முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலியை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்

சென்னையிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎல்ஆர்ஐ) தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலியை திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்

தோல் தொழில் துறையின் வேலைவாய்ப்புத் தேவைகள், திறன் மேம்பாடு, கற்றல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு ஓரிடத் தேர்வு வழங்கும். தோல் துறை ஊழியர்களுக்கான திறன் மதிப்பீட்டு சான்றிதழ் (ஸ்கேல்) ஸ்டுடியோ செயலியை சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ நிகழ்ச்சியில், மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார். தோல் தொழில் துறையில் பயிற்சி பெறுவோருக்கு வடிவமைத்தல் மற்றும் தயாரித்து அளிப்பதற்காக தோல் திறன் துறை கவுன்சில், இந்த செயலியை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் அலுவலகத்திலிருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டுடியோ மூலம் இணையதளம் வழியாக வகுப்புகள் நடத்தப்படும். தோல் தொழில் துறையில் ஆர்வம் உள்ள அனைத்து வயதினரும், இந்த ஸ்கேல் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பிரதான், நாட்டில்  தோல் தொழில்துறை பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும், தற்போது  44 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் துறையில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை சரியான விகிதத்தில் கலந்து இந்தத் துறையின் வளர்ச்சிக்கு சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ முக்கிய பங்கு வகிப்பதை அவர் பாராட்டினார்.


டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் அதிகரிப்பதன் காரணமாக இந்தத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து  பேசிய திரு பிரதான், திறன் பெறுதல், மறு திறன் பெறுதல், திறனை மேம்படுத்துதல் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து புதுப்பித்துக் கொள்ள அழைப்பு விடுத்தார். இந்தத் துறையின் திறன் மேம்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய தேசிய திறன் மேம்பாட்டு கழகமும், சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ-யும் இணைந்து  செயல்படவிருப்பதாக கூறிய அவர், இந்தத் துறையில் பணியாற்றுவோரின்  திறன்களை விரிவுப்படுத்த தேசிய அளவில் திறன் கட்டமைப்பு திட்டத்தை சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ நடத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

திறன் மேம்பாட்டு அமைச்சகம், சிஎல்ஆர்ஐ, தோல் தொழில் திறன் கவுன்சில், தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை உட்பட இந்தியா முழுவதும் பொதுவான 10 வசதி மற்றும் திறன் மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. 2025-க்குள் 6 பில்லியன் கைவினைஞர்களை உருவாக்குவது என்ற இலக்கை எட்டுவதிலும் அவர்களின் திறனை மேம்படுத்துவதிலும் மாபெரும் பங்களிப்பை செய்யும்” என்று அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் மேலும் தெரிவித்தார்.

தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, தொழில் முனைவு ஆகியவற்றுக்கு  ஊக்கம் அளித்து வேலையை உருவாக்குவோராக இந்தத் துறையின் இளம் தொழில்முறையினரை அவர் கேட்டுக் கொண்டார். இ-வர்த்தகம் உள்ளிட்ட டிஜிட்டல் வெளியில் கிடைக்கும் வாய்ப்புகளை கைவினைஞர்களோடு இணைத்து கைகோர்க்க வேண்டும் என்று அவர் கூறினார் .

“கூட்டுறவு மற்றும் குடிசை தொழிலாகவும் உள்ள தோல் தொழில் துறை வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப மேம்பாடுகளை சேர்த்து கொள்வது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். சிஎல்ஆர்ஐ போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு அளிப்பதால் கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், மதிப்பும் உயர்கிறது” என்று திரு பிரதான் குறிப்பிட்டார்.

மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் தோல் தொழில் துறை வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ-யின் பங்களிப்புகளை எடுத்துரைத்தார். நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி வருவாயில் தமிழ்நாடு தோல் தொழில்துறை சிறந்த பங்களிப்பை செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“தமிழ்நாட்டில் திறன் வாய்ந்த ஏராளமான மனிதவளம் உள்ளது. இவர்களுக்கு திறன் அளிப்பதில் சிஎல்ஆர்ஐ மாபெரும் பங்களிப்பை செய்து வருகிறது. இளைஞர்களிடையே தொழில் முனைவோரை சிஎல்ஆர்ஐ ஊக்கப்படுத்தி வருவதோடு பல புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் உதவி செய்கிறது. இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை நோக்கிய அமிர்த காலத்தில் நமது தேசிய இலக்குகளை நனவாக்க இது உதவும்” என்றும் டாக்டர் எல்.முருகன் கூறினார்.

சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ, உலகத் தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்களின்  வர்த்தக மாற்றத்திற்கு  பங்களிப்பு செய்திருப்பதாக அதன் இயக்குநர் டாக்டர் கே ஜெ ஸ்ரீராம் தெரிவித்தார். இந்திய தோல் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவாக கல்வி சார்ந்த திட்டங்கள், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் தோல் துறை சார்ந்த கல்வியின் பங்களிப்பு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழக தலைமை செயல் அதிகாரி திரு வேத் மணி திவாரி, சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ-யின் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் திரு ஹபீப் உசைன், தோல் துறை திறன் கவுன்சில் தலைவர் திரு அக்கீல் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...