக இருந்துள்ளது.

இதன் காரணமாகத்தான் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வராத நிலையில், இந்த படம் திரைக்கு வர முடியாமல் நேரடியாக OTT யில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவியை விட்டு பிரிந்த பின்பு சினிமாவில் பல்வேறு சோதனைகளையும், சந்தித்து வந்த நடிகர் தனுஷ்

தற்பொழுது புத்துணர்ச்சி பெற்றுள்ளார்.சமீபத்தில் தனக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வந்த அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ஐ டி ரெய்டு காரணமாக அன்புசெழியன் தொழில் மொத்தமும் முடங்கியுள்ளது. மேலும் ரஜினிகாந்த் குடும்பத்தினர் அன்புச்செழியனிடம் முதலீடு செய்த பணமும்

ஐடி ரெய்டில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்களுடைய பணத்தையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முக்கியப் புள்ளிகளின் உதவிகளைத் தேடி ரஜினிகாந்த் தற்போது அலைந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர். நடிகர் தனுஷ்க்கு எதிராக அன்புச்செழியனை வைத்து ஆட்டம் காண்பித்த ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு அன்புச்செழியன் வாயிலாகவே தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.அதில் அன்புச் செழியனிடம் கோடிக்கணக்கான தன்னுடைய பணத்தை ,

நடிகர் ரஜினிகாந்த் கொடுத்து வைத்திருந்ததாகவும் தற்போது நடைபெற்ற வருமான வரித்துறையில் ரஜினிகாந்த் பணம் பெருந்தொகை வருமான வரித்துறை கையில் சிக்கி உள்ளதால் அவசர அவசரமாக டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த். அங்கே சில முக்கியத் தலைவர்களைச் சந்தித்த அடுத்த சில மணி நேரங்களில் தமிழக ஆளுநரையும் சந்தித்துள்ளார் என்று பிரபல ஊடகம் ஒன்று

பெயர் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளதனால் நடிகர் ரஜினிகாந்த் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் டெல்லிக்கும் பறந்து முக்கிய புள்ளிகளைச் சந்தித்த அடுத்த சில மணி நேரங்களில் தமிழகம் திரும்பி வந்த நிலையில் 

ஆளுநரைச் சந்தித்தார் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற பரபரப்பான வருமானவரித்துறை சோதனைக்கு மத்தியில், திடீரென டெல்லி சென்று அடுத்த சில மணி நேரங்களில் தமிழகம் திரும்பி ஆளுநரைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த். வழக்கம் போல் தமிழக மக்களை மிகப்பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நடிகர் தனுஷ் மொத்தக் குடும்பமும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நீண்ட இடைவேளைக்கு பின்பு தனுஷ் முகத்தில் ஒரு மகிழ்ச்சிக்கலைகட்டிக் காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் தான் வாழ்க்கை என மறைமுகமாக தனக்கு எதிராக சதி செய்த நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு அட்வைஸ் செய்யும் நோக்கில் தான் தனுஷ் பேசினார் எனக் கூறப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...