சிறப்பு இயக்கம் 2.0- மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக செயலாளர ஆய்வு
அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை தொடரும் "சிறப்பு இயக்கம் 2.0" இன் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா, காணொலி மூலம் உயர்மட்டக் கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினார்.
நிலுவையில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், பிரதமர் அலுவலக குறிப்புகள், பொதுமக்கள் குறைகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள், மாநில அரசின் குறிப்புகள் போன்றவற்றுக்குத் தீர்வு காணவும், அலுவலக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் போன்றவற்றின் தூய்மையை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
"சிறப்பு இயக்கம் 2.0" இன் ஒரு பகுதியாக, அமைச்சகம் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிலுவையில் உள்ள கோப்புகளை அப்புறப்படுத்துவது முதல், கள அலுவலகங்களில் தூய்மையை பராமரிப்பது வரை. நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோரின் வசதிக்காக, தேசிய நெடுஞ்சாலைகள் பள்ளங்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்யவும் அமைச்சகம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த இயக்கத்தின் கீழ், அக்டோபர் 29 ஆம் தேதி வரை, களையெடுப்பதற்காக அடையாளம் காணப்பட்ட 7,060 கோப்புகள் இதுவரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகள், பிராந்திய அலுவலகங்கள் உள்ளிட்ட 2,466 இடங்களில் தூய்மைப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரச்சாரத்தின் போது குப்பைகள், கழிவுகளை அப்புறப்படுத்தியதன் மூலம் அமைச்சகம் ரூ.7.07 லட்சம் ஈட்டியுள்ளது. குப்பைகள் அகற்றப்பட்ட பிறகு 1,936 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்