முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனது தெய்வீகக் குரலால் உலகம் முழுவதையும் சகோதரி லதா வென்றார் பிரதமர் பெருமிதம்

அயோத்தியில் லதா மங்கேஷ்கர் சதுக்கத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

“தனது தெய்வீகக் குரலால் உலகம் முழுவதையும் சகோதரி லதா வென்றார்”

"அயோத்தியின் பிரமாண்ட கோவிலுக்கு பகவான் ஸ்ரீராமர் வருகை தரவுள்ளார்"

"ராமரின் ஆசீர்வாதத்துடன் கோவிலின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடப்பதைக் கண்டு நாடு பரவசம் அடைந்துள்ளது"

"இது 'பாரம்பரியத்தில் பெருமை' என்பதன் வலியுறுத்தலோ, நாட்டின் வளர்ச்சியின் புதிய அத்தியாயமு் ஆகும்"

"பகவான் ராமர் நமது நாகரிகத்தின் அடையாளமாகவும் மற்றும் நமது ஒழுக்கம், பண்பாடு, கண்ணியம், கடமை ஆகியவற்றில் வாழும் சித்தாந்தமாகவும் உள்ளார்"



"சகோதரி லதாவின் கீர்த்தனைகள் மூலம் நமது மனம் பகவான் ராமரில் மூழ்கியது "

"சகோதரி லதா பாடிய மந்திரங்கள் அவரது குரலை மட்டும் எதிரொலிக்காமல், அவரது நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் தூய்மையையும் எதிரொலித்தது"

" சகோதரி லதாவின் குரல் இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நீண்ட காலத்திற்கு இணைக்கும்"

அயோத்தியில் லதா மங்கேஷ்கர்  சதுக்கத்தை அர்ப்பணிக்கும்  நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்தி மோடி  இன்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சகோதரி லதாவின் பிறந்த தினம் ஒவ்வொரு இந்தியரின் வணக்கத்துக்குரியதும் மற்றும் பாசத்திற்குரியது என்றார். அன்னை சந்திரகாந்தாவை  வழிபடும் நவராத்திரி விழாவின் மூன்றாவது நாளையும் அவர் கொண்டாடினார். வணங்கும் ஒருவர், கடுமையான தவத்தில் ஈடுபடும்போது, ​​அன்னை சந்திரகாந்தாவின் அருளால் அவரோ அல்லது அவளோ தெய்வீகக் குரல்களை அனுபவித்து   உணர்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். “சகோதரி லதா, அன்னை சரஸ்வதியை வணங்குபவர்களில் ஒருவர்.அவர், தனது தெய்வீக குரலால் உலகம் முழுவதையும் வியக்க வைத்தார். சகோதரி லதா தவம்  செய்தார், நாம் அனைவரும் வரம் பெற்றோம்!” என்று பிரதமர் குறிப்பிட்டார். அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் சதுக்கத்தில் நிறுவப்பட்ட அன்னை சரஸ்வதியின் பிரமாண்டமான வீணை, இசைப் பயிற்சியின் அடையாளமாக மாறும் என்று மோடி சுட்டிக்காட்டினார். சதுக்கத்தில் உள்ள ஏரியில் ஓடும் நீரில் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட 92 வெள்ளைத் தாமரைகள் சகோதரி லதாவின் வாழ்நாளை குறிப்பதாக பிரதமர் மேலும் கூறினார்.

இந்த புதுமையான முயற்சிக்காக உத்தரபிரதேச அரசு மற்றும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தை பிரதமர் பாராட்டினார், நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக சகோதரி லதாவுக்கு தனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்தினார். "அவரது மெல்லிசை பாடல்கள் மூலம் அவரது வாழ்விலிருந்து நாம் பெற்ற ஆசீர்வாதங்கள், எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்று நான் கடவுள் ஸ்ரீராமரிடம் பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் மேலும் கூறினார்.

சகோதரி லதாவின் பிறந்தநாள் தொடர்பான பல உணர்ச்சிகரமான மற்றும் அன்பான நினைவுகள் பற்றிய குறிப்பிட்ட பிரதமர், ​​ அவருடன் பேசும் ஒவ்வொரு முறையும் அவரது பிரபலமான குரலின் இனிமை தன்னை ஈர்த்தது என்று கூறினார்."சகோதரி லதா, அடிக்கடி என்னிடம் கூறுவது: 'மனிதன் வயதினால் அறியப்படுவதில்லை, செயல்களால் அறியப்படுகிறான், மேலும் அவன் நாட்டிற்கு எவ்வளவு செய்கிறானோ, அவ்வளவு பெரியவன்!" என்று தொடர்ந்த திரு மோடி, "அயோத்தியின் லதா மங்கேஷ்கர் சதுக்கம் மற்றும் அவருடன் தொடர்புடைய அனைத்து நினைவுகளும் நாட்டின் மீதான கடமை உணர்வை உணர்த்த உதவும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைக்குப் பிறகு சகோதரி லதாவிடம் இருந்து தமக்கு அழைப்பு வந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், இறுதியாக வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சகோதரி லதா மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகக் கூறினார். சகோதரி லதா பாடிய ‘மன் கி அயோத்தி தாப் தக் சூனி, ஜப் தக் ராம் நா ஆயே’ என்ற பாடலை நினைவு கூர்ந்த பிரதமர், அயோத்தியின் பிரமாண்ட கோவிலுக்கு பகவான் ஸ்ரீ ராமர் உடனடியாக காட்சி கொடுத்தது  போல் இருந்தது என்று குறிப்பிட்டார். கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் ராமரை நிறுவிய சகோதரி லதாவின் பெயர் தற்போது புனித நகரமான அயோத்தியுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். ராம் சரித் மானஸை மேற்கோள் காட்டிய பிரதமர் “ராம் தே ஆதிக், ராம் கர் தாசா” என்று பாடினார். அதாவது ராமரின் பக்தர்கள் கடவுளின் வருகைக்கு முன்பே வந்துவிடுவார்கள். எனவே, அவரது நினைவாக கட்டப்பட்ட லதா மங்கேஷ்கர் சதுக்கம், பிரமாண்ட கோவில் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே நிறுவப்பட்டுள்ளது.

அயோத்தியின் பெருமைமிக்க பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்துவதையும், நகரத்தில் வளர்ச்சியின் புதிய விடியலையும் எடுத்துரைத்த பிரதமர், பகவான் ராமர் நமது நாகரிகத்தின் அடையாளம் என்றும், நமது ஒழுக்கம், பண்பாடு, கண்ணியம் , கடமை ஆகியவற்றின் வாழும் லட்சியமாக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். "அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை, இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும்  ராமர் இடம்பெற்றுள்ளார்" என்று மோடி மேலும் கூறினார். ராமரின் ஆசீர்வாதத்துடன் கோவில் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதைக் கண்டு நாடு பரவசமடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்

லதா மங்கேஷ்கர் சதுக்க இடம் அயோத்தியில் உள்ள பல்வேறு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்கும் முக்கிய தளங்களில் ஒன்றாகும் என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த சதுக்கம் ராம் கி பைடிக்கு அருகிலும், சரயு புனித நதிக்கு அருகிலும் உள்ளது. "சகோதரி லதாவின் பெயரில் ஒரு சதுக்கத்தை கட்ட இதைவிட, சிறந்த இடம் எது?", என்று பிரதமர் ஆச்சரியப்பட்டார். பல யுகங்களுக்குப் பிறகு அயோத்தி, ராமரைப் பெற்ற விதம் குறித்து கற்பனையோடு கூறிய பிரதமர், சகோதரி லதாவின் கீர்த்தனைகள் மூலம் நமது மனம் கடவுள் ராமரில் மூழ்கியதாக கூறினார்.

அது மானஸ் மந்திரமான 'ஸ்ரீ ராமச்சந்திர கிருபாலு பஜ் மன், ஹரன் பவ பய தருணம்' அல்லது மீராபாயின் 'பயோ ஜி மைனே ராம் ரத்தன் தன் பயோ' போன்ற கீர்த்தனைகளாக இருக்கலாம்; பாபுவுக்குப் பிடித்த ‘வைஷ்ணவ் ஜான்’ ஆகட்டும், அல்லது ‘தும் ஆஷா விஸ்வாஸ் ஹமாரே ராம்’ போன்ற இனிய மெல்லிசைப் பாடல்களாகவும் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தாலும், லதாவின் பாடல்கள் மூலம் பல நாட்டு மக்கள் ராமரை உணர்ந்திருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். "சகோதரி லதாவின் தெய்வீகக் குரல் மூலம் கடவுள் ராமரை உணர்ந்தோம் " என்று திரு மோடி  மேலும் கூறினார்.

சகோதரி லதாவின் குரலில் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலை கேட்கும்போது, ​​பாரத அன்னையின் பரந்த வடிவம் நம் கண்முன் தோன்றத் தொடங்குகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். மேலும், “சகோதரி லதாவின் குடிமைப் பணிகளில் எப்போதும் மிகுந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பது போலவே, அயோத்தியில் வாழும் மக்களுக்கும், அயோத்திக்கு வரும் மக்களுக்கும் கடமையில் ஈடுபாடு காட்டுவதற்கு இந்த சதுக்கம் ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் மேலும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த சதுக்கம், இந்த வீணை அயோத்தியின் வளர்ச்சியையும், அயோத்தியின் உத்வேகத்தையும் மேலும் எதிரொலிக்கும்"என்று கூறினார். சகோதரி லதாவின் பெயரிடப்பட்டுள்ள இந்த சதுக்கம், கலை உலகத்துடன் தொடர்புடைய மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக செயல்படும் என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். நவீனத்துவத்தை நோக்கி நகரும்போதும், அதன் வேர்களோடு இணைந்திருக்கும்போதும் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும்  எடுத்துச் செல்ல இது அனைவருக்கும் நினைவூட்டும் என்று தெரிவித்தார்.  "இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் கொண்டு செல்வது நமது கடமை" என்று திரு மோடி மேலும் கூறினார்.

தனது உரையில் நிறைவாகப் பேசிய பிரதமர், இந்தியாவின் ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் அதே வேளையில், இந்தியாவின் கலாச்சாரத்தை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "சகோதரி லதாவின் குரல் இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இனி வரும் காலங்களில் இணைக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...