முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலை குறித்து பாமக தலைவர் மத்திய அமைச்சருக்குக் கடிதம்

 உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எட்டிடங்களில் புறவழிச்சாலைகளை நான்குவழிச் சாலையாக மாற்றம் செய்ய கோரிக்கை 

தமிழ்நாட்டில் 79-ஆவது எண்  தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை - சேலம் இடையே  8  இடங்களில்  உள்ள புறவழிச் சாலைகளை இரு வழிச் சாலைகளில்  இருந்து நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரிகு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.                   

  தமிழ்நாட்டில்  தேசிய நெடுஞ்சாலை எண் 79 இல் உளுந்தூர்பேட்டை - சேலமிடையிலான 136 கி.மீ தொலைவிலுள்ள புறவழிச் சாலைகளை இரு வழிச் சாலைகளில்  இருந்து நான்கு வழிச்சாலைகளாக  மாற்ற நடவடிக்கை எடுக்கவும் 

 தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் சேலம் - உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ பாதையில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவும் ஒன்று. இந்த சாலையில்  8 இடங்களில் அமைந்துள்ள  புறவழிச் சாலைகளில்  4 வழிச்சாலை திடீரென இரு வழிச்சாலையாக மாறி விடும் நிலையில், அதை கவனித்து சமாளிக்க முடியாமல் அந்த சாலையில் பயணிப்பவர்கள் தடுமாறுகின்றனர். இந்த சாலை கிட்டத்தட்ட மரணப்பாதையாகவே மாறி விட்டது. அதனால் அந்த சாலையில் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், சேலம் - உளுந்துர்பேட்டை இடையிலான 136 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம்  கடந்த 2005-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணியை கட்டி, இயக்கி, ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் இன்ஃராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ. 941 கோடி ரூபாய்  செலவில்  நான்கு வழிச்சாலையாக மாற்றி 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் போக்குவரத்துக்கு திறந்து விட்டது. 

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த சாலையில் 97.37 கி.மீ  நான்கு வழிச்சாலை. மீதமுள்ள 38.99 கி.மீ நீள நெடுஞ்சாலை இருவழிச் சாலை ஆகும்.  இந்த நெடுஞ்சாலையில் மொத்தம் 8 இடங்களில், அதாவது  உடையாப்பட்டி (6.40 கி.மீ), வாழப்பாடி(4.62 கி.மீ),  நரசிங்கபுரம் மற்றும் ஆத்தூர் (7.20 கி.மீ), சின்னசேலம் (4.60 கி.மீ), கள்ளக்குறிச்சி (5.10 கி.மீ), தியாகதுருகம் (3.90 கி.மீ), எலவனாசூர்கோட்டை (4.00 கி.மீ), உளுந்தூர்பேட்டை (2.57 கி.மீ) ஆகிய இடங்களில் இரு வழி புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டன. 

2014-ஆம் ஆண்டில் தனியார் ஆலோசனை நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட சுதந்திரமான ஆய்வில்,  மேட்டுப்பட்டியிலுள்ள சுங்கச்சாவடியின் வழியாக ஒவ்வொரு மாதமும் இரு சக்கர ஊர்திகளை சேர்க்காமல் சுமார் 2 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் பயணிப்பதாக தெரியவந்தது. நடப்பு 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும்.

ஆனால், 8 இடங்களில் உள்ள புறவழிச்சாலைகளும் இரு வழிச்சாலைகளாகவே இருப்பதால்,  4 வழிச்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், புறவழிச்சாலை மட்டும் இருவழிச் சாலையாக இருப்பதை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. அதனால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட, இரவு நேரத்தில் பிரகாசமான ஒளிரும் விளக்குகள்  இல்லாமை, சாலைத் தடுப்புகளின் இடைவெளியிலும், சந்திப்புகளிலும் சூரிய ஒளியில் இயங்கும் மினுமினுப்பான்கள் அமைக்கப்படாமை, நான்கு வழிச்சாலைகள் இருவழிச்சாலைகளாக குறுகும் இடங்களில் பிரதிபலிப்பான்கள் இல்லாமை ஆகியவை தான் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கான  முதன்மைக் காரணம் ஆகும். விபத்து விகிதம் அதிகரிப்பதற்கான மிக முக்கியக் காரணம்  சாலையின் தவறான வடிவமைப்பு தான். எடுத்துக்காட்டாக, நெடுஞ்சாலை திடீரென நான்கு வழிச்சாலையிலிருந்து இருவழிச் சாலையாக மாறுவதால், நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் இருவழிச் சாலையிலும் அதேவேகத்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் 1036 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டு வாரியாக உயிரிழப்புகளின் விவரம் வருமாறு:

வரிசை எண் ஆண்டு உயிரிழப்புகளின் எண்ணிக்கை

1. 2011-  2012 139

2. 2012 - 2013 159

3. 2013 - 2014 100

4. 2014 -2015 86

5. 2015-  2016 105

6. 2016  -2017 93

7. 2017  -2018 75

8. 2018  -2019 100

9. 2019  -2020 60

10. 2020-  2021 57

11. 2021- 2022 ( ஆகஸ்ட் 23 வரை) 62

மொத்தம்  (11 ஆண்டுகள்) 1,036

இந்த நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்துகளால் ஏராளமான குடும்பங்கள் தங்களுக்கு வாழ்வாதாரம்  ஈட்டித்தடும் உறுப்பினர்களை இழந்துள்ளன,  நூற்றுக்கணக்கானவர்கள் தங்களின் உடல் உறுப்புகளை இழந்து, வாழ்வாதாரம் ஈட்ட முடியாமல் வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 8 இடங்களில் உள்ள புறவழிச்சாலைகளிலும் இருவழிச்சாலைகளை நான்குவழிச் சாலைகளாக மாற்றுவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டாலும் கூட, சாலை விரிவாக்கப்பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 8 இடங்களிலும் இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும், மீண்டும்  கோரிக்கை விடுத்தும் கூட, அதன் மீது ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் வருத்தமளிக்க்கிறது.

எனவே, தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் சேலம் - உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் 8 இடங்களில் உள்ள இருவழி புறவழிச்சாலைகளையும் 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேன்டும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் ஆணையிட வேண்டும்; அதன்மூலம் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவதை  தடுக்க வேண்டும் என்று 

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் வாயிலாக கேட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...