புவி அறிவியல் அமைச்சகம் 2022 அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, 1944 சக ஆண்டு கார்த்திகை மாதம் 3-ஆம் நாள் பகுதி நேர சூரிய கிரகணம்
சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது
பகுதி நேர சூரிய கிரகணம் 2022 அக்டோபர் 25-ஆம் தேதி (1944 சக ஆண்டு கார்த்திகை மாதம் 3-ஆம் நாள்) நிகழும். இந்தியாவில் சூரிய கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கி பெரும்பாலான இடங்களில் பார்க்கப்படும்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது.
அதிகபட்ச கிரகணத்தின்போது வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் இது குறைவாகவே காணப்படும்.
கிரகணத்தின் உச்சத்தின்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும் மேலும் ஆலயங்களில். அழகர்கோவில் கள்ளழகர் கோயில், ராக்காயி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களில் அக்டோபர்.,25 ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதியம் 12:00 மணிக்கு நடைசாத்தப்படும். அன்று மாலை 6:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கிரகண தோஷம் சாந்தி சிறப்பு ஆராதனை மற்றும் நித்தியபடி திருவாராதனங்கள் நடைபெறும். அக்டோபர்.,26 முதல் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ராமசாமி தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் தீபாவளிக்கு நோன்பு அனுசரிக்கப்படும். அன்று சூரிய கிரகணம் என்பதால் காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பர நாதர் கோவில், குமாரகோட்டம் முருகன் கோவில், கச்சபேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்துக் கோவில்களிலும் மதியம் 12 மணியிலிருந்து நடை சாத்தப்படுகிறது.
கிரகணம் மாலை, 5:00 மணி முதல் 6:20 வரை இருக்கிறது. பின் கோவில்களில் அதற்கான பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் வழக்கமான தரிசனம் நடைபெறும். அதனால் இரவு, 7:00 மணிக்கு பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கூறுகிறது.
காஞ்சிபுரம் குமாரகோட்டம் முருகன் கோவிலில் 25 ஆம் தேதி காலை 6:00 - 7:30 மணிக்குள் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலையிலிருந்து பக்தர்கள் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வருவர்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு அன்று காலை, 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது,
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடியில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், குருகோவில் என அழைக்கப்படும் கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
இங்கு நாளை மறுநாள் சூரிய கிரகணத்தை முன்னிட்டு பகல் 1:30 மணி முதல் மாலை 5:00மணி வரையில், கோவில் நடை சார்த்தப்படும். பரிஹார பூஜைகளுக்கு பின்னர் கோவில் நடை திறக்கப்படும்.
அமாவாசை நோம்பிருப்பவர்கள் நாளை முதல் நாளை மறுநாள் பகல் 1:30 மணிக்குள் இருக்கலாமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அக்டோபர்.,25 காலை 11:30 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு இரவு 7:00 மணிக்கு கிரகண பூஜைகள் முடிந்து நடை திறக்கப்படும். கந்த சஷ்டி விழா சுவாமி புறப்பாடு இரவு 7:31 மணிக்கு மேல் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.
கருத்துகள்