சுதந்திர தினத்தன்று கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ரத்த தான முகாம்
விடுதலையின் 75-ஆம் ஆண்டு அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சுதந்திர தினத்தன்று காலை 8.30 மணியளவில் ரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் ரத்த வங்கியைச் சேர்ந்த மூத்த தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. தமிழ்மணி தலைமையிலான மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஊழியர்கள், பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள், சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா சங்கதன் அலுவலகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், இதர கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஊழியர்கள், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
பொதுமக்களும் ரத்த தானம் செய்ய முன்வருமாறு இந்திய தொழில்நுட்பக் கழக கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் டாக்டர் எம் மாணிக்கசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்