சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகாவில் பழங்கால நாணயங்கள்
கண்டனிக்கரை, பகையஞ்சான், இலந்தக்கரை, வேலாரேந்தல், கூத்தனி, பாளையேந்தல், தவளிமண்டபம், கிராம்புளி, நல்லேந்தல், மாராத்தூர், பீக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பழங்காலப் பொருட்கள் ஏராளமாக கிடைப்பதாகவும்.
நாட்டாறு கால்வாய் கரையில் மேற்கண்ட ஊர்கள் அமைந்துள்ளது . நாட்டாறு ஒரு காலத்தில் மிகப்பெரிய ஆறாக இருந்திருக்கலாம், தற்போது சிறிய கால்வாயாக மாறிச் செல்கிறது. இப்பகுதிகளில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வு மேற்கொண்டு அரிய பொருட்களைச் சேகரித்து வரும் வரலாற்று ஆர்வலர் ஜெமினி ரமேஷ், இலந்தக்கரைக் கிராமத்தில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நாணயங்களைக் கண்டெடுத்துள்ளார். அவை,
முதல் நாணயம் 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியா நாட்டின் தங்க நாணயம். கள ஆய்வில் கண்டுபிடித்தது
இரண்டாம் நாணயம் - 2000 ஆண்டுக்கு முந்தைய மகதப் பேரரசின் வெள்ளி முத்திரை நாணயம்.
மூன்றாம் நாணயம் - ரோமானியர்களின் செம்பு நாணயங்கள் - ஆகியன அகழாய்வில் கிடைத்தது.
நான்காவது நாணயம் - சோழப் பேரரசர் இராஜ இராஜ சோழன் காலத்து நாணயங்கள் -இதுவும் கள ஆய்வில் கண்டுபிடித்தது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் வழி நடத்துகின்ற, இளந்தகரைச் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நமது தமிழகத்தின் பண்டைய நாகரிகத்தின் தொண்மையின் வெளிப்பாடாகப் பார்க்கலாம்.
கருத்துகள்