முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் வழக்கில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மனு விசாரணைக்கு ஏற்பு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும்


அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தாலும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது என்பதும் முக்கியமானது மேலும் இது சம்பந்தமாக ஏற்கெனவே தாக்கல் செய்து விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இனிமேல் இணைந்து பட்டியல் இடப்படும் என்பது தான் அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக  பதில் அளிக்குமாறும்  தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது அது குறித்து ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்த அரசுத் தரப்பு, உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ததன் பின்னர் ஒரு வருடம் பயிற்சி முடித்தவர்கள்


விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டதாக பதில் மனுவை தாக்கல் செய்தது. மேலும் சிவாச்சார்யர்கள் வழக்கில், ஆகம விதிகள் கற்றவர்கள் அர்ச்சகராகலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் சுட்டிக் காட்டித் தான் உயர்நீதிமன்றத்தில் வாதிடட்டது. தற்போது நேற்று வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின்  அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவுக்குத்  தடை விதிக்க மறுத்தது. இறுதி தீர்ப்பு தான் தீர்வாகும் அத்துடன் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனு மீது தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது மட்டுமின்றி நிலுவையிலுள்ள ரிட் மனுக்களுடன், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் ரிட் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது.               


 தமிழ் நாட்டில் ஆலயங்கள் பலவகையானது அதில் சிவன் ஆலயத்தில் சைவ நெறி அந்தணர்களும், பெருமாள் கோவில் பூஜையில் வைணவ நெறியைப் பின்பற்றும் அந்தணர்களும், முருகன் கோவில் பூஜையில் ஆண்டிப்பண்டாரங்களும், அய்யனார், கருப்பர் போன்ற பலரது குலதெய்வ ஆலயத்தில் குளாளர் எனும் பரம்பரை வேளார்களும், காளி கோவில் பூஜையில்  தெலுங்கு வழி தாசரிகளோ அல்லது கவிச்சக்கரவர்த்தி கம்பர் வழி வந்த உவச்சர் எனும் பட்டர்கள் மட்டுமே பூஜகராக உள்ளன இவை அல்லாத கிராம ஆலயங்களில்  அவரவர் சமூக மற்றும் இனவழி வந்த பூஜாரி முறை உள்ள நிலையில் இது குறித்து உண்மை நிலை. இருக்கும் போது இந்த ஆலயங்களில் பல இன்று வரை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை இந்த நிலையில் அணைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகலாம்


அரசாணையின் படி முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட 208 நபருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு பசுமைவழிச்சாலையிலுள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் சில மாதங்கள் முன்பு நடந்த நிகழ்ச்சியில்  இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கோவில்களில் பணிபுரிவதற்காக அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதியினை சார்ந்த 24 அர்ச்சகர்கள், இனச் சுழற்சி முறையில் இதர பாடச்சாலையில் பயிற்சி பெற்ற 34 அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாசாரியார்களுக்கும், 20 ஓதுவார்கள், 17 பரிசாரகர், நய்வேத்யம், சுயம்பாகம், 23 திருவலகர்கள், 25 காவல், நந்தவனம் பராமரிப்பு, தோட்டப் பணியாளர்களுக்கும், 28 தவில், நாதஸ்வரம் (மேளம் செட்), சுருதி ஆகியோருக்கும், 2 திருமஞ்சனம், 3 ஸ்தானிகம், 7 மணியம், ஊழியம், எழுத்தர், சீட்டு விற்பனை, 3 பரிகலம், 2 மாலை கட்டி, 3 சுப்பரபாதம், தேவபாராயணம், அத்யாபாகருக்கும், 3 திருவடி, வில்லம், உக்ராணம், 1 குடைகாரர், 1 யானை பாகன், கருணை அடிப்படையில் 12 நபர்கள் என மொத்தம் 208 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிய அடையாளமாக 75 நபருக்கு பணிநியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  


மேலும், உயிரிழந்த 3 பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்துக்கான குடும்ப நலநிதியும், 5 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, பிரபாகர ராஜா, ஆதினம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஆன்மிக பேச்சாளர்கள் சுகி சிவம், தேச மங்கையர்க்கரசி,


அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உயிரிழந்த 3 பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்துக்கான குடும்ப நலநிதியும், 5 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்அந்த நியமனம் அணைத்தும்  இந்த வழக்கில் இறுதியில் பிறப்பிக்கப்படும் உத்தரவு மூலம் தான் இந்த அணைத்து ஜாதி அர்ச்சகர் ஆகலாம் எனும் சமூகத்தில் நீதி சமநீதி காரணமாக வெளிவந்த அரசாணை குறித்து தீர்வு வரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...