பல காலனி ஆதிக்கங்களைக் கொண்டிருந்த சூரியன் அஸ்தமிக்காத 'கிரேட்' பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக்
போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இங்கிலாந்து மக்களைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் பெருமையாகக் கருதுகின்றனர். காரணம் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரென. இங்கிலாந்து நாட்டவரே ரிஷி சுனக்கை பார்த்து வியக்கிறார்களாம்! ஏனென்றால், இவருக்கு இங்கிலாந்து அரச பரம்பரையில் வந்த மூன்றாம் சார்லஸ் சொத்து மதிப்பு அதிகமாம்!
இளவரசர் மூன்றாம் சார்லஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2,850 கோடிகளாம்! அங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி என்பது ஆங்கிலேயர்கள் தற்போதைய பிரதமர் இங்கிலாந்தின் குடியுரிமை பெற்ற குடிமகன். 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷ்தா மூர்த்தியின் கணவராவார்.
2015 ஆம் ஆண்டில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பிரிட்டன் பாராளுமன்றத்திற்குத் தேர்வானவர், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரிட்டன் நிதி அமைச்சரானார்.
இதில் இந்தியர்களுக்கு என்ன பெருமை சிலர் அதில் பெருமை கொள்ளக் காரணம் பல ஆங்கிலேயர்களுக்கு உதவிகளாக ஆட்சி செய்தது. நம்நாட்டிலும் ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர் ஆனி டிமாண்டி போல உண்டு.
பலரும் பிரிட்டன் நாட்டின் பிரதமராக முதல் வெளிநாட்டவர் அதாவது பிரிட்டன் வம்சாவளியை அல்லாதவர் எனப் பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஆசிய வம்சாவளி பிரிவில் தான் ரிஷி சுனக் முதல் பிரிட்டன் பிரதமர்.
பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் 20 ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1874.ஆம் ஆண்டு முதல் 1821 ஆம் ஆண்டு வரை ஏப்ரல் மாதம் 1880 ஆம் ஆண்டு மற்றும் 27 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1868 - ஆம் ஆண்டு முதல் 1 ஆம் தேதி டிசம்பர் மாதம் 1868. ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரிட்டஷ் நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். இவருடைய தந்தை ஐசக் டி'இஸ்ரேலி பிரிட்டிஷ் எழுத்தாளர். இவருடைய தாத்தா பெஞ்சமின் டி'Israeli இவர் இத்தாலியில் யூத குடும்பத்தில் பிறந்த ஒரு வணிகராவார்.
ரிஷி சுனக் 12 மே 1980 அன்று பிரிட்டன் நாட்டின் சவுத்தாம்ப்டன் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த யாஷ்வீர் மற்றும் உஷா சுனக் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ரிஷி சுனக் பெற்றோர்கள் இருவருமே ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள்.
அவரது தந்தை யாஷ்வீர் கென்யாவின் காலனி மற்றும் பாதுகாப்பகத்தில் (இன்றைய கென்யா) பிறந்து வளர்ந்தார். அவரது தாயார் உஷா, இதே கென்யாவின் Tanganyika பகுதியில் பிறந்தவர் (இது தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது).இவர்களின் குடும்பம்
பிரிட்டனுக்கு மாறிய பின்பு யஷ்வீர் ஒரு மருத்துவராக இருந்தார், மற்றும் உஷா ஒரு பார்மாசிஸ்ட் ஆகவும் பணியாற்றி வந்தனர். உஷா உள்ளூரில் மருந்தகத்தை நடத்தி வந்தார். அவரது தாத்தா பாட்டி, பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள்,
மேலும் 1960 ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து தங்கள் குழந்தைகளுடன் UK வுக்கு குடிபெயர்ந்தனர்.ரிஷி சுனக்கின் தாத்தா ராம்தாஸ் சுனக் குஜ்ரன்வாலா என்னும் பகுதியில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி இந்தியாவில் இருந்த காலத்தில் பிறந்தார், தற்போது இது பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகும்.
ராம்தாஸ் சுனக் 1935 ஆம் ஆண்டில் குமாஸ்தாவாகப் பணியாற்றத் தனது மனைவி சுஹாக் ராணி சுனக் உடன் நைரோபிக்கு சென்றார்.இதேபோல் ரிஷி சுனக் தாய் வழி தாத்தாவான ரகுபீர் சைன் பெர்ரி MBE, Tanganyika-வில் வரி அதிகாரியாகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து மேலும் 16 வயதான Tanganyika-வில் பிறந்த ஸ்ரக்ஷா-வை திருமணம் செய்தார். அவருடன் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன,
இவர்களுடைய குடும்பம் 1966 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது. பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்த பின்பு ரகுபீர் சைன் பெர்ரி உள்நாட்டு வருவாய் பிரிவின் கலெக்டராகப் பணியில் சேர்ந்தார், இதேவேளையில் ராம்தாஸ் சுனக்கின் குடும்பமும் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தது.
பிரிட்டனில் யாஷ்வீர் மற்றும் உஷா ஆகியோர் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டனர். இதுவே உண்மை. இங்கிலாந்து பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


.webp)














கருத்துகள்