திருப்புவனம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் வீட்டு விழாவுக்கு விடுப்பு வழங்காத நிலையில் காவல்துறை இயக்குனர் கடிதம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சந்தான ராஜ்.
தனது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடுப்பு விண்ணப்பம் அளித்துள்ளார்.
உயர் அதிகாரிகள் விடுப்பு வழங்காத காரணத்தால் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையில், அவருக்கு ஆறுதல் தெரிவித்து டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் எழுதியதில், தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்துகொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும் காணொலி வாயிலாகக் கண்டறிய நேர்ந்தது. தங்கள் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைகிறேன். இது போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்க கூடாது என்பதை மேல் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் தங்களது மகளின் நிச்சியதார்த்த நிகழ்ச்சி நடத்த போதுமான நாட்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்" எனக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்