முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரளாவில் பிரதமர் காலாடி தரிசனம் மற்றும் கொச்சின் விழாவில் உரை

காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் பிரதமர் வழிபாடு



காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழிபட்டார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் வழிபாடு செய்ததை பெரும் பாக்கியமாகவும், ஆசிர்வாதமாகவும் கருதுகிறேன். நமது கலாச்சார பாதுகாப்பு தொடர்பான ஆதி சங்கராச்சாரியாரின் பெரும் பங்களிப்பிற்காக எதிர்கால சந்ததியினர் கடமைப்பட்டிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கொச்சியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்திற்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்று வழிபட்டார்.     மேலும்          கொச்சியில் ரூ.4500 கோடி மதிப்பிலான மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

பிரதமர் திரு.நரேந்திர மோடி  கொச்சியில் ரூ.4500 கோடி மதிப்பிலான மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  முன்னதாக காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் பிரதமர் வழிபட்டார்.

பிரதமர் பேசும் போது, “ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருப்பதை உணர முடிகிறது.  இந்த நல்ல நாளில் கேரளாவில் உள்ள பல்வேறு பகுதிகளை இணைப்பதற்கான திட்டங்களை தொடங்கி வைப்பது சிறப்பு. இந்த திட்டங்கள் மூலம் பொது மக்களின் வாழ்வியலை முன்னேற்றி அவர்கள் தங்களது பணிகளை தடையின்றி செய்வதற்கு பயன்படும். நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மூலமே வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். கடந்த 2017-ம் ஆண்டு கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்று அதன் முதல் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைப்பதிலும், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.

கொச்சியில் உள்ள ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் செயல்பாடுகளால் அனைத்து போக்குவரத்தும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் விளைவாக மக்கள் பயணம் செய்யும் நேரம் குறைக்கப்படுகிறது. சாலைகளில் போக்குவரத்து குறைவது மட்டுமல்லாமல் காற்று மாசும் குறைகிறது.

கடந்த 8 வருடங்களாக மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதன்மையான போக்குவரத்தாக மாற்றுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. மேலும், மத்திய அரசு, மாநில தலைநகரங்களுக்கு மட்டுமின்றி, பெரிய நகரங்களுக்கும் மெட்ரோ சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில், அடுத்த 30 ஆண்டுகளில் 250 கிலோ மீட்டர் பாதைகள் மட்டுமே இணைக்கப்பட்டன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் மட்டும், 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான மெட்ரோ வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், 1000 கிலோ மீட்டருக்கும் மேலான மெட்ரோ வழித்தடப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “நாங்கள் தற்போது இந்திய ரயில்வே துறையை முற்றிலுமாக மாற்றி வருகிறோம். நாட்டிலுள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் விமான நிலையங்களை போன்று மேம்படுத்தப்பட்டு வருகின்றன” எனவும் தெரிவித்தார்.

கேரளாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்புப் பணிகளை எடுத்துரைத்த பிரதமர், 1 லட்சம் கோடி மதிப்பீட்டில் விவசாயம் முதல் தொழில்துறை வரை பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.




 பிரதமர் தனது உரையின் நிறைவில், “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரது நம்பிக்கையை பெறுவோம், அனைவரும் முயற்சி செய்வோம்” என்ற கொள்கைகளின் அடிப்படையில் மத்திய அரசு நாட்டை மேம்படுத்தி வருவதாக தெரிவித்தார். கேரளாவின் கொச்சின் மெட்ரோ மற்றும் ரயில்வே தொடர்பான முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்து நி்கழ்த்திய உரையின் தமிழாக்கம்


கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமதுகான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராய் விஜயன் அவர்களே,  கேரள அமைச்சர்கள் மற்றும்  பிரமுகர்களே, கொச்சி நகரின் சகோதர சகோதரிகளே!

இன்று கேரளாவின் அனைத்துப் பகுதிகளும் ஓணம் பண்டிகையில் மூழ்கியிருக்கிறது. இந்த  உற்சாகமான விழாவின் போது  கேரளாவிற்கு ரூ.4,600 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போக்குவரத்துத் திட்டங்கள்  பரிசளிக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

கொச்சி மெட்ரோவின் அலுவா-பலரிவட்டம் பிரிவை  2017 ஜூன் மாதத்தில் தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்ததை நினைவு கூர்கிறேன். கொச்சி மெட்ரோ முதல் கட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். மேலும், இரண்டாவது கட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கொச்சியின் இந்தத் திட்டம் ஒட்டுமொத்த தேசத்தின் நகர்ப்புற மற்றும் போக்குவரத்து வளர்ச்சிக்கு புதிய திசையை வழங்கும்.  கொச்சியில், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்  செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த ஆணையம்  மெட்ரோ, பேருந்து, நீர்வழித் தடங்கள் ஆகிய அனைத்து போக்குவரத்து முறைகளையும் ஒருங்கிணைக்கும்.


தலைநகரிலிருந்து மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ வலைப்பின்னலை, மத்திய அரசு விரிவுப்படுத்தியுள்ளது. முதலாவது மெட்ரோ ரயில், நாற்பது ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 30 ஆண்டுகளில், நாட்டில் 250 கிலோ மீட்டருக்கும் குறைவாகவே மெட்ரோ வலைப்பின்னல் தயாரானது.  ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான புதிய வழித்தடங்கள் தயாராகி உள்ளன.  ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான மெட்ரோ வழித்தடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கேரளாவின், போக்குவரத்துத் தொடர்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.  கேரளாவின்  வாழ்வாதாரம் என்று அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை-66, ஆறு வழித்தடமாக  மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ரூ.55,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.

சமூகத்தின் மீது அக்கறையும், கவலையும் வாழ்க்கையின் பகுதியாக இருப்பது கேரள மக்களின் தனிச்சிறப்பாகும். ஒரு சில நாட்களுக்கு முன் கேரள மண்ணில் தோன்றிய அன்னை அமிர்தானந்தமயி அவர்களின் ஆசிகளை நான் பெற்றேன். அவரது கருணையால் ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனையை திறந்து வைக்கும் வாய்ப்பை நான் பெற்றேன்.

நண்பர்களே,

இத்தகைய வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்களுக்கு நான் மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் வாழ்த்துகள்


மிக்க நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...