மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் எனச் ஜாதிச் சான்றிதழ் பெற்றால் செல்லாதென தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் தகவல்
ஆதிதிராவிடர்கள் மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் எனச் சாதி சான்றிதழ் பெற்றிருந்தால் அது செல்லாதென
“ தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளதில் 100 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது.
இவற்றில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்கள் மீது நிகழும் வன்முறைகளில் இராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனியாக பாதை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக சமீபத்தில் வந்த புகாரையடுத்து
சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.அதனைத் தொடர்ந்து பேசியவர்,ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக அந்த வகுப்பில் இருந்து வெளியேறி விடுகின்றனர். மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் பெற்றிருந்தால் அது செல்லாது.
மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் அவர்கள் அந்த சான்றிதழைப் பயன்படுத்தி தற்போது பலர் அரசு பணிகளில் உள்ள நிலை குறித்து தகவல் உண்டா என்பது குறித்தும் பல புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது. போலிச் ஜாதி ச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார். மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ்.
போலி சான்றிதழ் வைத்து அரசு பணிகளில் சேர்வதும் குற்றம் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹல்தார் அறிவுறுத்தினார் மேலும் இது குறித்து முழுமையான விபரங்கள் எதுவும் அவர் வெளியிடவில்லை மதம் மாறிய பலர் இன்னும் ஆதிதிராவிடர் சலுகைகள் பெற்று தற்போது பணியில் இருப்பதை ஆய்வுகள் செய்து ஆதாரங்களுடன் தகவல் உண்டு
ஆனால் அதை சட்ட வழியில் தீர்வு காண இனிமேல் சட்டப்படி வாய்ப்பாக இது அமையும். என்பதை நாம் அறிவோம் அதை செய்தியாளர்கள் துணை ஆணையர் மூலம் பதிலாகப் பெற முயலவில்லை என்பதே தற்போது உள்ள நிலை.
கருத்துகள்