முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசை இருக்கு அரசனாக..! ஆனால் விதி இருக்கு வீதியில் வெள்ளாடு மேய்க்க எனும் பழமொழி போல எடப்பாடி பழனிச்சாமிக்கு இது சத்திய சோதனைக் காலம்

 கிராமத்திலொரு பழமொழி வழக்கிலுண்டு "ஆசை இருக்கு அரசனாக.! ஆனால் விதி இருக்கு வீதியில் வெள்ளாடு மேய்க்க!"


என்ற நிலையில். இதை மாற்றி வேறு விதமாகவும் பேசுவோருண்டு அது தான் தற்போது எடப்பாடி கே.பழனிச்சாமிக்கும் பொருந்தும்


அதாவது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலையில் பின்னர் இருவரும் கைவிட்டு பணம் பவுசிழந்த நிலையில் தான் இப்போது தடுமாற்றம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வந்து விட்டது என நினைத்ததன் காரணமாக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் இப்போது இரண்டும் பறிபோகும் நிலையில் உறுப்பினர் நிலைக்கு

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சிலுவம் பாளையம் கிராமத்தில்

அரசியல் பயணம் புறப்பட்ட இடத்திற்கே வந்து அவரது அரசியல் பரமபத விளையாட்டாகிப் போனதென்றே அரசியல் அறிந்த அணைவராலும் தற்போது பேசப்படுகிறார்.   சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதியரசர் ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பின் மூலம் 

23 ஜூன் 2022 ஆம் தேதியன்று கூட்டிய பொதுக்குழுவிற்கு முந்தைய நிலையே தொடருமென்பதும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்தே முடிவெடுக்க வேண்டுமென்றும் உத்தரவில் கூறியுள்ளார்.

அதற்கு முக்கியமான காரணம். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உட்கட்சித் தேர்தல்.

ஒரு வாக்கு, இரண்டு பதவிகள் என்ற உட்பூட்டுத் தன்மை கொண்ட தேர்தல். மேலேயுள்ள யாரோ ஒரு அறிஞர் வசமாக இப்படி ஒரு சட்ட வரைவைத் தயாரித்துத் தந்திருக்கிறார்கள். மார்கழி மாதம் என்றால் இன்னொன்றும் நடக்கும். தெருவில் நாய்கள் இணை சேர்தல் பின் விலக இயலாத தனியாகப் போராடும் நிலையில் தான் அந்தத் தேர்தல் முறையும் அமைந்தது

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. இதை வானகரம்  ஸ்ரீ வாரி மண்டபத்தின் மேடையிலும் நிருபித்தார் எடப்பாடி. கே.பழனிச்சாமி பொதுக்குழு நடக்கும் பகுதியை உள்ளடக்கிய திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் முன்னால் அமைச்சரான ப.பெஞ்சமின். அவர் பெரிய மாலையை   எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அணிவிக்க முயன்ற போது அவர் காட்டிய முகம் அணைவருக்கும் நினைவிருக்கும் உங்களுக்கும் தான் . அதன் பின்னணியை பார்த்தால் "நீ எப்படி ஓ.பன்னீர் செல்வத்தை இங்கு வர விடலாம். உனக்குத் தரப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை"!. என்பதற்குக் காட்டிய எதிர் வினை.தான் அந்த வெளிப்பாடு.


பல்லாயிரம் கோடிகளை வீசி இறைத்து இழந்த பின்னரும் தனது கட்சிப் பதவியைப் பிடிக்கும் பாதையில் தாமரைகளைத் தூவி இருப்பார்கள். தாம் நடந்து விடலாம் என்ற நினைப்பில், அதே உதிர் தாமரை மலர்களால் சறுக்கி விழுந்திருக்கிறார்.

அதை ஊடகங்களுக்கு வேறு ஒரு நிகழ்வு மூலம் பேட்டியளித்த தமிழகத்தின் சபாநாயகர் குறிப்பிட்டது போல அதிமுக தற்போது நான்காகப் பிளவு பட்டுள்ளது. திமுக அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்பதே. சில உண்மைகள் அறியாத நிலையில் தடுமாறி நிற்கும் அதிமுக தொண்டர்களுக்கு தற்போதுள்ள கள நிலவரத்தை அவரே எடுத்து வைத்தார்.

அதிமுக அடிமட்டத்திலிருக்கும் தொண்டர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் வரிகள் தான் அது.

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இணைந்து  பணியாற்ற இணை ஒருங்கிணைப்பாளருக்கு தீர்ப்பின் படி ஒருங்கிணைப்பாளர் அழைப்புக் கொடுத்தும் அவர் வரவில்லை.

ஏற்கெனவே இணை ஒருங்கிணைப்பாளர் ராஜினாமா செய்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளும்படி ,

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு  ஒருங்கிணைப்பாளர் கடிதம் அனுப்புவதாகத் தகவல். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி கே. பழனிச்சாமி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு தற்போது எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் சசிகலா நடராஜனை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி கே.பழனிச்சாமியும் இணைந்தனர்.


அது குறித்து தேர்தல் ஆணையத்திற்குக் கடிதமெழுதினர். அப்போது கட்சியை வழிநடத்திச் செல்லும் வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என  பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. ஜெ.ஜெயலலிதா மட்டுமே நிரந்தரமாக பொதுச் செயலாளர் என ஏற்கனவே உள்ள நிலையில். தற்போது தேர்ந்தெடுத்த 


பொதுச்செயலாளர் என்ற பதவியை ரத்து செய்து விட்டோம். எனவே, சசிகலா நடராஜன் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினர். இந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்ட  நிலையில் ஒற்றைத் தலைமை பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்ததில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும், எடப்பாடி கே.பழனிச்சாமி இடையே குழு மோதல் உருவானது.


எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பினர்  11 ஆம் தேதி கூட்டிய பொதுக்குழுவில் எடப்பாடி கே‌.பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்தொடர்ந்து தான் வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமியே ஒரு கடிதம் எழுதினார்.

மற்றொரு கடிதத்தில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எழுதினார். அதேபோன்று, ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தொடர்ந்து நீடிப்பதாகவும், இதையே இந்திய தலைமை த் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில், பொதுக்குழு செல்லாதென்று சென்னை உயர்நீதி மன்றம் கடந்த புதன்கிழமையன்று தீர்ப்பு வழங்கியது. பொதுக்குழுவுக்கு முன்னர் அதிமுகவில் இருந்த நிலையே  தொடரும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து  இருவரும் இணைந்து செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை எடப்பாடி கே.பழனிசாமி நிராகரித்தார். அதே நேரத்தில் பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.இந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையமும் அதிமுக சார்பில் இருவரும் தனித்தனியாக அனுப்பிய கடிதத்தை சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசனை நடத்தி விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக, எடப்பாடி கே.பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணையம் கையிலெடுத்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தற்போது அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளனர். அதாவது எடப்பாடி கே.பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ததை ஏற்றுக்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதனால் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தான் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர். எடப்பாடி கே.பழனிசாமி இராஜினாமா செய்துவிட்டதாக அவரே நேரடியாக தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதம், தற்போது எடப்பாடி கே.பழனிச்சாமிக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி கே.பழனிசாமி சமரசத்தை ஏற்காததால் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் புதிதாக பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வருகிறது.

பெரியகுளத்தில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் எதையும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. முதற்கட்டமாக மாவட்டங்கள் வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார்


அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக செயல்படலாமென்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி கே. பழனிசாமி நிராகரித்தார். ஒற்றைத் தலைமை என்பது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எடுத்த முடிவு. அதன் அடிப்படையில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி கே.பழனிசாமி இப்போது கூடத் தெரிவிக்கிறார்.

 ஆனால் அவர் கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்.

இதில் பிரச்சினை ஏற்பட்டால் ஒரு பொதுவான ஆணையரை நியமிக்க நீதிமன்றத்தை நாடலாம் என  சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பால் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும், புதிதாக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளும் தற்போது செல்லாததாகிவிட்டன. இந்தத் தீர்ப்பை அடுத்து தான் கூட்டுத்தலைமையோடு மீண்டும் ஒன்று கூடுவோம், கட்சியை நடத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை எடப்பாடி கே.பழனிசாமி நிராகரித்தார். இருவரும் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என்பதையும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

அவர் மேலும் கூறும் போது, 'ஒற்றைத் தலைமை என்பது கட்சித் தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு. தி.மு.க.வுடன் தொடர்பு கொண்டவர்கள். நாங்கள் தெய்வமாகக் கருதும் ஜெ.ஜெயலலிதாவின் அறையையே உடைத்து சூறையாடியவருடன் இனி எந்தக் காலத்திலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை' என்றார் எடப்பாடி கே.பழனிச்சாமி.

ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 22- ஆம் தேதியான நாளை விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவையோ அல்லது இடைக்கால தடை உத்தரவு வரும் என எதிர்பார்த்துத் தான் கொக்கு மீன் பிடிக்க குளத்தில் காத்திருப்பது போல எடப்பாடி கே பழனிசாமியும் காத்திருக்கிறார். இச் சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்றைய தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம். அதை மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவக்குழுவும் உறுதிசெய்துவிட்டது. 75 நாள்கள் மருத்துவச் சிகிச்சையிலிருந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணத்தின் மீதான சர்ச்சையும் அப்போதே தொடங்கியது. செவ்வி.ஜெ.ஜெயலலிதா மரணமடைந்து ஐந்தாண்டுகளை நெருங்கப்போகிறது. ஆனால் அப்போது, ஜெ.ஜெயலலிதாவின் மரணமே சட்ட மன்றத் தேர்தல் பிரசாரத்தில் பேசுபொருளாக இருந்தது. முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதா அல்லது மர்ம மரணமா என்கிற விவாதத்தில் ஆரம்பித்து, மரணத்திற்குக் காரணம் யார் என்று விவாதத்தின் போக்கு மாறியது.

ஜெ.ஜெயலலிதா மரணமடைந்து பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை, ஜெ.ஜெயலலிதாவின் மரணம் குறித்து அன்று ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவின் தரப்பிலிருந்து எந்தச் சந்தேகமும் எழவில்லை. ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நடந்தது என்று அரசு தரப்பில் விளக்கமளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் மட்டுமே கூறிவந்தன. அதற்குப் பிறகு, இந்தக் கோஷம் மெள்ள மெள்ள அ.தி.மு.க-வில் இருந்த சசிகலா நடராஜன் தரப்புக்கு எதிரான அரசியல் காரணங்களால் அந்த நபர்களிடம் எதிரொலித்தது.


குறிப்பாக  கே.பி.முனுசாமி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்த சந்தேகங்களை எழுப்பத்துவங்கினர். இதன் துவக்கமே ஜெ.ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்த போது ஜெயலலிதாவை எதிர்த்து சசிகலா புஷ்பா என்பவர் மூலம் பிரச்சினை கட்சியில் துவங்கி அது வெளியே தெரியாத புகைச்சல் வரத் தொடங்கின. அதன் அரசியல் காரணங்களால் வெளியே பலர் பேசவில்லை.2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என ஒரு ஆடிட்டர் ஆலோசனை காரணமாக சசிகலா நடராஜன் மீதான கோபம் என்ற நிலையில் தொடங்கிய போது,

"ஜெ.ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டுவருவேன்" என்று அதிரடியாக அறிவித்தார். ஜெ.ஜெயலலிதா மரணத்தைப் பற்றி விசாரணை நடத்தும் ஆணையில் கையெழுத்திட்டவர்  அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமி தான் இப்போது, “தி.மு.க-வினர் ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டதால் தான் அவர் சிறைக்குச் சென்றார். ஜெயலலிதாவைப் பழிவாங்கவும் அ.தி.மு.க-வை அழிக்க வேண்மென்று நினைத்தும் தி.மு.க-வினர் மேல்முறையீடு வழக்குப் போட்டு மன உளைச்சல் கொடுத்ததாலும் அவர் உடல்நிலை மோசமடைந்து, உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் மரணத்தைத் தழுவியுள்ளார்”

என்று புதிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளார்.  ஆனால் இதில் மறைக்கப்பட்ட அரசியல் என ஒன்று மக்கள் அறியாத நிலையில் ஜெ.ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் என்ன என்பதை அறியவே ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த ஆணையத்தின் அறிக்கை வரும் முன்பே, மன உளைச்சலும் சிகிச்சை முறையாக எடுத்துக்கொள்ளாமல் போனதுமே காரணம் என்று எடப்பாடி கே.பழனிச்சாமி சொல்லியிருப்பது முரணாக அமைந்துள்ளது. 


இந்த நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆணையத்தினை அமைத்தார்கள். பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமியும் என இப்போது கூறும் நிலையில்.வெவ்வேறு அணிகளாகச் செயல்பட்டு வந்த போது மீண்டும் ஒன்றிணைவதற்காகத்தான்  இந்த ஆணையம் அமைத்துள்ளனர் போல என் நமக்கு தெரிந்த வரையில் மக்களும் அறிவார்ந்த பலர் அறிவர் . ஆனால் எட்டு முறை சம்மன் அனுப்பி அதன் பின்னர் தான் ஆஜரானார், ஓ.பன்னீர் செல்வம் ஆனால் அதுவரை ஓ.பன்னீர்செல்வம் எனக்கு ஏதுவும் தெரியாது என்று கூறியவர். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொன்னார். “முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லாமல் இருந்ததே அவரது இறப்பிற்குக் காரணமென்று சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண்டிய இடத்தில் அப்போது இருந்த அவரே  வெளிநாடு செல்லவேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் பதிவு செய்துள்ளார்.

அந்த அவர்கள் யார் ?இவர்களின் அலட்சியத்தினாலேயே ஜெ.ஜெயலலிதா இறந்துள்ளார்.அ திமுக தலைமை நிலையச்செயலாளராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமிக்குத் தெரியாமல் கடிதம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் A,B படிவங்களில் கைரேகை வைக்கவோ கையெழுத்திடவோ முடியாது.

அப்படியானால் அவரைக் கட்டாயம் இந்த ஆணையம் விசாரிக்க வேண்டும். எடப்பாடி கே.பழனிசாமியை விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனக் புகழேந்தி கூறி இருக்கிறார். ஆணையம் என்ன முடிவு செய்கிறது என்று பார்ப்போம்” என்றும் புகழேந்தி கூறியதைத் தொடர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புரியும்.  2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போதய தமிழ்நாடு முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி.ஜெ.ஜெயலலிதா சிறிது கால இடைவெளியிலேயே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு  பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உயிர் தோழி 35 ஆண்டு காலம் அவரை பாதுகாத்த சசிகலா நடராஜன் அவர்கள் குடும்பம் மூலம் பதவிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வீட்டு சமையல்காரர் ராஜம்மாள் மற்றும் கார் ஓட்டுநர் மற்றும் அலுவலக மேலாளர்  உள்ளிட்ட ஜெ.ஜெயலலிதாவுக்கு  50 ஆண்டு காலம் நெருக்கமானவர்களெனக் கருதப்பட்ட இதுவரை 15 க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் தற்போது வரை விசாரணை நிறைவடைந்து அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் விசாரணை ஆணையத்தின் விசாரணை காலம் முடிவடைந்துள்ள நிலையில்


மேலும் 3 வார காலத்திற்கு விசாரணையை நீட்டிக்க வேண்டுமென ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதனிடையே முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்தக் குழுவினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மருத்துவ நிபுணர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அதன் இறுதி அறிக்கை ஆகஸ்ட் மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக மருத்துவக் குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன் படி முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் சிகிச்சையில் எந்தத் தவறுமில்லை! என எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் கொடுத்த அறிக்கை விபரம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை அளித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் ஓ.பன்னீர் செல்வம் அளித்த 8 முக்கியமான வாக்குமூலங்களும் அதில் அடங்கும்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் தற்போது வரை விசாரணை நிறைவடைந்து அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் விசாரணை ஆணையத்தின் விசாரணை காலம் முடிவடைந்துள்ள நிலையில் மேலும் 3 வார காலத்திற்கு விசாரணையை நீட்டிக்க வேண்டுமென ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவ குழு  இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவ குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மூன்று பக்க விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவக் குழு மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான ஏழு பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் இந்த அறிக்கையை அளித்துள்ளதாகவும் அதில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவருக்கு தைராய்டு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறுமில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.     ஆணையத்தின் விசாரணைக்கு 13-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி நிறைவடைந்த. நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கூடுதலாக 3 வார கால அவகாசம் வழங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பிய பின்னர் அது நீடிக்கப்பட்டு தற்போது     

ஆணைய விசாரணை குறித்து எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் தரப்பில் தமிழக அரசிடம் கால அவகாசம் கேட்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு வழங்கிய 3 வார கால அவகாசத்தில், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வின் அறிக்கையினைப் பெற்றுள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மரணம் குறித்து தனது முழுமையான விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதில் இவர்கள் இதுவரை கூறிவந்த உயிர் தோழி சசிகலா நடராஜன் மீதான அபாண்டமான குற்றச்சாட்டு இந்த எய்ம்ஸ் அறிக்கை மூலம் பொய் என்று தெரிகிறது. அதனால் அரசியல் காரணங்களுக்காக இதுவரை நாடகமாடிய நபர்கள் யார் நம்பிக்கை நபர்கள் யார் என்று மக்கள் அறியும் காலம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விரைவில் வழங்கும் போகும் அறிக்கை அதுவே அதிமுகவுக்கு தற்போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான அக்கினி பரிச்சை.. அதன் பின்னர் தான் சில ஒருங்கிணைப்புகள் நடக்கும்.          இப்போது நமக்கு நினைவுக்கு வருவது அன்று அதிமுக நிறுவனர் டாக்டர் எம்ஜிஆர் நடித்த திரைப்படத்தின் பாடல் வரிகள் தான்  அதுவே இதன் பொது நீதி                        "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு    இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,

அன்று சிரிப்பது யார், அழுவது யார், தெரியும் அப்போது

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி

பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி

மனிதன் என்ற போர்வையில்,மிருகம் வாழும் நாட்டிலே

நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ..

நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?

அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா?

உண்மைதன்னை ஊமையாக்கித் தலைகுனிய வைப்பதா!?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ

அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..


நான் ஒரு கை பார்க்கிறேன்  நேரம் வரும் கேட்கிறேன்

பூனை அல்ல புலி தான் என்று போகப் போகக் காட்டுகிறேன், போகப் போகக் காட்டுகிறேன்.."என்று வரும் பாடல் வரிகள் இதில் சாலப் பொருத்தமானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த