உலக அளவில் பொட்டாஷ் விநியோகத்தில் மிகப்பெரிய நிறுவனமான கனடாவின் கான்போடெக்சுடன இந்திய உர நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
வேளாண் சமூகத்துக்கு நீண்ட காலத்திற்கு உரம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக இந்தியாவின் உர நிறுவனங்களான கோரமண்டல் இன்டர்நேஷனல், சம்பல் உரங்கள் மற்றும் இந்திய பொட்டாஷ் நிறுவனங்கள் கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனத்துடன், செப்டம்பர் 27,2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவிடம் இன்று வழங்கப்பட்டது. உலக அளவில் பொட்டாஷ் விநியோகத்தில் மிகப்பெரிய நிறுவனமான கனடாவின் கான்போடெக்ஸ் ஆண்டுக்கு 130 லட்சம் மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது.
இதுகுறித்து தெரிவித்த டாக்டர் மன்சுக் மாண்டவியா, விநியோகம் மற்றும் விலையில் உள்ள நிலையற்ற தன்மையை இந்த ஒப்பந்தம், குறைக்கும் என்றும், நீண்ட காலத்திற்கு பொட்டாஷ் உரம் இந்தியாவிற்கு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய உர நிறுவனங்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷை கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனம் விநியோகம் செய்யும் என்று கூறினார்.
மேலும் இந்த ஒப்பந்தம் மூலம், வேளாண் சமூகத்தின் நலனும், நாட்டின் உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.
கருத்துகள்