தொழில்நுட்பக் கோளாறு: இண்டேன் கியாஸ் பதிவு செய்வதில் தாமதம்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் இண்டேன் கேஸ் சிலிண்டர் பதிவு மற்றும் விநியோகம் செய்வதில் கடந்த 2 நாட்களாக பிரச்சனை இருந்தது என்றும், தற்போது பிரச்சனை சரி செய்யப்பட்டு வருகிறது என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைமைப் பொது மேலாளர் சந்தீப் சர்மா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழில்நுட்பக் கோளாரை சரி செய்ய ஐபிஎம் மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பயனாளர்கள் வழக்கம்போல் தங்களது கேஸ் சிலிண்டர் பதிவை:
எஸ்எம்எஸ் அல்லது ஐவிஆர்எஸ் எண் 77189 55555
மிஸ்டுகால் 84549 55555 அல்லது
வாட்ஸ் அப் மூலம் 75888 88824
விநியோகஸ்தர்களை நேரிடையாகவோ அல்லது கேஷ் பில்லில் உள்ள தொலைபேசி எண் வாயிலாக நுகர்வோர்கள் தொடர்பு கொண்டு மேற்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களின் பதிவு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கூடிய விரைவில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். இன்று மாலைக்குள் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு நாளை முதல் வழக்கம் போல் சேவைகள் தொடரும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்