ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் அவர் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் பதிவிட்டிருப்பதாவது:
“ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து துயரடைந்தேன். இந்த சோக தருணத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்