முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மதுரையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முன்னால் முதல்வர் அறிஞர் டாக்டர் சி.என்.அண்ணாதுரை  பிறந்த நாளை முன்னிட்டு



பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரை உள்ள வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மதுரையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.   முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், குழந்தைகள் உணவின்றி  பசியுடன் வகுப்பிற்கு வருவதனால், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பது, குழந்தைகளிடையே இரத்த சோகை - இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைப்பது, மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் மற்றும் பள்ளித் தக்கவைப்பை அதிகரிப்பது, வேலை செய்யும் பெற்றோரை ஆதரிப்பது மற்றும் அவர்களின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகை செய்தல். ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல். பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல். போன்ற காரணங்களால் முன்னால் முதலமைச்சர்  எம்.ஜி.ஆர் முதலில் ஊரகப் பகுதிகளில் 01.07.1982 ஆம் தேதியன்றும் நகர்புறங்களில் 15.09.1982 ஆம் தேதியன்றும் உருவாக்கப்பட்டது தான் சத்துணவுத் திட்டமாகும் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலம் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிகள், தேசிய தொழிலாளர் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்படுகிறது.




இத்திட்டத்திற்கான நிதி மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒதுக்கீடு மூலம் செயல் படுத்தப்படுகிறது. திட்டத்திற்கென மாநில அரசால் உணவூட்டு மானியங்கள், சமையலறை பழுதுபார்ப்புப் பணிகள், புதிய சமையலறையுடன் கூடிய இருப்பறை கட்டிடங்கள் கட்டுதல், எரிவாயு இணைப்பு வழங்குதல், சத்துணவு மையங்களுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசால் தேசிய திட்டம், கண்காணிப்பு, மேலாண்மை மற்றும் மதிப்பீடுகள் திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகள், திட்டத்தினை பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக விளம்பரங்கள் மேற்கொள்ளுதல், சத்துணவு பணியாளர்களுக்கு அவ்வப்போது புத்தாக்க பயிற்சிகள் வழங்குதல் ஆகிய பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


சத்துணவு மையங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான அலுவலர்களுக்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்துணவுத்திட்டத்திற்காக கிராம அளவிலான குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுக் குழு, வட்டார, கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சத்துணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் காரணத்தை விளக்கி,க் காண்பதற்கு முன் கடந்த கால வரலாற்றைப் பார்க்கலாம் அப்போதைய சென்னை மாநகராட்சித் தலைவரும், நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயர், பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் வலிமையை 'பெரிய அளவில்' பாதித்தது என்றார். அப்போது பள்ளியில் 165 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இத்திட்டத்தில் மேலும் நான்கு பள்ளிகள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து பள்ளிகளின் மொத்த மாணவர் சேர்க்கை 1922-23 ஆம் ஆண்டில் 811 ஆக இருந்தது 1924-25 ஆம் ஆண்டில்  1,671 ஆக உயர்ந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் 1957 ஆம் ஆண்டில்  அப்போதைய தமிழக முதல்வர்  காலம்சென்ற கே.காமராஜர் , மாநிலம் முழுவதுமுள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் ஆண்டுக்கு 200 நாட்கள் மதிய உணவு திட்டத்தை  அறிமுகப்படுத்தினார். 1982-ஆம் ஆண்டு  தமிழக முதல்வரான டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்தான உணவை உறுதி செய்யும் திட்டத்தை அறிவித்தார்.2 முதல் 5 வயது மற்றும் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜூலை மாதம் 1982 ஆம் ஆண்டு முதல் காப்பீடு வழங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 1982 ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டில், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது.  .1989-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய தமிழக முதல்வர் காலம்சென்ற கலைஞர் மு. கருணாநிதியால், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவித்து வழங்கும் முட்டைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 2007-ஆம் ஆண்டு அதை வாரத்தில் மூன்று நாட்களும் வழங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டில், வாரத்தில் ஐந்து நாட்கள் அவித்த முட்டையும், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டது. இதனால் சுமார் 5.7 மில்லியன் மாணவர்கள் பயனடைந்தனர். 2013-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காலம்சென்ற செல்வி. ஜெ.ஜெயலலிதா  குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மசாலா முட்டைகளுடன் பலவகையான கலவை உணவுகளைச் சேர்த்தார்.


சத்துணவுத் திட்டம் தற்போது 43,243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்பட்டு, தினமும் 48.57 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.  இது 5 முதல் 9 வயதுக்குட்பட்ட ஆரம்பப்  பிரிவினருக்கும், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட உயர் தொடக்கப் பிரிவினருக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள், மொத்தமாக ஒரு வருடத்தில் 210 நாட்களுக்கு, சூடான சமைத்த சத்தான உணவு வழங்கப்படுகிறது.


காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகளுக்கும் ஒரு வருடத்தில் 312 நாட்களுக்கு, சூடான சமைத்த சத்தான பல்வேறு உணவு வழங்கப்படுகிறது. இச் சூழலில் தற்போது காலை உணவு வழங்கும் திட்டம் முதல்வர் துவங்கி வைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...