முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார் ஆம்னிப் பேருந்துகளுக்கான புதிய கட்டணம் அடித்தள மக்களின் பாதிப்பல்ல அமைச்சர் உடன்பாடு

தனியார் டூரிஸ்ட் அனுமதி ஆம்னி பேருந்துகள் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணத்துடன் பேருந்துகளை இயக்கி வரும் நிலையில்


ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டணங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளதன்படி, சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு குறைந்தபட்சமாக 1815 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 3025 ரூபாய் எனவும்,  சென்னையிலிருந்து மதுரைக்கு குறைந்தபட்சம் 1739 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2632 ரூபாயும்,சென்னையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு ரூபாய் 1271 அதிகபட்சமாக 1767 ரூபாயும், சென்னையிலிருந்து பழனிக்கு ரூபாய்.1,650 முதல் ரூபாய்.2,750 வரையும், சென்னையிலிருந்து சேலத்துக்கு ரூபாய்.1,435 முதல் ரூபாய்.2,109 வரையிலும், சென்னையிலிருந்து தென்காசிக்கு ரூபாய் .2,079 முதல் ரூ.3,465 வரையிலும். சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரூபாய்.2,063 முதல் ரூபாய்.3,437 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 தனியார் சுற்றுலா அனுமதி ஆம்னி பேருந்துகள் சங்க நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

செய்தியாளர்களிடம்  பேசியவர், "அரசு பேருந்து கட்டணத்துடன் ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம். அதிக வசதிகள் கொண்ட பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமை தான் உள்ளது. அரசு சார்பில் கட்டணத்தை முறைப்படுத்த ஆலோசனைகள் வழங்கினோம். விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகரிப்பதாக புகார் எழுந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களைப் பாதிப்பதில்லை. நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் தட்டு மக்கள் மட்டுமே பாதிப்புகள் ஏற்படும்

ஆம்னி பேருந்துகளை சேவையின் அடிப்படையில் இயக்க முடியாது. அரசுப் பேருந்துகளில் பயணிக்காதவர்கள் ஆம்னி பேருந்து கட்டணத்தை தெரிந்து கொண்டே முன்பதிவு செய்து செல்கின்றனர். தீபாவளி மற்றும் ஆயுத பூஜை விடுமுறைகள் வர உள்ள நிலையில் எதிர்காலத்தில் கூடுதல் கட்டண விவகாரங்கள் இருக்க கூடாது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி இருக்கிறோம்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பேருந்து கட்டணத்தை நிர்ணயம் செய்து பேருந்துகளை இயக்க அறிவுறுத்தி இருக்கிறோம். ஓரிரு நாட்களுக்குள் சங்கத்தினர் உடன் கலந்து ஆலோசனை செய்து மறுக்கடமைப்பு செய்யப்படும்" என்று கூறினார்.மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமை தான் உள்ளது. அரசு சார்பில் கட்டணத்தை முறைப்படுத்த ஆலோசனைகள் வழங்கினோம். விழா காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் அதிகரிப்பதாக புகார் எழுந்த நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.



ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிப்பது இல்லை. ஆம்னி பேருந்துகளை சேவையின் அடிப்படையில் இயக்க முடியாது. அரசு பேருந்துகளில் பயணிக்காதவர்கள் ஆம்னி பேருந்து கட்டணத்தை தெரிந்து கொண்டே முன்பதிவு செய்து செல்கின்றனர். தீபாவளி மற்றும் ஆயுத பூஜை விடுமுறைகள் வர உள்ள நிலையில் எதிர்காலத்தில் கூடுதல் கட்டண விவகாரங்கள் இருக்க கூடாது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி இருக்கிறோம்".

என்று கூறினார். ஆனால் அது மக்களைப் பாதிக்கும். மக்கள் ஆட்சி மக்கள் நலன் கருதி சார்ந்த அமைச்சர் 


ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்வாகும் நிலையில் அதை ஆதரித்து பேசியது நடுநிலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.     மக்கள்

பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில், ஆம்னி பேருந்துகளின் மூன்று மடங்கு கட்டண உயர்வு என்பது அதை அமைச்சர் ஆதரிக்கிறது என்பது மக்களைக் கவலையில் ஆழ்த்துகிறது.


பணி நிமித்தம் வெளியூர் வசிக்கும் மக்கள் இதில் சொந்த ஊர்களிலிருந்து நகரங்களில் வசிக்கும் மக்கள் தனது சொந்த ஊரிற்கே பயணிப்பது தற்போது பல மடங்காக அதிகரிக்கும். அரசுப் பேருந்துகளில் இடமில்லை என்ற நிலையில் 

இவர்கள், அரசின் தொடர் விடுமுறைகள் போன்ற காலங்களில் பயணிக்க ஆரவாரத்துடன் காத்திருப்பர். இவர்களுக்காக அரசே சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் வைத்தாலும், போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாத மற்றும் அளவிடமுடியாத அளவிற்கு உருவாகும்.



இப்படி ஒரு நிலை உருவாகும் வேளையில், இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக தனியார் டூரிஸ்ட் அனுமதி பெற்று நடத்தும் ஆம்னி பேருந்துகளைப் பயன்படுத்தி வந்தனர் தனது கட்டணத்தை ஆம்னி மற்றும் அரசு உடன் ஒத்துழைப்பு காரணமாக மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தீபாவளி விழா கொண்டாடப்படும் நிலையில், தற்போது ஊர்களுக்கு பயணிப்பதற்காக பயணிகள் முன்பதிவு நடந்து வருகிறது. 



தமிழக அரசு வெளியிட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு மேற்கொள்ள உரிய கட்டணம் செலுத்தினால் போதும் என்பது. 

பண்டிகை காலம் என்பதால், சென்னையிலிருந்து மதுரைக்கு குளிர்சாதன படுக்கை வசதியுடன் கிடைக்கும் பேருந்துகளின் கட்டணம் ரூபாய்.1,170 ரூபாய்.2,000 வரை அதிகரித்துள்ளது, குளிர்சாதன அமரும் இருக்கைக்கு ரூபாய்.870 – ரூபாய்.1,490 வரை வசூலிக்கப்படுகிறது. சாதாரண படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் கட்டணம் ரூபாய்.930 முதல் ரூபாய்.1,580 வரை, சாதாரண அமரும் இருக்கைக்கு ரூபாய்.690 முதல் ரூபாய்.1,170 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவே சாதாரண நாட்களில் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ரூபாய்.900யும், குளிர்சாதன அமரும் இருக்கைக்கு ரூபாய்.500 ம், சாதாரண படுக்கை வசதிகொண்ட பேருந்திற்கு ரூபாய்.650 ம், சாதாரண அமரும் இருக்கைக்கு ரூபாய்.400 ம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகை காலத்தில், சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு குளிர்சாதன படுக்கை வசதிகொண்ட பேருந்திற்கு ரூபாய்.1,190 முதல் ரூபாய்.2,030 வரையும், ஏசி அமரும் இருக்கைக்கு ரூபாய்.940 முதல் ரூபாய்.1,600 வரையும், சாதாரண படுக்கை இருக்கைக்கு ரூபாய்.990 முதல் ரூபாய்.1,690 வரையும், சாதாரண அமரும் இருக்கைக்கு ரூபாய்.720 முதல் ரூபாய்.1,240 வரையும் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

இதுவே சாதாரண நாட்களில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ரூபாய்.900 ம், குளிர்சாதன அமரும் இருக்கைக்கு ரூபாய்.650 ம், சாதாரண படுக்கை வசதிகொண்ட பேருந்திற்கு ரூபாய் .690 ம் மற்றும் சாதாரண அமரும் இருக்கைக்கு ரூபாய்.550 வரையும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.    தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் ஆம்னி சுற்றுலா அனுமதி தனியார் பேருந்துகளில் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்ததையடுத்து, ஆம்னி பேருந்துகளின் அனைத்து சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.பண்டிகை காலங்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

பின்னா செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும், அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம். ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்கவில்லை”எனத் தெரிவித்திருந்தார்.      தனியார் ஆம்னிப் பேருந்துகளுக்கு தற்போது வெளியிட்ட புதிதாக உயர்த்திய கட்டணங்கள் விபரம்:- திருத்தப்பட்ட கட்டணம் பட்டியல்

சென்னையில் இருந்து கி.மீ., சாதா பஸ் சாதா படுக்கை ஏசி இருக்கை ஏசி படுக்கை வால்வோ இருக்கை வால்வோ படுக்கை கோவை 550 1,815 2,200 2,090 2,585 2,310 3,025 மதுரை 480 1,776 2,112 2,016 2,448 2,208 2,688 திண்டுக்கல் 430 1,591 1,892 1,806 2,193 1,978 2,408 பட்டுக்கோட்டை 400 1,480 1,760 1,680 2,040 1,840 2,240 தஞ்சாவூர் 350 1,435 1,575 1,610 1,820 1,750 1,995 ஊட்டி 570 1,881 2,280 2,166 2,679 2,394 3,135 திருச்செந்துார் 640 2,112 2,560 2,432 3,008 2,688 3,520 துாத்துக்குடி 610 2,013 2,440 2,318 2,867 2,562 3,355 சென்னையில் இருந்து கி.மீ., சாதா பஸ் சாதா படுக்கை ஏசி இருக்கை ஏசி படுக்கை வால்வோ இருக்கை வால்வோ படுக்கை கோயமுத்தூர் 550 1,815 2,200 2,090 2,585 2,310 3,025 மதுரை 480 1,776 2,112 2,016 2,448 2,208 2,688 திண்டுக்கல் 430 1,591 1,892 1,806 2,193 1,978 2,408 பட்டுக்கோட்டை 400 1,480 1,760 1,680 2,040 1,840 2,240 தஞ்சாவூர் 350 1,435 1,575 1,610 1,820 1,750 1,995 ஊட்டி 570 1,881 2,280 2,166 2,679 2,394 3,135 திருச்செந்துார் 640 2,112 2,560 2,432 3,008 2,688 3,520 துாத்துக்குடி 610 2,013 2,440 2,318 2,867 2,562 3,355 நாகர்கோவில் 705 2327 2820 2679 3313 2961 3877 இதேபோல, மற்ற ஊர்களுக்கும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களுக்கும் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.நாகர்கோவில் 705 2327 2820 2679 3313 2961 3877 இதேபோல, மற்ற ஊர்களுக்கும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேரூந்துகளுக்கும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.  தற்போது தமிழக அரசுப் பேருந்துக் கட்டண விவரம்:-

சென்னையில் இருந்து பிற

மாவட்டங்களுக்க விவரம்

Chennai -Ultra Deluxe Buses Revised Bus Fare(29-01-2018)

Chennai – Nagercoil – Rs.708

Chennai – Nellai – Rs.632

Chennai – Tuticorin – Rs. 611

Chennai – Madurai – Rs.467

Chennai – Trichy – Rs.338

Chennai – Thanjavur – Rs.358

Chennai – Kumbakonam – Rs.314

Chennai – Velankanni – Rs.345

Chennai – Salem – Rs.348

Chennai – Coimbatore – Rs.520

Chennai – Hosur – Rs.325

Chennai – Bangalore – Rs.459

Chennai – Trivandrum – Rs.800

Chennai – Puducherry – Rs.178

Chennai – Air Condition Buses Revised Bus Fare(29-01-2018)

Chennai – Nagercoil – Rs.964

Chennai – Nellai – Rs.860

Chennai – Tuticorin – Rs.832

Chennai – Madurai – Rs.637

Chennai – Trichy – Rs.461

Chennai – Thanjavur – Rs.488

Chennai – Kumbakonam – Rs.428

Chennai – Velankanni – Rs.470

Chennai – Salem – Rs.475

Chennai – Coimbatore – Rs.707

Chennai – Bangalore – Rs.573   ஆகும் மேலும் விமானங்களுக்கு நிகராக ஆம்னி தனியார் பேருந்துகள் கட்டணம் தற்போது உயர்ந்த நிலையில் மக்கள் பயணம் செய்யாத நாட்களில் மட்டும் ஆம்னி பேருந்து கட்டணம் குறைப்பு செய்வது குறித்து அமைச்சர் தரப்பில் பதில் தெரியவில்லை. மக்கள் அரசு பேருந்துகளுக்கும் தனியார் பேருந்துகளுக்கும் உள்ள கட்டணங்களை இவ்வளவு வித்தியாசம் உள்ளது இது சரியானதா அல்லது தவறானதா என்பது மக்கள் முடிவுக்கே விட்டு விடலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த