தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவைக் கொண்டு இனி எந்தப் புகாரையோ மற்றும் கைது நடவடிக்கையோ எடுக்கக் கூடாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தகவல் தொழில் நுட்பச் சட்டப்பிரிவு 66- A ன் கீழ் கணிப்பொறியின்,
தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக மற்றவர்களைத் தாக்கிப் பேசுவதும், அச்சுறுத்தும் பதிவுகள் மற்றும் பொய்யான தகவல்களைப் பதிவிடுவது குற்றமாகும், மேலும் மீறுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறிப்பிட்ட தொகையை அபராதமாகவும் விதிக்கப்படும்.
2015-ஆம் ஆண்டு இந்தப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்ததற்குக் காரணம், நாட்டின் பாதுகாப்பையோ அல்லது சமூகத்தின் அமைதியையோ சீர்குலைக்காத தனிநபரின் கருத்துக்கள் எப்படி தவறாகவும் ஆகும் , மேலும் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யும் சட்டப்பிரிவு 19-க்கு எதிராக இருப்பதால் அது நீக்கப்பட்டது.
குறிப்பாக, இச் சட்டப்பிரிவின் கீழ் பல மாணவர்கள்கள் கைது செய்யப்படுவதாகவும் , இது மக்களின் குரலை ஒடுக்கப் பயன்படுவதாகவும் சட்டக்கல்வி பயிலும் மாணவி ஒருவரால் தொடரப்பட்ட வழக்கில் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடை செய்யப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தற்போதும் வழக்கு பதியப்படுவதாக தான்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, ``தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவைக் கொண்டு இனி எந்தப் புகாரையோ மற்றும் கைது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது
" எனத் தீர்ப்பு வழங்கியது. மேலும், ``இதை அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குனர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல, தற்போது இதன் கீழ் போட்டப்பட்ட அனைத்து வழக்குகளும் மூன்று வாரங்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்" என அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 66-A ன் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் 2015-ஆம் ஆண்டு அறிவித்ததென்னவோ உண்மைதான். ஆனால், தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவுக்கு மாற்றாக சில துணைப் பிரிவுகளின் கீழ் காவல்துறையால் வழக்குகள் பதியப்படுவதாகவும்
உதாரணத்துக்கு.. அரசின் திட்டம் குறித்து கருத்தைப் பதிவிடும் நபர்கள் மீது சட்டப்பிரிவு 66-A பயன்படுத்துவதற்குப் பதிலாக சட்டப்பிரிவு 153-A ன் கீழ் `கலவரத்தைத் தூண்ட முயற்சி' எனும் அடிப்படையில் வழக்கு பதியப்படும். இப்படி ஒரு சட்டம் மறுக்கும் வாய்பினை, பிற சட்டங்கள் வழியாக காவல்துறையினர் பெற்றுக் கொள்கின்றனர்" என்கின்றனர் உச்சநீதிமன்றத்தின் பல மூத்த வழக்கறிஞர்ள் . அரசு கொண்டு வரும் திட்டத்திற்கும் அதன் கொள்கையின் மீதும் மாற்றுக்கருத்துள்ளவர்கள் அதை வெளிப்படுத்தவே இது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டதேயன்றி. அரசுக்கு ஆதரவான கருத்தை மட்டுமே வெளிப்படுத்த எந்த சட்ட உரிமைகளும் தேவையில்லை.
பல சமயங்களில் சட்டப்பிரிவு 66-A தவறாகப் பயன்படுத்தப்படுவதால் தான் இந்தப் பிரிவை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்த ஒரு நடவடிக்கை, பேச்சுரிமைக்கு எதிரான செயல்பாடுகளை முற்றுலுமாகக் குறைக்காது. எனினும், காவல்துறையால் தவறாகப் பயன்படுத்துவது குறைய வாய்ப்பிருக்கிறது. இந்தச் சட்டப்பிரிவை அமல்படுத்துவதற்கு முன்பாகவும் காவல்துறை சார்பாக பொய் வழக்குகள் போடப்பட்டன. அதன் பிறகு, கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்பிரிவால், தனிநபர்கள் மீது அவர்கள் தகவல் தொழில் நுட்பச்சட்டத்தில் குற்ற தண்டனைச்சட்டமான இந்தப் பிரிவு இந்திய அரசியல் சட்டத்திலிருந்து நீக்கப்படுமென்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நீக்க நீதிமன்றத்தில் சட்ட மாணவி ஸ்ரேயா சிங்கால் வழக்குத் தொடர்ந்தார். இச்சட்டம் 2000 ஆம் ஆண்டும் அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டும் திருத்தம் செய்யப்பட்டதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பொது நல வழக்கிற்காக, இந்த பிரிவிற்காக ஒருவர் கைது செய்யப்படும் போது காவல்துறை ஐ.ஜி அளவிலான உயர் அதிகாரியின் ஆலோசனையின் மூலமே கைது செய்ய வேண்டுமென்றும் திருத்தம் செய்யப்பட்டது. சமூக வளைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் விமர்சனங்கள் அவதூராக இருந்தால் தொடர்புடையவரைக் கைது செய்ய வகை செய்யும் இந்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது பொது மக்களின் கருத்துச் சுதந்தரத்தைப் பாதிக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு சிவ சேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே இறந்த போது அக்கட்சியினர் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டதான நிகழ்வை சமூக வளைதளத்தில் விமர்சித்து ஷாஹீன் தாதா என்ற பெண் எழுதினார். அதை அவளின் தோழி ரினு சீனிவாசன் என்பவர் ஆதரித்தார் என்பதற்காக இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் தற்போது இந்தச் சட்டம் நீக்கப்பட்டு விட்டதால் இவர்களின் வழக்கு நீக்கப்படும். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 381 வழக்குகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 291 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 245 வழக்குகளும், ராஜஸ்தானில் 192 வழக்குகளும், ஆந்திரப்பிரதேசத்தில் 38 வழக்குகளும், அஷாமில் 59 வழக்குகளும், டெல்லியில் 28 வழக்குகளும், கர்நாடக மாநிலத்தில் 14 வழக்குகளும், தெலுங்கானாவில் 15 வழக்குகளும், தமிழ்நாட்டில் 7 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 37 வழக்குகளும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் வாதி தரப்பில் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
இந்தப் பிரிவு பேச்சுரிமையைப் பறிப்பதாக கூறித்தான் 2015 ல் உச்ச நீதிமன்றம் இதனை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.சட்டப் பிரிவு 66ஏ ரத்து செய்யப்படுவதற்கு முன்பு அந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 229 வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருந்தன. ரத்து செய்யப்பட்ட பிறகு 1,307 வழக்குகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இன்னும் 570 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று என்று சஞ்சய் பாரிக் கூறியதாக அகில இந்திய தனியார் தொலைக்காட்சி . இணைய தளம் தெரிவிக்கிறது.
கருத்துகள்