நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இளம் வல்லுநர்களுக்கு “மாபெரும்
வெங்காய சவால்” போட்டி
வெங்காய அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைக்க, “மாபெரும் வெங்காய சவால்” போட்டியில் பங்கேற்குமாறு, உயர்கல்வி நிறுவனங்கள் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திரு ரோஹித் குமார் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில், நடைபெற்ற காணொலி கலந்துரையாடலில் பேசிய அவர், இது போன்ற போட்டியில் பங்கேற்பதன் மூலம், குறைந்த செலவில், எளிதில் பின்பற்றக் கூடிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க முடியும் என்றார். இத்தகைய தீர்வுகள்நாட்டில் நீண்ட காலத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தக் கூடியதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 15.10.2022க்குள் தங்களது கருத்துக்களை அனுப்பிவைக்கலாம். இது பற்றிய முழு விவரங்களுக்கு நுகவோர் விவகாரங்கள் துறையின் doca.gov.in/goi என்ற வலைதளத்தைக் காணவும்
கருத்துகள்