அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி தீவிரப்படுத்தப்படவுள்ளனவாம். நீங்கள் ஒன்றாக வேண்டும். வேறு வழியே இல்லை என்று பாஜக தரப்பிலிருந்து அதிமுகவுக்கு தெளிவாகவே சொல்லப்பட்டு விட்டதாம். இதனால் அதிமுக ஒரு தரப்பில் தலைமை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளதாகவும்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை திமுக பறித்ததென்று சொன்னாலும் கூட பல தொகுதிகளில் அமமுககவும் கூட அதிமுகவின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. மூன்றாவது கட்சியாக அமமுக உருவெடுத்துள்ளது. அக்கட்சி மட்டும் அதிமுகவுடன் பிரிந்து செல்லாமல் இணைந்திருந்தால், நிச்சயம் திமுகவுக்கு இன்னும் சில இடங்கள் குறைவாக வந்திருக்கும். இப்படி பல வழிகளில் போட்டிகள். ஜெ.ஜெயலலிதா இல்லாதது, பாஜகவின் பேச்சைக் கேட்டு எல்லாவற்றையும் செய்வது, மக்கள் மனதில் கடும் வெறுப்பை சம்பாதித்து வைத்திருப்பது,
வாரிசுகளுக்கு மட்டும் சீட் கொடுத்தது என்று அதிமுக மிகப் பெரிய அளவில் பெயரளவில் டேமேஜாகியுள்ளது. இதை சரிசெய்ய ஒரே வழி அதிமுக - அமமுக இணைப்புத்தான் என்ற எண்ணம் தொண்டர்கள் அளவிலும் இரண்டாம் கட்டத் தலைவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் வந்துள்ளதென்பதே. அமமுகவை மீண்டும் அதிமுகவில் கொண்டு வர வேண்டும். சசிகலா நடராஜனை அழைத்து வர வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மக்கள் மனதைக் கவரும் வகையில் செயல்பட வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஏழை எளிய மக்களின் அன்பை மீண்டும் பெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் அதிமுகவைக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்திற்கு அதிமுக வந்துள்ளதாம். இதை தற்போது அரசியல் ரீதியாக வலிமையாக வழிநடத்தும் நிலையில் தான் .பண்ருட்டி ச. இராமச்சந்திரன் புதிய பதவி வழங்கப்பட்டது இதில் பல அரசியல் விழிப்புணர்வு தொண்டர்கள் மத்தியில் தற்போது வந்துள்ளது கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில், 1937 ஆம் ஆண்டில் பிறந்த ராமச்சந்திரன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி பின்னர் ஐந்து முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராகவும், மு. கருணாநிதி , எம்.ஜி.ஆர் அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் 2011 ஆம் ஆண்டில் ஆலந்தூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்.
ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியிலும் பணியாற்றியவர் மக்கள் நல உரிமைக் கழகம் என்ற தனி அமைப்பை துவங்கி நடத்தினார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் அவைத் தலைவராக பணியாற்றியவர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 2013 ஆம் ஆண்டில் விலகினார். அவர் தனது விலகல் கடிதத்தினை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரடியாகவே கொடுத்தார்.
தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி எஸ் ராமச்சந்திரன் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதில் இணைந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், " எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து இந்த இயக்கத்திற்கு உழைத்தவர்கள் உடன் இருந்து பாடுபட்டவர்கள், கட்சியை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், பலமாக, தூணாக இருந்து உழைத்தவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை இணைத்துக்கொண்டு கட்சி செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், சசிகலா நடராஜன், டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியில் இணைக்க வேண்டும்" என்று விரும்புவதாக கூறியிருந்தார்.
தற்போது ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டத்திட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கட்சியின் அமைப்பு செயலாளரான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதில் ட்டுவிஸ்ட் என்னவென்றால் எடப்பாடி கே.பழனிச்சாமி சேலத்தில் MGR க்கு ரசிகர் மன்றம் வைத்த காலத்தில் அறிஞர் அண்ணாதுரையோடு அமைச்சராக இருந்தவர் பன்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் அரசியலில் பண்ருட்டியாரின் சாணக்கியத்தனம் பலர் அறிவோம்
193 நாடுகள் அங்கம் வகிக்கும் உலக ஐக்கிய நாடுகளின் சபையில் 1983 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் சார்பில் பிரதிநிதியாக இடம்பெற்றவர் தமிழகத்தைச் சார்ந்த
பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் மூன்று மாத காலம் அங்கேயே தங்கி அனைத்து நாடுகளுடைய பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி இவருக்கான வாய்ப்பு நேரத்தை வசதியாகப் பயன்படுத்தி அரிய பல கருத்துகளை எடுத்து வைத்தார்
193 நாடுகளின் மக்கள் பயன்படுத்தும் 6000 க்கும் அதிகமான மொழிகளில் உலக நாடு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 6 மொழிகளான
தமிழ்,சமஸ்கிருதம்,கிரேக்கம்,சீனம், யூதம்,லத்தின், ஆகிய மொழிகளைப் பயன்படுத்தாமல்
உலகெங்கும் பரவலாக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடைமுறையில் ஆங்கில மொழியில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்
அவருடைய அன்றைய கருத்துக்கள் உலக நாட்டு சபையில் அங்கம் வகிக்கின்ற 193 நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அவர் ஆற்றிய உரையில் முக்கியமான கருத்துகள் யாதெனில் அக்காலகட்டத்தில் பெரியதோர் பிரச்சினையாக இருந்த இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து உலக நாடுகள் அறியும் வண்ணம் தனது சாதுரியக் கருத்தியல் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் சார்ந்த கட்சியின் தலைவரும் அப்போது தமிழக முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் பெயரையும் சாதுரியமாக அந்த சபையில் பதிய வைத்தவர் அவரே
ஆனால் எடப்பாடி கே.பழனிச்சாமி அப்போது சேலத்தில் அவரது தலைவருக்கு அறியாத நபராக ரசிகர் மன்றம் வைத்த காலத்தில் அறிஞர் அண்ணாதுரையோடு அமைச்சராக இருந்தவர் தான் பன்ருட்டி எஸ் ராமச்சந்திரன் என்பதை தமிழ் நாடு நன்கறியும் எங்கள் நாட்டின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டில் பசி பட்டினியால் வாடும் ஏழை எளிய பள்ளி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில்
சத்துணவு திட்டம் என்ற ஒரு திட்டத்தை அம்மாநில முதலமைச்சராக இருக்கின்ற
எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் நடைமுறைப்படுத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார்
அந்த திட்டத்தை வறுமை நிலையில் உள்ள நாடுகள் பயன்படுத்தி பயன் பெற்றுக் கொள்ளலாம் என்பது இந்த எளியவனின் கருத்து என சாதுரியமாக ஒரு நாட்டின் உள்ளடக்கிய ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்
பெயரை அங்கு பதிவு செய்தார்
என்பது பெருமைக்குரிய விஷயம் உலக நாட்டு சபையில் இதுவரை உலக நாடுகளில் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்கள் மன்னர்கள் பெயர் மட்டுமே இடம் பெற்ற சபையில்
நமது இந்திய நாட்டின் தமிழ் மாநில முதல்வர் எம்ஜி ராமச்சந்திரன் பெயரைப் பதிய வைத்தது சாணக்கியத் தனமாகும் இத்தகைய சாணக்கிய குணம் நிறைந்த அரசியல் வாதி பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் பேரறிஞர் சி.என். அண்ணாத்துரையால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் செம்மண் பூமியின் மைந்தராக இன்றும் பண்ருட்டியார் அரசியலில் முன்னோடியாக உள்ளார் என்பது தான் வரலாறு.எடப்பாடி கே பழனிச்சாமி நினைத்தாலும் பொதுச்செயலாளர் அதிமுகவில் சசிக்கலா நடராஜன் மற்றும் அமைப்பு செயளாலர் பன்ருட்டி எஸ். இராமச்சந்திரன் செயல்பாடு தடுக்க முடியாது மேலும் அமமுக இணைப்பு நடந்த பின்னர் எடப்பாடி கே.பழனிச்சாமி நிலை தான் வித்தியாசமான நிலையில் இருக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
கருத்துகள்