முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காவல் ஆய்வாளர் திருமலை உள்ளிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம்

ஸ்டெர்லைட் தனியார் தாமிர ஆலைக்கு எதிராக  தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக. நீதிபதி அருனா


ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த பின்னர் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்த நிலையில் நடவடிக்கையில்  இறங்கிய. காவல்துறை தலைமை இயக்குனர் சம்பந்தப்பட்ட  அதிகாரி மற்றும் காவலர்கள்  பணியிடை நீக்கம் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் அலட்சியமும், துாத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குக் காரணம்' என நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும்  மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், ஆணையம் முன்பாக அளித்த சாட்சியத்தில், இப்பிரச்னைக்கு உயர்நிலைக் குழு அவசியம் என்றும், அதற்கான குழுவில் அரசு சாரா வல்லுனர்கள், புற்றுநோயால் பாதிப்பிற்கு ஆளானவர்கள் பற்றி ஆராய வேண்டும் எனவும், தலைமைச் செயலாளருக்குத் தகவல் அனுப்பியதாகக் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் சாட்சியப்படி, தலைமைச் செயலாளார், இந்தப் பிரச்னையை மேல் நடவடிக்கைக்காக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்துள்ளார்.

உளவுத் துறை ஐ.ஜி., சத்தியமூர்த்தி அளித்த சாட்சியத்தில், கம்யூனிட்ஸ்ட் கட்சி சார்பு அமைப்புகளின் துாண்டுதலின் படி, போராட்டத்தில் மீனவர்கள் பெருமளவு கலந்து கொள்வார்கள் என்ற தகவலை, காவல்துறை டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அப்போதய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை, சேலத்தில் சந்தித்து,           மீன்வளத்துறைச் செயலாளர் வாயிலாக மீனவர்கள் சங்கத்தினரை அழைத்து போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்கலாம் என்ற கருத்தையும், சத்தியமூர்த்தி கூறியுள்ளார். அப்போதய

முதல்வருக்கு உளவுத் துறை தகவல் தெரிவித்தும், சட்டம் ஒழுங்கு நிலை கவனிக்கப்படாமலேயே இருந்தது, வியப்பை ஏற்படுத்துகிறது.

தீவிரமாக கவனித்திருந்தால் முற்றிலுமாக பிரச்னையை, ஆரம்ப கட்டத்திலேயே திறம்பட சமாளித்திருக்கலாம். அவ்வாறு செய்யாதது அலட்சியமாகவும், அசட்டையாகவும் இருந்ததற்கு உன்னத உதாரணமாக உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக பணியிலிருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது திருநெல்வேலி  மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராகப் பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 100 வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்டமான பேரணியை பொதுமக்கள் நடத்தினர். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்கார்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிப் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழநாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து, விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. ஸ்டெர்லைட் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். போராட்டக்காரர்களில் சிலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. அப்போதைய காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறைத் துணைத் தலைவர் அவராகவே அதிகாரத்தைக் கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் உச்சபட்சமாக பொதுமக்கள் மீது சூப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சுடலைக்கண்ணு பற்றியும் அதில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், டிஎஸ்பி லிங்க திருமாறன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐஜி சைலேஷ் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர்  லிங்க திருமாறன், காவல் ஆய்வாளர்கள் திருமலை, ஹரிகரன், பார்த்திபன், எஸ்ஐக்கள் சொர்ணமணி, ரென்னீஸ், காவலர்கள் ராஜா சங்கர், சுடலை கண்ணு, தாண்டவ மூர்த்தி, சதீஷ்குமார், ராஜா, கண்ணன், மதிவாணன் என பல பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையடுத்து, சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.  விசாரணைக் கமிஷன்களின் அதிகாரமென்ன. அறிக்கைகளால் பலன் கிடைக்குமா?                            சட்ட வழி உண்டா? ஓய்வு நீதிபதி  ஆறுமுகசாமி மற்றும் நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டு விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளும் தமிழ்நாடு சட்டமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இரண்டு அறிக்கைகளிலும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் அதிர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

 விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளுக்கு வலிமை உண்டா? சட்ட அதிகாரம்  இருக்கிறதா? அந்த அறிக்கைகளை வைத்து அரசு என்ன நடவடிக்கை எடுத்திட முடியும்? குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டித்து விடமுடியுமா? என்றெல்லாம் பல கேள்விகள் இதில் அடங்கியுள்ளன. விசாரணை ஆணையங்கள் குறித்து சில விபரங்கள்.

விசாரணை ஆணையங்கள் என்ற சட்டத்தை 1952-ஆம் ஆண்டில் உருவாக்கிய மத்திய அரசு. அதற்கான ஆய்வு வரம்புகளையும், அந்த சட்டத்தில் வரையறை செய்திருக்கிறது. ஆக, அந்த சட்டத்தின் படியே மத்திய-மாநில அரசுகள் விசாரணை ஆணையங்களை அமைக்கின்றன. நாட்டில் ஒரு சம்பவம் நடக்கும் போது அது தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பெரும் தாக்கத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தால், குறிப்பிட்ட பிரச்சனைகள் அல்லது சம்பவம் குறித்து அரசாங்கத்துக்கு சில தெளிவுகளும் உண்மைகளும் தேவைப்படுவதனை அறிந்து கொள்வதன் மூலம் எதிர்காலங்களில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்பட அல்லது ஒரு நல்ல முடிவினை எடுக்க அரசுக்குத் தேவை. அதற்காக, ஒரு விரிவான சுய அதிகார விசாரணையின் அடிப்படையில் ஒரு அறிக்கை தேவைப்படுகிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை என வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன.    அது பணியிலுள்ள நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று 1952-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.                நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷனின் பரிந்துரையின் பேரில் மூன்று  வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதோடு, தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த லிங்கத் திருமாறன் மற்றும் நான்கு  காவலர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இந்த விஷயத்தை எவ்வளவு சீரியசாக எடுத்துள்ளது என்பதைத் தான் இது பிரதிபலிக்கிறது. ஆணையங்களின் மீதான நம்பிக்கை சற்று துளிர் விடத்துவங்கியுள்ளது. இது தொடருமா என்ற கேள்வியை விட இந்த அதிரடி தொடர வேண்டும்.. என்பதே சாமானிய மக்களின் கோரிக்கை மற்றும் அவா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...