முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைமை ஆசிரியை இரஞ்சிதம் கொலையில் சம்பந்தப்பட்ட அவரது உறவுப்பெண் கள்ளக்காதலனுடன் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கான்பாநகரில் கணவர் உயிரிழந்த நிலையில் சொந்த வீட்டில்


தனியாக வசித்தவர், ரஞ்சிதம்(வயது 52). தென்மாபட்டு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றியவர். செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி புதன்கிழமை அவரது வீட்டில் கால்,கை நரம்புகள் அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்ப நாயை வரவழைத்து தீவிரமாக விசாரித்தனர். தடயங்கள் கிடைக்காத நிலையில், கொலைக் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் திணறிய நிலையில் கடந்த நான்கு நாட்களாக ரஞ்சிதத்தின் உறவினர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில், தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தின் அக்காவின் மகளும், அவருடன் பிறந்த தம்பி பாண்டிவேல் முருகனின் மனைவியுமான நதியா (வயது 32) மீது காவல்துறையினருக்கு சந்தேகமெழுந்தது

திருப்பத்தூர் வட்டம் நெடுமரம் கிராமத்தில் வசித்த நதியா, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்னரே வந்திருக்கும் தகவல் காரணமாக காவல்துறையினரின் சந்தேக வளையத்திலிருந்த அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  காவல்துறையினர் தரப்பில் வரும் தகவல்:-, கொலை செய்யப்பட்ட ரஞ்சிதம், அவரது அக்கா மகள் நதியாவை, அவரது தம்பி பாண்டிவேல் முருகனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்களுக்கு மூன்று குழந்தைகளுள்ள நிலையில் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் பாண்டிவேல் முருகன், மனைவி நதியாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், தனது அக்கா ரஞ்சிதத்திற்கு நேரடியாகப் பணம் அனுப்பி, வீட்டுச்செலவுக்கு மட்டும் மனைவி நதியாவிடம் பணம் கொடுக்கும் படி கூறியுள்ளார். 

அதனால் நதியாவின் சித்தி ரஞ்சிதம் மீது நதியாவுக்கு கோபமிருந்து வந்துள்ள நிலையில் நதியாவின் எதிர் வீட்டில் வசிக்கும் திருமணமாகாத நபரான சூர்யா (வயது 25) என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்ட நிலையில் பின் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்த நிலையில் நதியா  கள்ளக்காதலன் சூர்யாவிடம், அவரது சித்தி ரஞ்சிதம் அவரது கணவன் அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு, எனக்குத் தராமல் என்னை கடன்காரியாக அலைய விடுகிறாள்.

அவள் உயிரோடு இருக்கும் வரை நான் நிம்மதியாக வாழ முடியாது எனக் கூறிய நிலையில், சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரிடம் சூரியா கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு வரை படித்த சூர்யா, கொலை செய்தால் எப்படித் தப்பிக்கலாம்? சி.சி.டி.வி கேமரா ஹார்டு டிஸ்க்கை எப்படிக் கழட்டுவது? எனத் தெரிந்து கொள்வதற்காக அது சம்பந்தப்பட்ட காணொளிகளை யூடியூப்பில் கடந்த ஒரு மாதமாகப் பார்த்துக்  கற்றுள்ளார். மேலும், தடயங்கள் சிக்காத சந்தேகம் வராத வகையிலும் கொலை செய்து கொள்ளையடிப்பதற்காநதியாவிடம் பணம் கொடுக்கும்படி சொல்லியுள்ளார். இந்த நிலையில்,  செப்டம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை நதியாவின் கணவர் ரூபாய் 1.50 லட்சம் பணம் அனுப்பியுள்ளது தெரியவந்த நிலையில். அன்றிரவு 9:30 மணி அளவில் தலைமை ஆசிரியை இரஞ்சிதம் வீட்டின் பின்புற சுவரேறிக்குதித்த பின்னர் அங்கு சூர்யா, மறைந்திருந்து தூங்குவதற்கு முன்பாக ரஞ்சிதம் வீட்டின் பின்புறமுள்ள கழிப்பறை சென்று விட்டு வீட்டுக்கு செல்லும் போது பின் தொடர்ந்த சூர்யா, கையுறை மாட்டிக்கொண்டு தலைமை ஆசிரியர் ரஞ்சிதத்தின் மூக்கையும் வாயையும் பொத்தி, இடதுகையால் கழுத்தை நெறித்து கீழே தள்ளியுள்ளார்.

அதனால் ரஞ்சிதம் மயங்கிக் கிடந்த நிலையில் அவர் வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 60 பவுன் நகைகள் மற்றும் சுமார் ரூபாய் 2.50 லட்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற போது மயக்கம் தெளிந்த ரஞ்சிதம் முனங்கிய சத்தம் கேட்டதால், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து யூடியூபில் பார்த்தவாறு ரஞ்சிதத்தின் வலது கை நரம்பை அறுத்துள்ளார். அப்போதும் உயிர் பிரியாததால், தொடர்ந்து கால் நரம்பையும் அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிள்ளார். கொள்ளையடித்த நகை, பணத்தை கள்ளக்காதலி நதியாவிடம் கொடுத்து விட்டு எதுவும் நடக்காதது போல தனது வீட்டிற்குச் சென்று விட்டார்.

நதியாவின் சித்தி இரஞ்சிதம் கொலையில் அவர் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக, அடுத்த நாள் காலை காவல்துறையினர் அங்கு வருவதற்கு முன்னதாகவே நதியா சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். எனவே, திருப்பத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி நதியாவின் மீது சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அடுத்தடுத்து வருகை தந்ததால், அப்போது தப்பித்துக் கொண்ட நதியா எதுவும் தெரியாதது போல துக்க நிகழ்வில் அழுது கொண்டு நடித்துள்ளார். மேலும், அவரது கள்ளகாதலன் சூர்யாவும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திருப்பத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று தனிப்படைகள் நடத்திய விசாரணையில் சிக்கிய நதியா, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர்களிடமிருந்து சுமார் 60 பவுன் நகைகள், ரூபாய் 2.20 லட்சம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், சிசிடிவி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...