சபஹர் தினம் கடைபிடிப்பு. சபஹர்-சர்வதேச வடக்கு- தெற்கு போக்குவரத்து வழித்தடத்துடனான இணைப்பு- மத்திய ஆசிய சந்தைகளை இணைப்பதைக் குறிக்கும்
சபஹர் தினத்தை மும்பையில் இந்தியா போர்ட்ஸ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகம் இன்று கடைபிடித்தது. ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகளைச் சென்றடையவும், மத்திய ஆசிய சந்தைகளில் நுழையவும், ஏற்றுமதி, இறக்குமதியின் போது ஏற்படும் காலதாமதத்தைக் குறைப்பதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை தான் சர்வதேச வடக்கு- தெற்கு போக்குவரத்து வழித்தடம். ஈரானில் அமைந்துள்ள சபஹர் துறைமுகம் அந்த பிராந்தியத்திற்கும் குறிப்பாக மத்திய ஆசியாவிற்கும் வணிக போக்குவரத்து மையமாக விளங்குகிறது.மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
விழாவில் பேசிய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், சபஹரில் உள்ள ஷாஹித் பெஹெஸ்டி துறைமுகத்தை ஒரு போக்குவரத்து முனையமாக மாற்றுவதும், மத்திய ஆசிய நாடுகளைச் சென்றடைய வடக்கு- தெற்கு போக்குவரத்து வழித்தடத்துடன் இணைப்பதும் எங்கள் நோக்கம் என்று கூறினார். இந்தியாவில் இருந்து ஈரான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு பொருட்களை எடுத்துச் செல்ல தேவைப்படும் நேரத்தை குறைக்க, குறைந்த செலவில், விரைவாக எடுத்துச் செல்வதற்கு குறுகிய மற்றும் நம்பகத்தன்மையான வழிதடத்தை பரிந்துரை செய்ய பிரதிநிதிகளும், பங்குதாரர்களும் முன்வருமாறு அவர் கோரிக்கைவிடுத்தார்.
கருத்துகள்