டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லுாரியில் ஜூலை 2023 பருவத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022 டிசம்பர் மாதம்., 3 ஆம் தேதியில் தேர்வு நடக்கவுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கு சிறுவர்கள் எட்டாம் வகுப்பும், சிறுமியர்கள் ஏழாம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 11.5 வயது முதல் 13 வயது வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் 2022 டிசம்பர் மாதம்.,3 ஆம் தேதி தேர்வு நடக்கவுள்ளது. ஆங்கிலம் 2:00 மணி நேரம், 125 மதிப்பெண்கள், கணிதம் 1:30 மணி நேரம், 200 மதிப்பெண்கள், பொது அறிவு 1:00 மணி நேரம் 75 மதிப்பெண்கள், கணிதம் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்திய ராணுவக்கல்லுாரி, கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட், 248 003,என்ற முகவரியில் விரைவு தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்திற்கு கேட்பு காசோலை எடுப்பவர்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை, டெல்பவன், டேராடூன் என்ற பெயருக்கு எடுக்க வேண்டும் இணையதளம் மூலம் www.rimc.gov.in என்ற முகவரியில் பொதுப்பிரிவுக்கு 600 ரூபாய், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் 555 ரூபாய் செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு 2022 அக்., 15 மாலை 5:45 க்குள் கிடைக்கப்பெற வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வும் உண்டு. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லுாரியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்