முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வட இந்திய மக்கள் தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவு தலைவர்கள் இரங்கல்

சுதந்திரத்துக்கு பிறகு  காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். அவரது பாதையில்  ராம் மனோகர் லோகியாவும் ஒருவர். இவரது செயல்பாடுகள் மற்றும் சமூகநீதிக் கருத்துகளால் கவரப்பட்டு அரசியலில் வந்தவர் தான் முலாயம் சிங் யாதவ்.

உத்திரப்பிரதேசத்தில் எட்டாவா மாவட்டத்தின் சைஃபை  கிராமத்தில் சுதார்சிங், மூர்த்தி தேவி ஆகியவர் மகனாக  விவசாயக் குடும்பத்தில்  இரண்டாவதாக 1939-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியில் பிறந்தார் நான்கு  சகோதரர்கள், ஒரு சகோதரி என ஐவர் உடன் பிறந்தவர்கள். மெயின்புரியின் ஜெயின் கல்லூரியில் எம்.ஏ., பி.டி. வரை படித்த பிறகு அதே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.


ராம் மனோகர் லோகியா நடத்தி வந்த ‘சவுகம்பா’ (நான்கு தூண்கள்) எனும் ஹிந்தி வார இதழ் மற்றும் ‘மேன்கைண்ட்’ எனும் ஆங்கில மாத இதழை  தொடர்ந்து படித்து வந்தார். இதில் லோகியாவின் கருத்துகளால் கவரப்பட்டு இந்திய சோஷலிச கட்சியின் கோட்டையாக இருந்த ஏட்டா பகுதியின், ஜஸ்வந்த் நகர் பேரவை தொகுதியில் போட்டியிட முலாயம் சிங் யாதவிற்கு வாய்ப்புகள் கிடைத்தது. அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலியின் சிபாரிசில். முலாயம் சிங் யாதவ் இத்தொகுதியில் வென்று இந்தியாவின் இளம் எம்எல்ஏக்களில் ஒருவரானார். அப்போது முதல் அவரை மக்கள், ‘நேதாஜி’ என  அழைக்கத் தொடங்கினர்.

1977-ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேச. பேரவைத் தேர்தலில் 3-வது முறையாக தேர்வானவர் கூட்டுறவுத் துறை அமைச்சரானார்.பிறகு, மிசா சட்டத்துக்கு எதிராக உருவான ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் முலாயம் சிங் யாதவ் இருந்தார். ஜன சங்கம் இரண்டான பிறகு சரண்சிங் தலைமையில் உருவான லோக் தளத்தின் உத்திரப் பிரதாச. மாநிலத் தலைவராக சில மாதங்கள் இருந்தார். முன்னால் பிரதமர்  சரண்சிங் மறைவுக்கு பிறகு லோக் தளம் கட்சி, லோக்தளம்-ஏ (அஜீத் சிங்), லோக் தளம்-பி (பகுகுணா) என இரண்டானது. இதில் பகுகுணா கட்சியின் உ.பி. மாநிலத் தலைவரானார் முலாயம். பிறகு பகுகுணாவும் இறந்து போக, இந்த சமயத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய முன்னால் பிரதமர் வி.பி.சிங், ஜனதா தளம் கட்சியை உருவாக்கி அதில் லோக்தளம் கட்சிகளையும் இணைந்தார்.



லக்னோவில் 1992,ஆம் ஆண்டு  அக்டோபர் 4-ஆம் தேதியில் ‘சமாஜ்வாதி’ என்ற  புதிய கட்சியை தொடங்கினார். அடுத்து வந்த தேர்தலில் அவருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்க, இரண்டாவது முறையாக முதல்வரானார் முலாயம் சிங் யாதவ்  , இரண்டு வருடம் மட்டுமே நீடித்த இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின. அப்போது முதல்வராகும் ஆசையில் முலாயமிற்கு அளித்த ஆதரவை மாயாவதி வாபஸ் பெற்றார். வெறும் இரண்டு வருடங்களில் முதல்வர் பதவியை இழந்த முலாயம், 1996- ஆம் ஆண்டில் தேசிய அரசியலில் அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, தேவகவுடா அமைச்சரவையில்  பாதுகாப்புத் துறை அமைச்சரானார்.

மாயாவதியும் முலாயம் சிங்கும் பிரதான தலைவர்களாகி அங்கு மாறி, மாறி ஆட்சி செய்தனர். இந்திய நாட்டில் தனித்தன்மை கொண்ட தலைவர் முலாயம் சிங் யாதவ்முலாயம் சிங் யாதவ் இரண்டு திருமணம் செய்தவர். இவரது முதல் மனைவி, மால்தி தேவியை, 1974. ஆம் ஆண்டு  திருமணம் செய்தவர் மே 2003-ஆம் ஆண்டில் இறந்தார் அகிலேஷ் யாதவ் முலாயம் சிங் யாதவின் முதல் மனைவி மால்தி தேவி மகன் அகிலேஷ் 2012 முதல் 2017 வரை உத்தரபிரதேச முதல்வராக இருந்தார். 1990 ஆம் ஆண்டில் மால்தி தேவியை திருமணம் செய்துகொண்டார் பிப்ரவரி 2007 வரை குப்தாவ்டன்  நன்கு அறியப்பட்டவர் இவர்களது உறவு இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.  சாதனா குப்தாவின் முதல் திருமணத்தின் மூலம் பிரதீக் யாதவ் (பிறப்பு 1988) என்ற மகன் உள்ளார். சந்திர பிரகாஷ் குப்தா மற்றும் சாதனா குப்தா (முலாயமின் 2-ஆவது மனைவி) ஆகியோரின் மகன் பிரதீக் யாதவ்  பிரதீக்கின் மனைவி அபர்ணா பிஷ்த் யாதவ் (பிறப்பு 1990) 2022-இல் பாஜகவில் சேர்ந்தார். சாதனா குப்தா 2022 சூலையில் இறந்தார் 

தற்போது உடல்நலக் குறைவால் முலாயம் சிங் யாதவ் தமது  82 அகவையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிரதமர்

முதுபெரும் அரசியல்வாதி திரு.முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு.யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார் என்றும், ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். திரு.யாதவ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது வலிமையான இந்தியாவுக்காக உழைத்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  திரு.யாதவ்-வுடனான தனது நெருங்கிய தொடர்பை நினைவு கூர்ந்த பிரதமர், யாதவின் கருத்துகளை கேட்க தான் எப்போதும் தயாராக இருந்ததாக தெரிவித்துள்ளார். யாதவுடனான தனது சந்திப்புகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

“திரு.முலாயம் சிங் யாதவ் ஆளுமை மிகுந்த தலைவர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்த ஒரு சிறந்த தலைவராகவும், பணிவுமிக்க தலைவராகவும் அவர் அறியப்பட்டார்.  யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார். ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்து கொண்டவர்”.

“திரு.முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் தனித்துவமிக்கவராக திகழ்ந்தார். அவசரநிலை பிரகடன காலத்தில் ஜனநாயகத்தை காப்பதில் முக்கிய வீரராக திகழ்ந்தவர். பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அவர் வலிமையான இந்தியாவுக்காக பாடுபட்டார். தேசிய நலன்களை மேம்படுத்துவது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார்”.

“நான் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை திரு.முலாயம் சிங் யாதவை தொடர்பு கொண்டுள்ளேன். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததுடன், அவரது கருத்துகளை கேட்க எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி”.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...