முடிசூடா மன்னர்கள் மருது சகோதரர் 221 வது குருபூஜை விழாவை
முன்னிட்டு இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆண்டுதோறும் போல அரசு விழா அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி 1801 ஆம் ஆண்டில் துவங்கி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஜெனரல் ஆக்னியூ தலைமையில் மருது பாண்டியர் சகோதரர்கள், அவர்களது போர்ப்படையில் பணியாற்றிய தளபதிகள், மருது பாண்டியர்களின் உறவினர்களின் ஆண் வாரிசுகளான 10, 12 வயதே நிரம்பியபாலகர்களைத் தூக்கிலிட்ட கொடுமை உலக வரலாற்றில் ஒப்பீடு சொல்லவியலாத நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகளை நேரில் கண்ட ஆங்கில ராணுவ அதிகாரி வெல்ஸ், ராணுவச் சட்டப்படி அவற்றைப் பொது வெளியில் தெரிவிக்க இயலவில்லை.
எனவே, லண்டன் சென்ற பின் ஜே.கோர்லே என்கிற எழுத்தாளர் மூலமாக Mahradu, an Indian Story of the Beginning of the Nineteenth Century: With Some Observations (1813) என்ற நூல் மூலம் விவரிக்கிறார்.
சிவகங்கைச் சமஸ்தானத்தில் திருப்பத்தூர் கோட்டை அருகில் நடைபெற்ற கோரமுகம் காட்டிய படு கொலைகளை ஆங்கிலேயக் ராணுவ அதிகாரியாலேயே பொறுக்க முடியவில்லைஎன்றால், எத்தகைய கொடூரமான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன
என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கோர்லே 10, 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இராணுவ அதிகாரி தெரிவித்த செய்திகளைத் தானே அச்சிட்டு வெளியிட்டுள்ளார் என்றால், இவை குறித்த செய்திகள் வெளிவரக் கூடாது என்பதில் எத்தகைய அச்சுறுத்தலும், அபாயகரமான சூழ்நிலைகளும் நிலவியிருக்க வேண்டும் என்பதை நாம் இப்போது அனுமானிக்கலாம்.
மன்னர்கள்
மருது பாண்டிய சகோதரர்களும், அவர்களது உறவு ஆண் வாரிசுகளும், தளபதிகளும், போராளிகளும் சிவகங்கை– திருப்பத்தூர் பகுதிகளில் கண்ணில்பட்டவுடன் உரிய விசாரணையும் மேலிட ஆணையுமின்றி அழித்தொழிப்பதற்கு ஆங்கிலேயர்களும் இங்குள்ள துரோகிகளும் இணைந்து திட்டமிட்டது தான் காரணம்.
இந்தக் கொடூரங்களால் கிடைத்த பயனை எதிரிகளும் துரோகிகளும் பங்கிட்டுக்கொண்ட நிகழ்வுகள் வரலாற்றில் தெளிவாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
இந்தக் கொடூரங்களால் கிடைத்த பயனை எதிரிகளும் துரோகிகளும் பங்கிட்டுக்கொண்ட நிகழ்வுகள் வரலாற்றில் தெளிவாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் மன்னர் ஹைதரலியின் படைத் தளபதி திப்பு சுல்தான் 1799 ஆம் ஆண்டில் மரணமடைந்தநிலையில், ஆங்கிலேயருடைய முழுக் கவனமும் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஆதிக்கத்திற்கு அடிபணியாத இராஜ்ஜியங்கள், பாளையங்கள் மீது பாய்ந்தது. படிப்படியாக வாரிசுரிமை, வரிபாக்கி, ராணுவ உதவி என சுதேசி மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் பிரச்சினைகளை உருவாக்குவதும், அந்தப் பிரச்சினைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அடிபணியாத அல்லது இசைவு தராதவர்களின் ராஜ்ஜியங்களையும் பாளையங்களையும் ராணுவ பலத்தின் மூலம் ஆக்கிரமித்துக் கைவசப்படுத்தினர். அப்பகுதிகளுக்குப் ‘பொம்மை ராஜா’க்களையும் போலி ஜமீன்தார்களையும், பாளையக்காரர்களையும் உருவாக்கும் திட்டப்படி ஆங்கிலேயர்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்கள்.
இந்த இருண்ட அரசியல் சூழ்நிலையில்தான் ஆங்கிலேயரின் ராணுவ பலத்துக்கும் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சிக்கு மருது பாண்டியர்கள் திட்டமிட்டார்கள். இதற்கான யுத்தக் கூட்டணியும் அமைத்திருந்தார்கள். இந்த விவரங்களையும் நடவடிக்கைகளையும் ஆங்கிலேயர்கள் ஒற்றர்கள் மூலம் அறிந்துகொண்டார்கள். திப்பு சுல்தான் போர்க்களத்தில் இறந்துவிட்டமையாலும் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் தொடர்ந்து போர் நடந்துகொண்டிருந்ததாலும் ராணுவ உதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதைத் தீர்க்கமாக அறிந்து தான் ஆயுதம் ஏந்திய மக்கள் புரட்சிக்கு மன்னர்கள் மருது பாண்டியர்கள் திட்டமிட்டார்கள்.
அதன் முதல் வெளிப்பாடாக சின்ன மருது பாண்டியர் தலைமையில் திருச்சிராப்பள்ளி ஆர்க்காடு நவாப் கோட்டைக்கும் திருவரங்கம் கோயிலுக்கும் சென்று ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதியன்று பகிரங்கமாக மக்கள் பார்வைக்கு ஒட்டினர். இந்தச் செய்தி அறிந்த ஆங்கிலேய ராணுவம் சிவகங்கைப் பகுதியை முற்றுகையிட்டது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை வெளியிட்டு, ஆங்கிலேயப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்தவர்கள் மட்டுமல்ல, தங்களது உறவினர்களின் ஆண் வாரிசுகளையே முழுமையாக இந்த மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்கள் சின்ன மருது மகன் துரைச்சாமி சிறுவயதில் பினாங்குத் தீவுக்கு நாடுகட்தப்பட்ட நிகழ்வும். ஆனால், இந்த நிகழ்வுக்கு 50 ஆண்டுகள் கழித்து 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிப்பாய்க் கழகம் என எழுச்சியை முதல் சுதந்திரப் போராட்டம் எனப் பதிவுசெய்திருப்பது வரலாற்றுப் பிழையாகும்.
தென்னகத்தில் நடைபெற்ற இந்தப் போர்க்களங்கள்தான் இந்தியத் திரு நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமாக இருக்க முடியும். அதற்கான சான்றுகள் பல உண்டு. இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்திக்கொண்டு இந்தத் தென்னாட்டுப் போர்க்களங்கள்தான் முதல் சுதந்திரப் போராட்டம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஆங்கிலேய ஆதரவாளர்களின் கொடுமையும் கொடூரமும் நிறைந்த இந்தப் படுகொலைகள் நடைபெற்ற சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதல் சுதந்திரப் போராட்ட வீர மரணங்கள் குறித்த நினைவிடங்களை உள்ளடக்கிய அருங்காட்சியகம் தொல்லியல் துறை மூலம் உருவாக்கப்பட வேண்டும்.
இந்த முயற்சிகளின் முன்னெடுப்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருது பாண்டியர்களுக்குச் சென்னையில் சிலை வைப்பதாக அறிவித்துள்ளார். தென்னகத்தின் இந்தப் போர்க்களங்கள்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என அறிவிக்கவும், அது தொடர்பான அருங்காட்சியகம் அமைப்பதற்கும் மத்திய அரசின் உரிய ஒத்துழைப்புடன் முதல்வர் செய்து முடிப்பதன் மூலம் நமது பெருமை, புகழ், வீரத்தை உலகம் மீண்டும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.மன்னர்கள்
மருது பாண்டியர்களுக்கும், ஆங்கிலேயருக்கும் எதிரான அனைத்து தென்னகத்துப் போர்க்களங்களில் போராடி, உயிர் துறந்த, தூக்கிலிடப்பட்ட, நாடுகடத்தப்பட்ட முதல் சுதந்திரப் போராட்ட தீரர்களுக்கும் இந்தச் சிவந்த மண்ணில் உருவாக்கப்படவுள்ள நினைவாலயம் காலம் கடந்தும் இந்த வரலாற்றின் அணையா விளக்காக என்றும் ஒளி பரப்பிக்கொண்டேயிருக்கும். நினைவு நாள் இன்று நடைபெற்றதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வருவாய் மட்டும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் இராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் திருப்பத்தூர் "மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்". மருது பாண்டியர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தில் ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, விழா நடைபெறும் வளாகத்தில் காலையில் தேசியக் கொடியேற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், தமிழரசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகங்கை மாவட்ட செய்தி துறை அதிகாரிகள் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் . சண்முக சுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ செல்வன் மற்றும் வாரிசுதாரர்கள் சார்பில் த.ராமசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். அனைத்து அரசியல் கட்சிகளின் சார்ந்த பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு, திருப்பத்தூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் அஞ்சலி செலுத்தினார்.
மருதுபாண்டியர் நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது, முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் குணசேகரன், கண்ணகி, சாத்தையா, பிஎல்.ராமச்சந்திரன் ,காளிமுத்து மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரி, வக்கில் பி. கணேசன்,எஸ்.ரமேஷ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்