நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
அத்தியாவசியப் பொருட்களின் விலை கண்காணிப்பு குறித்த தேசிய அளவிலான திறன் கட்டமைப்பு பயிலரங்கத்திற்கு நுகர்வோர் நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது
புதுதில்லியில், 2022 செப்டம்பர் 30 அன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை கண்காணிப்பு குறித்த தேசிய அளவிலான திறன் கட்டமைப்பு பயிலரங்கத்திற்கு நுகர்வோர் நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது. புவியியல் சார்ந்து விலைவிவர சேகரிப்பை அதிகப்படுத்துவது, விலை தரவுகளின் தரத்தையும் பகுப்பாய்வு பயன்களையும் மேம்படுத்துவது என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயிலரங்கு அமைந்தது. விலை தரவுகளின் முக்கியத்துவத்தை மாநிலத் தொடர்பு அதிகாரிகளுக்கு எடுத்துரைப்பது, விலை விவர சேகரிப்பின் நடைமுறையை அவர்களிடம் பிரபலப்படுத்துவது, விலை விவரசேகரிப்பு மையங்களுக்கு மண்டல மற்றும் மாநில அளவில் திறன் கட்டமைப்புப் பயிலரங்குகளை உறுதிசெய்யத் திட்டமிடுவது ஆகியவை இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கமாக இருந்தன.
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய நுகர்வோர் நலத்துறை செயலாளர் திரு ரோகித் குமார் சிங், விலை விவர சேகரிப்பு மற்றும் தகவல் அனுப்புதல் விஷயத்தில் அனைத்து மாநிலப் பிரதிநிதிகளின் மெச்சத்தக்க பணிகளைப் பாராட்டினார். விலை விவர சேகரிப்புத் தரம், விலை கண்காணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தத் தரவுகள் பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு பயனுடையதாக இருக்கும் என்றார். விலை விவர சேகரிப்பில் தரம் மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டில் கவனம் செலுத்துமாறு மாநிலத் தொடர்பு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விலை விவர சேகரிப்பு மையங்கள் இருப்பது பற்றி குறிப்பிட்ட அவர், இவை சிறந்த தகவல் பரிமாற்றத்தை அளிப்பதாகத் தெரிவித்தார்
விலை கண்காணிப்புத் தரவு அமைப்பை மேம்படுத்துவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி தொழில்நுட்ப உதவியை வழங்கி வருகிறது. இவ்வங்கியால் அளிக்கப்பட்டுள்ள ஆதரவு விவரங்களை திரு கிருஷ்ணன் சிங் ராதேலா தமது உரையில் குறிப்பிட்டார். சமூகப் பாதுகாப்புக்கு விலை கண்காணிப்பின் முக்கியத்துவத்தையும் அவர் விவரித்தார்.
கருத்துகள்