எஸ்எஸ்எல்வி மூலம் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது - இஸ்ரோ தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எஸ்எஸ்எல்வி மூலம் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது - இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ்.சோம்நாத் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புவி கண்காணிப்பிற்காக எஸ் எஸ் எல் பி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இஓஎஸ்-02, ஆசாதிசாட் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ் சோம்நாத் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், எஸ்எஸ்எல்வி மூலம் சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த ஏதுவாக வர்த்தக ரீதியில் அதை இஸ்ரோ தயாரித்தது. அதுதான் இன்றைக்கு வேகமாக வளர்ந்து வரும் புதிய தலைமுறை தொழில்நுட்பமும் ஆகும். அந்த வகையில் தயாரிக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி செலுத்து வாகனம் 2 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் இன்று காலை 09.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. சிறப்பாக சீறிப் பாய்ந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூன்று நிலைகளை சிறப்பாகக் கடந்து 2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. எனினும் நாங்கள் ஏற்கெனவே நிர்ணயித்திருந்த சுற்றுவட்டப் பாதையில் அந்த இரண்டு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படவில்லை. போதுமான உயரம் எட்டப்படவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அதனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அந்த இரண்டு செயற்கைக்கோள்களிலும் உணர்கருவி (சென்சார்) தொழில்நுட்பம் சரியாக இயங்கவில்லை என்பதை முதல் கட்டமாக கண்டறிந்துள்ளோம்.
இவை தவிர வேறு எந்த விதமான தொழில்நுட்பக் கோளாறும் கண்டறியப்படவில்லை. எனினும் இது தொடர்பாக ஆராய தனிக்குழு அமைத்து ஏன் இந்த உணர்கருவி தொழில்நுட்பக் கோளாறு (சென்சார்) ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதோடு இந்த நிமிடம் முதல் அடுத்தக் கட்டத்திற்கு தயாராக ஏதுவாக புதிய மேம்படுத்தப்பட்ட பரிந்துரைகளை அந்தக் குழு அளிக்கும். அதனடிப்படையில் எஸ்எஸ்எல்வி டி-2 மூலம் புதிய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும். அதோடு இத்தகைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அந்த காணொலிப் பதிவில் சோம்நாத் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று காலையில் ஏவிய இரு செயற்கைக்கோள்களும் செயலிழந்ததாக இஸ்ரோ அறிவிப்பு
கருத்துகள்