முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உத்தராகண்ட் இளம் பெண் கொலையில் பாஜகவின் மூத்த தலைவர் வினோத் ஆர்யா மகன் உள்ளிட்ட மூவர் கைது

உத்தராகண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின்


மூத்த தலைவர் வினோத் ஆர்யா. முன்னாள் அமைச்சராவார்.


அவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகில் சொகுசு விடுதி  உள்ளதில் வரவேற்பாளராகப் பணியாற்றிய அங்கிதா பண்டாரியை (வயது 19) ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் காணவில்லை. அது குறித்து அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல்துறையில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறை அங்கிதாவை தீவிரமாகத் தேடிய. நிலையில் விசாரணையின் போது வரவேற்பாளர் அங்கிதாவை, புல்கிட் ஆர்யா தான் கொலை செய்தாரென்று தெரியவே. புல்கிட் ஆர்யா உள்ளிட்ட  மூவரை காவல்துறை கைது செய்து விசாரிக்கின்றனர்.

அங்கிதாவின் உடலையும் மீட்டனர். அங்கிதா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புல்கிட் ஆர்யாவின் சொகுசு விடுதியை இடித்துத் தள்ள மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் விடுதி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி விடுதியின் குறிப்பிட்ட பகுதிகளை அதிகாரிகள் இடித்தனர்.இதனிடையே புல்கிட்டின் தந்தை வினோத் ஆர்யாவுக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின்போது சொகுசு விடுதியின் சில பகுதிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட புல்கிட் ஆர்யாவின் தந்தையான வினோத் ஆர்யாவை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து  மேலிடம் நேற்று முன்தினம் நீக்கியது.

மேலும், புல்கிட் ஆர்யாவின் சகோதரனான அங்கித் ஆர்யாவையும் கட்சியிலிருந்து நீக்கியத. இளம்பெண் கொலையைக் கண்டித்து உத்தராகண்டின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்றதனால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கொலையான இளம்பெண்ணின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

காவல்துறை விசாரணையில் விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா மற்றும் விடுதி ஊழியர்கள் சேர்ந்து அங்கிதாவை கொலை செய்திருப்பது 23-ஆம் தேதி தெரியவந்தது. ரிஷிகேஷில் உள்ள கால்வாயிலிருந்து அவரது உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.

கொலை வழக்கு தொடர்பாக புல்கிட் ஆர்யா, விடுதி மேலாளர் சவுரப் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா பண்டாரியை பாலியல் தொழிலில் தள்ள புல்கிட் ஆர்யாவும் ஊழியர்களும் வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.

அங்கிதா பண்டாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று கிடைத்தது. அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதும், உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதும் இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அவரது உடல் நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை தகனம் செய்ய மறுத்து உறவினர்கள் ஸ்ரீநகரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தியதால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் சாலையில் போக்குவரத்து முடங்கியது.

கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று காவல்துறை தரப்பில் உறுதி அளித்ததன் பேரில் அங்கிதாவின் உடலை தகனம் செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து என்ஐடி படித்துறையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...