மூத்த புலனாய்வு பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் சென்னை பிரஸ் கிளப் உறுப்பினரான புகைப்படக்காரர் அஜித்குமார் மீதான தாக்குதல் வழக்கில் :
தற்போது ஐந்து பேர் கைதான நிலையில். மேலும் இதில் பல மர்மங்கள் பலருக்கும் விளங்காமல் உள்ளது. கள்ளக்குறிச்சிக்கு செய்தி சேகரித்த மூத்த புலனாய்வு பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளரை வழி மறித்து தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை பத்திரிகையாளர்கள் மீதான பல முனைத் தாக்குதல் அதிகரித்து வருவதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கை தற்போது வலுப்பெறுகிறது. வன்முறை தான் தீர்வா? கனியாமுத்தூர் பள்ளி நிர்வாகி என்ன தான் நினைத்துக் கொண்டுள்ளார் எனத் தெரியவில்லை! தமிழக அரசுக்கு மீறிய தனிப் பெரும் அதிகாரம் கொண்டவராக அவர் தன்னை நினத்துக் கொள்வதாகவே தெரிகிறது.
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக தொடர்ந்து புலன் விசாரணை செய்து துணிச்சலுடன் பல உண்மைகளை வெலிக் கொண்டு வந்த நக்கீரன் இதழில் முதன்மை செய்தியாளர் தாமோதரன் பிரகாஷும், புகைப்படக்காரர் அஜித்தும் நேற்று கனியாமுத்தூர் பள்ளி மறு சீரமைக்கப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்று சேலம் நோக்கித் திரும்பிய போது தலைவாசலருகே மிகவும் கடுமையாகத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளிக் கூட நிர்வாகம் கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை. ஸ்ரீமதி மர்ம மரண விவகாரத்தில் மிக விரைவில் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. நீதிபதியின் அனுசரணையான சொல்லாடல்களும் பள்ளி உரிமையாளர்களுக்கு சாதகமாக இருந்தது!
சில அமைப்புகள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வரும் சூழலில் நடந்த உண்மைகளை வெளிக் கொணர்வதில் நக்கீரன் இதழில் சிறப்பான பணியாற்றி வந்த
நக்கீரன் திமுக அரசுக்கு எதிரான பத்திரிகையல்ல! கனியாமுத்தூர் பள்லி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்திற்கு ஆதரவாக உண்மைகளை வெளிக் கொணரவே நக்கீரன் முயற்சித்தது.
இதை பொறுக்காத பள்ளிக் கூட உரிமையாளரின் ஆட்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து விரட்டி வந்து கொடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலில் நிலைகுலைந்து போன இருவரையும் பொதுமக்கள் மீட்டு சேலம் ஆத்தூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்!
எவ்வளவு பாதகச் செயல் செய்தாலும் நாம் தண்டிக்கப்பட போவதில்லை என்ற தைரியமே கனியாமுத்தூர் பள்ளி உரிமையாளர்களை மீண்டும்,மீண்டும் வன்முறையை கையில் எடுக்க தூண்டுகிறது! இது போல் இன்னும் எத்தனை பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப் போகிறார்களோ தெரியவில்லை.
தமிழக அரசு இன்னும் இந்த கொலைகாரக் கூட்டத்தை சுதந்திரமாக நடமாடவிட்டால் தமிழகத்தில் ஊடக சுதந்திரமே கேள்விகுறியாகிவிடும். அந்த நிலை ஏற்படுவதற்கு முன்பாக தமிழக அரசு கனியாமுத்தூர் பள்ளி தொடர்பாக இது வரை தான் கடைபிடித்த நிலையை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி மக்கள் பக்கம் வர வேண்டும். உண்மையை வெளிக் கொணர பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஒட்டுமொத்த ஊடகங்களையும் பகைத்துக் கொண்டு கனியாமுத்தூர் பள்ளி நிர்வாகத்தை ஆதரிக்க வேண்டிய அவசியம் நிச்சயம் திமுக அரசுக்கு கிடையாது என்பதை நிருபிக்க வேண்டிய தருணம் உருவாகிவிட்டதாகவே தெரிகிறது!
கருத்துகள்