முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரமாக தேசிய கொடிச் சட்டத்தில் திருத்தம் வந்த காரணத்தால் கோட்டை முதல் குடிசை வரை பறந்த கொடி

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் ஜவகர்லால் நேரு சொன்ன முதல் வார்த்தை  "நேதாஜி வகுத்த பாதையால் தான் சுதந்திரம் கிடைத்தது" .


நேதாஜியின் INA வில் இருந்தவர்களின் ஆதரவாக வளர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். 

75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை அணைவரும் போற்றுவோம். இப்போது அந்த தியாகிகள் யாரும் நம்மிடம் உயிரோடு இல்லை சுதந்திரம் 75 நிறைவில் அவர்கள் வயது சுமார் 95 விருந்து 100 கடந்து விட்டது அவர்கள் நினைவைப் போற்றும் ஒரு நாள் தான் இன்று.  நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திர காற்றில் நமது முன்னோர்களின் இரத்தமும் தியாகமும் கலந்திருக்கின்றது.

அவர்களில் பலர் அரசு பென்சன் வாங்கினர் பலர் அந்த தியாகத்திற்கு கூலி பென்சன் என வாங்கவில்லை அந்நிய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியரின் அடிமை விலங்கிலிருந்து இந்தியாவின் பல சுதேசி சமஸ்தான தேசம் விடுபட லட்சக்கணக்கான விடுதலை வீரர்கள் தூக்குக் கயிற்றை முத்தமிட்டும் துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் மார்பு காட்டி அளப்பரிய உயிர் தியாகத்தை செய்துள்ளனர். வெறும் அமைதி வழி போராட்டத்தால் மட்டும் இந்தியாவில் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்வோம்.




இந்திய விடுதலைக்கு மிக முக்கிய அத்தியாயமாக விளங்கிய உலகத் தலைவன் வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தியாக வாழ்வும் போராட்ட குணமும் தான் அந்நிய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியருக்கு பயத்தை ஏற்படுத்தி இந்திய விடுதலைக்கு வித்திட்டது.

ஆயுதம் கொண்டு தாக்கி அடக்கி ஒடுக்க நினைக்கும் ஆங்கிலேயருக்கு அதே ஆயுதத்தால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று இந்திய தேசிய ராணுவத்தைக் (INA) கட்டமைத்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு இந்திய விடுதலை உணர்வை ஊட்டி ஓர் அணியில் ஒருங்கிணைத்து  ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட வைத்ததே இந்திய விடுதலைக்கு காரணமாக அமைந்தது.



அப்பேர்ப்பட்ட தியாக வரலாற்றை தற்போது உள்ள இளம் தலைமுறையினர் நினைவுகூர்ந்து பெற்ற சுதந்திரத்தைப் பேணி காக்க வேண்டும்.

இந்திய தேசம் முழுவதும் பரவி வாழ்கின்ற அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பரிபூரண சுதந்திரமானது ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்.


நாட்டு மக்கள் அனைவரும் வேற்றுமைகளையும் மறந்து சமத்துவம் சமதர்மம் என்ற நியதி உருவாக வேண்டும் அதுவே பரிபூரண சுதந்திரம் ஆகும்.

இந்திய நாட்டில் பரவி வாழ்கின்ற அனைத்து மாநில மக்களுக்கும் பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் 75 ஆம் ஆண்டு நிறைவு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.





ஜெய்ஹிந்த் சுதந்திரத்தில் பங்கெடுக்காத சில அரசியல் கட்சிகள் தற்போது தீவிரமாக தேசபக்தி காட்டுகிறது இன்று ஆட்சி அதிகாரத்தை ஊழல் மிகுந்த பலர் ஆட்டுவிக்கும் நிலையில். விடுதலை வீரர்களை காட்டித் கொடுத்த பலர் தேசியம் பேசும் போது உண்மையான தேச அபிமானிகளிடம் இன்று தேசபக்தி குறித்து மக்களுக்கு வகுப்பு எடுக்கிறது. சுதந்திர இந்தியாவை கார்ப்பரேட்டுகளின் காலடியில் கிடத்தி, அடிமை இந்தியாவாக்க துடிப்பவர்களிடம் இருந்து நாடு தன்னை விடுவிக்ககப்  பலவகையில் பல கட்சிகள் போராடுகிறது!  

நாடு அடிமைத்தளைகளை அறுத்தெறிந்து விடுதலை பெற்ற ஆண்டு 1947. புதுக்கோட்டை மற்றும் திருவிதாங்கூர்  1948  ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து தற்போது 75 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆட்சிக் கட்டிலில் இன்று இருப்பவர்கள் இதை ‘ஆசாதி  கா அமிர்த மகாத்சோவ்’ என்று கொண்டாட அழைப்பு விடுக்கின்றனர் . சுதந்திரத்திற்காக போராடிய வீர்ர்களின் தியாகங்களை போற்றி, இந்த மிகப் பெரிய சுதந்திர விழாவை இந்த முறை 75 வாரங்கள் கொண்டாடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார் .


சுதந்திர போராட்டத்தில்  சார்ந்த பல கட்சிகள் அப்போது இல்லை  கலந்து கொள்ளாவிட்டாலும், இன்று ஆட்சிப் பொறுப்பிலிருப்பதால் அந்நிகழ்வை போற்றிக் கொண்டாட உரிமையுள்ளது!

ஆனால்,ஏதோ தேனாறும், பாலாறும் ஓடுகிறது என்பதைப் போல  அமிர்த கால ஆட்சி இப்பொழுது தான் நடக்கிறது என்று கூறுவதில் ஏதாவது சாராம்சம் உள்ளதா? இல்லை வரிவிதிப்பு மற்றும் ஜாதி மத துவேஷம் மாற வேண்டும் என்பதே பலரது கவலை.

மீண்டும் அடிமைப்படவா பெற்றோம் சுதந்திரம்? என்று உணர்ந்த பலர் மௌனம்.. ஆனாலும் அதை எல்லாம் கடந்து தற்போது நாட்டில் சிறப்பாக 60 சதவீதம் மக்கள் சுயமாக கொடி வாங்கிக் கொண்டார் வைத்த நிகழ்வில் தேச ஒற்றுமை மட்டுமே அதில் கட்சி சாயம் இல்லை.   அப்படி பல கொண்டாட்ட நிகழ்வுகள் நிகழ்ந்தது அதில் நம் பார்வைக்கு வந்தது இங்கு பதிவாகியுள்ளது.  எரிசக்தி அமைச்சகம்

மோதிஹரியில் ஆர்.கே சிங் தேசியக்கொடி ஏற்றினார்



பீகார் மாநிலம் மோதிஹரியில் உள்ள எம்எஸ் கல்லூரியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர்  ஆர்.கே சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வளாகத்தில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியர்களால் கட்டப்பட்ட சிறை மற்றும் அறை வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.

சர்க்கா பூங்காவில் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அமைச்சர் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் பாராட்டினார். பிபர்கோத்தியில் உள்ள மகாத்மா காந்தி வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, உங்கள் தொகுதியில் முதல்வர் விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள், மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காக தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆகிய தமிழ்நாடு அரசின் விருதுகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிய பின்னர் பெற்றவர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றினார்.

மேலும்  சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “விடுதலைப் போரில் தமிழகம்” புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் திறந்து வைத்தார்.சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில், 75ஆவது சுதந்திரத் திருநாள் - அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையில் நிறுவப்பட்டுள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர்  திறந்து வைத்தார். சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளையும் முதலமைச்சர் வழங்கினார்.           மாநில அரசுகளின் முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தின் தலைநகரங்களில் சுதந்திர தின விழாவின் போது தேசியக்கொடி ஏற்றி வைத்திட அனுமதித்திட வேண்டுமென அப்போதைய மத்திய அரசை வலியுறுத்தி, மாநில அரசுகளின் முதலமைச்சர்களுக்கு அந்த உரிமையை முத்தமிழறிஞர் காலஞ்சென்ற முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பெற்றுக் கொடுத்தன்படி, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டாக கோட்டையில் கொடி ஏற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர்.   சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து


குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு-

“76வது சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் நமது நாட்டு மக்களுக்கு எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை நாம் இன்று கொண்டாடும் போது, நமது சுதந்திரம் எவ்வளவு கடினமாகப் போராடி கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒடுக்குமுறையான காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுத்தந்த தியாகமும், வீரமும்  மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் சுதந்திர தினம்.

இந்த நாள் நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, நிலையான மற்றும் வலுவான குடியரசின் அடித்தளத்தை அமைத்தது. இன்று, இந்தியா அனைத்து மட்டத்திலும் வளர்ச்சியின் பாதையில் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக உள்ளது.

விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேசபக்தி, தியாகம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை இளைய தலைமுறையினருக்கு ஊக்குவிப்பதற்கு, நமது மாபெரும் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளை நினைவு கூர்ந்து மீண்டும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது.

இந்த சுதந்திர தினத்தன்று, அரசியலமைப்பு விழுமியங்களின் நாகரீக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பித்து, அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மற்றும் வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம்சுதந்திரம் அடைந்ததை வெளியிட்ட 75 ஆண்டு பழமை வாய்ந்த பத்திரிக்கையை போற்றி பாதுகாத்த டாக்டர் ஹெச்.வி.ஹண்டேவுக்கு பிரதமர் பாராட்டு



சுதந்திரம் அடைந்ததை வெளியிட்ட 75 ஆண்டு பழமை வாய்ந்த பத்திரிக்கையை ட்விட்டர் பதிவில் காட்சிப்படுத்திய முன்னால் மாநில அமைச்சர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டேவின் ஆர்வத்தை பிரதமர்  நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். டாக்டர் ஹெச்.வி. ஹண்டே போன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் தேச கட்டமைப்பிற்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்திருப்பதாக பிரதமர் கூறினார்.

விடுதலையின் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு டாக்டர் ஹெச்.வி. ஹண்டே வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

“டாக்டர் ஹெச்.வி. ஹண்டே போன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் தேச கட்டமைப்பிற்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார்கள். அவரது ஆர்வத்தையும், மன உறுதியையும் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. @DrHVHande1”சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

“சிறப்புமிக்க இந்த சுதந்திர தினத்தன்று அனைவருக்கும் வாழ்த்துகள். எனக் கூறியுள்ளார் 76-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

76-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.     இது, கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் கலாச்சாரம், எழுச்சிமிகு ஜனநாயக பாரம்பரியம், சாதனைகள் குறித்து பெருமைகொள்ளும் தினம்.  நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன் என  அமித் ஷா கூறியுள்ளார்.




வலுவான, தன்னிறைவு மிக்க இந்தியாவை கனவு கண்ட நமது தீரம் மிக்க விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவை, நாட்டு நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வருகிறார். இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா தருணத்தில் இந்தியாவை மீண்டும் விஸ்வ குருவாக மாற்றுவதற்கு, கடின உழைப்பின் மூலம், தொடர்ந்து வளர்ச்சிப் பாதைக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்ததாக இந்தியன் ஆயில் பவன் சென்னையில் சுதந்திரவிழா கொண்டாட்டம்



இந்திய சுதந்திரதின பெருவிழாவானது சென்னையில் உள்ள இந்தியன்ஆயில் பவனில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் திரு. K. சைலேந்திரா, இந்தியன்ஆயிலின் தென் மண்டல செயல் இயக்குனர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து டெரிடோரியல் ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த கொண்டாட்டங்களின் போது இந்தியஆயிலின் தமிழக செயல் இயக்குனர் V.C. அசோகன் உள்ளிட்ட பிற உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். இன்றைய தினத்தில் இந்தியன்ஆயில் பணியாளர்களுக்கு நீண்ட பணிக்கான சேவை விருதுகளையும் மற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்ததற்கான பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி உறையாற்றினார்.

இன்றைய தினத்தில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மற்றும் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வின் இறுதியில் 75 வது சுதந்திர பெருவிழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. சென்னை சுங்கத் துறை அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்



சென்னை சுங்க அலுவலகத்தில் 75- வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மண்டல சுங்க அலுவலகத்தின் தலைமை ஆணையர் திரு எம். வி. எஸ். சௌத்திரி தேசிய கொடியை ஏற்றி வைத்து,  அதிகாரிகள் மற்றும் தலைமை ஹாவில்தார்களின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் போது பேசிய தலைமை ஆணையர், எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவித்து, அதன் வாயிலாக வரி இணக்கத்தை மேம்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பும் வகையில் சுங்கத்துறை மேற்கொண்டு வரும் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.

சிறப்பாக பண்ணியாற்றியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை சுங்கத்துறை அலுவலகத்தின் ஊழியர்களுக்கு அவர் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்தத் தகவல், சென்னை சுங்க அலுவலகத்தின் உதவி ஆணையர் டாக்டர் ஆர். நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் மதர் சிறப்புப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்






மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பள்ளியின் நிர்வாக இயக்குநர் .A.அருண்குமார் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் ஆஃப் பியர்ல் சங்கம் காரைக்குடி சங்கத்தின் தலைவர் Rtn. சிவசுப்பிரமணியம் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும் மதர் சிறப்பு பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் மாறுவேடத்தில் வந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.







விழாவில் ரோட்டரி கிளப் ஆஃப் பியர்ல் சங்கம் காரைக்குடியின் முன்னாள் துணை ஆளுநர் Rtn. .G.முத்துக்குமார் சங்க உறுப்பினர்கள் Rtn..முகமது சமிம் மற்றும்  Rtn. நாகலிங்கம்  கலந்துகொண்டார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியை. M.தேவிகா நன்றி கூறினார். நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது. விழாவில் பள்ளி நிர்வாகியான ஓவிய ஆசிரியர வரைந்த தலைவர்கள் ஓவியங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த