முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் புகழாரம்

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 5, 2022) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவருக்கு மரியாதை செலுத்தினார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவரும், மாளிகையின் அதிகாரிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.ஆசிரியர்கள் தினத்திற்கு குறிப்பாக கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் புகழாரம் சூட்டியுள்ளார்

ஆசிரியர்கள் தினத்திற்கு குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற  ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் திரு மோடி  புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் கூறியிருப்பதாவது:

 “ஆசிரியர்கள் தினத்திற்கு #TeachersDay குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற  ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நமது முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் நான் புகழாரம் சூட்டுகிறேன்.”ஆசிரியர் தினத்தன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் உரையாடினார்

கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது

ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது

ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், கற்பிப்பதாகும்

மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்

2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது

தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்

ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.

இந்நிகழ்ச்சியின் போது, சர்வபள்ளி் ராதாகிருஷ்ணணுக்கு, பிரதமர் மரியாதை செலுத்தினார். ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் ஒடிசாவில் தொலைதூர இடங்களில் ஆசிரியர் பணியை மேற்கொண்டார் என்றும் நினைவூட்டினார். நாடு இன்று அமிர்தப் பெருவிழாவின் கனவுகளை நிறைவேற்ற தொடங்கியுள்ள நிலையில், கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக கூறினார். தேசிய விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களின் அரப்பணிப்புக் குறித்து எடுத்துரைத்த பிரதமர், நேர்மறை சிந்தனையுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களுடன் உழைக்க வேண்டும் என்று கூறினார். ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் கற்பிப்பதாகும்.

2047-ஆம் ஆண்டு இந்தியாவின் நிலை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது மாணவர்களைச் சார்ந்தது என்றும், அவர்களுடைய எதிர்காலம் இன்றைய ஆசிரியர்கள் மூலம், உருவாக்கப்படுவதாகவும், பிரதமர் தெரிவித்தார். எனவே, மாணவர்களின் வாழ்க்கையை சிறப்படையச் செய்ய நீங்கள் உதவுவதாகவும், அத்துடன் நாட்டிற்கு பங்களிப்பதாகவும் அவர் கூறினார்.  மாணவர்களின் கனவுகளுடன் ஆசிரியர் ஒன்றிணையும் போது அவர் வெற்றி பெறுவதாகவும் தெரிவித்தார்.



பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே  மோதலையும் முரண்பாடுகளையும் களைவது முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பள்ளி, சமூகம் மற்றும் வீடுகளில் மாணவர்கள் மோதலை கடைப்பிடிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களும் மாணவர்களின்  குடும்பத்தினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  மாணவர்களுடன் விருப்பு வெறுப்புகளை  கடைப்பிடிக்காமல் அனைத்து மாணவர்களையும், சமமாக நடத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து கிடைத்துள்ள வரவேற்பை சுட்டிக்காட்டிய பிரதமர், அது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், மகாத்மா காந்தி பகவத் கீதையை பலமுறை படித்து, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அர்த்தத்தைக் கண்டறிந்ததாகக் கூறினார். மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இக்கொள்கையை உருவாக்கியதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகித்ததாக அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளதாகவும் தெரிவித்தார். 

தமது சுதந்திர தின உரையின்போது குறிப்பிட்ட ஐந்து தீர்மானங்கள் குறித்து நினைவு கூர்ந்த பிரதமர், இவற்றை பள்ளிகளில் வழக்கமாக விவாதிக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்காக இந்த தீர்மானங்கள் பாராட்டப்படுவதாகக் கூறிய அவர், குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அவற்றை கற்பிப்பதற்கான வழிவகைகளை காணுவது அவசியம் என்று தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது என்று பிரதமர் கூறினார். தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.



உலகில் பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ள இந்தியாவின் சாதனை குறித்து பிரதமர் குறிப்பிட்டார். சுமார் 250 வருடங்களுக்கு மேலாக  இந்தியாவை ஆட்சி  செய்த அவர்களைவிட பொருளாதாரத்தில் ஆறாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இல்லம் தோறும் மூவண்ணக் கொடி இயக்கம் மூலம் உலகில் இன்று இந்தியா புதிய  உச்சத்தை எட்டியுள்ளதாகவும், இந்த உத்வேகம் இன்று தேவை என்றும் அவர் கூறினார். சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ்கார்களுடன் ஒவ்வொரு இந்தியரும், 1930ஆம் ஆண்டு முதல் 1942-ம் ஆண்டு வரை கடைபிடித்த அதே உத்வேகத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.  நான் எனது நாட்டை பின்தங்கியிருக்கச் செய்ய மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து அடிமைத் தனத்தை நாம் ஒழித்துக் கட்டியுள்ளோம் என்றும் தற்போது இதை நாம் நிறுத்தவிடக் கூடாது என்றும் கூறிய பிரதமர், நாம் முன்னோக்கி மட்டுமே செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

பிரதமர் தனது உரையை நிறைவு செய்யும் போது, ​​இந்தியாவின் திறன் பன்மடங்கு வளர, எதிர்கால இந்தியாவிற்காக  இதே போன்ற உணர்வை ஒருங்கிணைக்குமாறு  ஆசிரியர்களை வலியுறுத்தினார்.ஆசிரியர் தினத்தன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் உரையாடினார்

கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது

ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது

ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், கற்பிப்பதாகும்

மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்

2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது

தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்


இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.2022 ல் இந்தியாவில் 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்குவதில் 

தமிழ்நாட்டிலிருந்து இராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தினத்தில் ஒட்டி டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூபாய். 50,000-க்கான காசோலை ஆகியவை விருதில் அடங்கும்   தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இராமச்சந்திரனுக்கு மனைவி நாகலட்சுமி , மகன் திரவியம் ராஜ் உள்ளனர். அவரது மகன் அவரது சொந்த ஊரான செம்பொன்குடி அரசு பள்ளியில் 2-ஆம் வகுப்பில் படிக்கிறார்.

இராமசந்திரன் தொடக்கக் கல்வியை செம்பொன்குடி தொடக்கப் பள்ளியிலும் பிறகு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பை திருவரங்கத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலும் படித்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பதற்கு முயன்ற நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை காரணமாக மதுரையில் டீக்கடையில் வேலை பார்த்தார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பின்பு பணி கிடைக்காததால் மூன்று ஆண்டுகள் திருப்பூரில் வேலை செய்த பின்னர் 2005-ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகிலுள்ள எம்.வி பட்டினத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் பணியிலிருந்து கொண்டே பிஎஸ்சி கணிதம், பி.எட், எம் எஸ் சி கணிதம் முடித்தார்.

2006 ஆம் ஆண்டு போகலூர் ஒன்றியம் செவ்வூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றார். பின்னர் 2008 ஆம் ஆண்டில் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் அரசு தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டு தற்போது வரை அப்பள்ளியில் பணியாற்றுகிறார்.

பல்வேறு அமைப்புகள் ஆசிரியர் இராமசந்திரன் சேவையைப் பாராட்டி விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கிய நிலையில் மேலும், 2018 ஆம் ஆண்டு  மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை இவர் இன்று  பெற்றுள்ளார். மாணவர்கள் இவரை உறவு முறை கொண்டு அழைக்கும் நிலையில் இவர் ஒரு வித்தியாசமான உபாத்யாயர் விருதுக்குத் தகுதியானவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...