இளைய குமாரராஜா ஐயப்பன் (என்ற) எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை சுவீகாரம் எடுத்தது செல்லாதென இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி கோவில் ஏ.சி.முத்தையா ஆதரவு டிரஸ்டிகள் அறிவிப்புக்கு நமது செட்டிநாடு இதழ் பதிலடி
செட்டிநாடு குழுமத்தின் தலைவரான ஒக்கூரில் பிறந்த கானாடுகாத்தான் ஐயப்பன் என்ற எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் காநாடுகாத்தானில் சுவீகாரம் எடுத்தது செல்லாதென இளையாத்தங்குடி ஸ்ரீகைலாசநாத சுவாமி நித்யகல்யாணி அம்மன் தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டு மீண்டும் அறிவித்திருக்கிறதன் பின்னணியில் யார்?
செட்டிநாடு குழுமத்தின் முன்னாள் தலைவரான எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாருக்கு முறைப்படி சட்ட வழியே ஒக்கூரைச் சேர்ந்த ஐயப்பன் சேக்கப்ப செட்டியார் மகனாகப் பிறந்து வளர்ந்த நிலையில் பின் முத்தையா என்ற பெயரில் அரசிதழ் மாற்றம் செய்து சுவீகாரம் எடுத்திருந்தார். அது முறையானது சட்டத்தின் படி பதிவுசெய்து நடந்த நிகழ்வாகும். காவிரிப்பூம்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்ட சோழநாட்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் புலம் பெயர்ந்தவர்களை
பாண்டிய மன்னர் இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சோழநாட்டு மகுட வைசியர்கள் என்ற நாட்டுக்கோட்டைசெட்டியார்களுக்கு வழக்கிய ஆலயம் நாட்டார்கள் மத்தியில் நகரத்தார்கள் எனும் பட்டமுண்டு, கடல் கடந்த வணிகம் செய்த தனவந்தர்கள், இரண்டாம் நூற்றாண்டிலேயே மன்னர்களுக்கு நிகராக வாழ்ந்த கோவலன்-கண்ணகி வரலாறு கூறும் சிலப்பதிகார காலம் முதல் அவர்கள் சார்ந்த ஜாதிய உறவில் சுவீகாரம் எனும் பிள்ளை கூட்டுவது எனும் மரபு சார்ந்த முறை 600 ஆண்டு களாக பாண்டிய நாட்டிலும் பிள்ளை எடுப்பது அல்லது சுவீகாரம் செய்வது அவர்களின் வழக்கமான ஒன்று தான். ஆனால், இதற்கென அவர்கள் சார்ந்த சமுதாய நடைமுறை சில விதிமுறைகளை அவர்களே வகுத்தே வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சுவீகாரம் எடுப்பவரும் கொடுப்பவரும் ஒரே கோவில் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரே கோவிலிலும் பல உட்பிரிவுகள் உண்டு என்பதாகும். சோழநாட்டில் இவர்கள் வாழ்ந்த காலத்தில் இவர்களுக்குள் பிரிவுகள் இல்லை, பாணடிய நாட்டில் குடியேறிய பின்னர் தான் பாண்டிய மன்னர் வழக்கிய கொடை ஆலயங்களில் வழி வந்த பிரிவுகள் உருவாக்கி திருமண வழி உறவு முறைகளை ஏற்படுத்தி 72 ஊர்களில் 9 ஆலய வழி வாழ்ந்து வரும் நிலையில்
1340 ஆம் ஆண்டிற்கும் 1500 ஆண்டுக்கும் இடையில் வந்த இந்த 9 கோவில்கள் சார்ந்த நகரத்தார்களுக்குள்ளும் உட்பிரிவுகளும் உறுவாகி இருக்கின்றன. நகரத்தார் வீடுகளில் சுவீகாரம் எடுத்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட கோவிலில் முறைப்படி இசைவு பதிவு செய்த பிறகுதான் சுவீகாரம் எடுக்க முடியும்.
அதேசமயம், ஒரே கோவிலாக இருந்தாலும் அவர்கள் சார்ந்த உட்பிரிவுக்குள் மட்டுமே சுவீகாரம் கொடுக்கவோ, எடுக்கவோ முடியும் என்பது அவர்கள் வகுத்த விதி. திருமணத்துக்கும் இதுபோல பதிவு செய்து கோவில் மாலை பெற்று திருமணத்தை நடத்துவார்கள். ஆனால், உட்பிரிவுக்கு வெளியே தான் திருமண பந்தங்கள் இருக்கும்.
ராஜாசார் பட்டம் ஆங்கிலேயர் வெள்ளைக்காரர்களிடம் பெற்ற அண்ணாமலை செட்டியார் பேரன்
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார், இளையாத்தங்குடி கைலாசநாத சுவாமி கோவில் சார்ந்த பட்டிணசாமி உட்பிரிவைச் சேர்ந்தவர். முறைப்படி இவர் சுவீகாரம் எடுப்பதாக இருந்தால் இந்தப் பிரிவுக்குள்லிருந்துதான் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த விதியை மீறி, இதே கோயிலுக்குள் வரும் கழனிவாசல் பிரிவைச் சேர்ந்த ஒக்கூர் அய்யப்பனை
(எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா) சுவீகாரம் எடுத்தார் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் . அது அப்போதே சர்ச்சையானதாக தற்போது கூறப்படுகிறது . ஆனால், எம்ஏஎம். ராமசாமி செட்டியாரின் பண அதிகார செல்வாக்குக்கு முன்னால் அந்த எதிர்ப்புகள் அப்போது எடுபடாமல் போனது. அதை அவர் குடும்பம் உறவு ஏற்பட்ட நிலையில் , எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரால் சுவீகாரம் எடுக்கப்பட்ட ஐயப்பன் என்ற முத்தையாவுக்கும் இடையே குடும்ப ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் தனது கடைசி காலத்தில், “முத்தையா எனக்கு ஈமக் காரியங்கள் கூட செய்யக் கூடாது. எனது சொத்தில் ஒரு ரூபாய்கூட அவருக்குக் கிடையாது” என்றெல்லாம் அறிவித்ததாகவும் எம்ஏஎம். ராமசாமி இதை உயிலாகவும் எழுதியதாகவும் அத்துடன், ‘‘முத்தையாவை நான் முறை தவறி சுவீகாரம் எடுத்துவிட்டேன் எனவே, அவரது கோவில் புள்ளியை ரத்து செய்யவும்’’ என இளையாத்தங்குடி கோயில் டிரஸ்ட்டுக்கு கடிதமும் எழுதியதாகவும் .
அவரது கடிதத்தை ஏற்ற டிரஸ்ட் நிர்வாகம், அறங்காவலர் குழுக் கூட்டத்தில் தீர்மானம் (தீர்மானம் எண் 541) நிறைவேற்றி அய்யப்பன் என்ற முத்தையாவின் கோவில் புள்ளியை ரத்து செய்ததாகவும் இதுகுறித்து எம்ஏஎம். ராமசாமி செட்டியாருக்கு முறைப்படி கடிதம் எழுதிய கோவில் நிர்வாகம், அதில் ஒரு பிரிவு நபர்கள் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் அப்போதே இருந்தது. ஆனால் அதில் எ.சி.முத்தையாவின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்த நிலையில் சுவீகாரம் எடுத்த போது முத்தையாவுக்கு புள்ளிவரியாக எம்ஏஎம்.ராமசாமி செட்டியார் செலுத்தி இருந்த ரூபாய்.25-யும் திருப்பி அனுப்பி இருந்தது. (இதை ஸ்பிக் ஏசி.முத்தையாவிடம் அப்போதே நேரில் ஆதாரத்துடன் விளக்கி இருக்கிறாராம் எம்ஏஎம்).
இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு அடைமழைக் காலம் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் சென்னையில் காலமானார். அப்போது அவருக்கு அவரது அண்ணன் மகன் அண்ணாமலை தான் இறுதிச் சடங்குகள் செய்தார் எனக் கூறப்பட்டாலும் அதேசமயம், முத்தையா கேட்டுக்கொண்டதன் பேரில் மீண்டும் இளையாத்தங்குடி கோயில் அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் (தீர்மானம் எண்557) நிறைவேற்றி மீண்டும் அவரை கோயில் புள்ளியாகச் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், முத்தையாவை மீண்டும் சேர்த்தது விதி மீறல் என எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் அண்ணி குமார ராணி மீனா முத்தையாவும், எம்.ஏ.எம்.ராமசாமியின் உறவினரும் ஸ்பிக் குழும தலைவருமான ஏ.சி.முத்தையாவும் ஆட்சேபம் தெரிவித்தனர். இவர்கள் அடுத்த குடும்பம்.
புதிதாகப் பொறுப்பெற்ற இளையாத்தங்குடி கோவில் அறங்காவலர்கள் நீதிமன்றம் வழங்கிய பழைய. தீர்ப்பு அடிப்படையில் நான்கு நபர்கள் குழுவானது இவர்களின் ஆட்சேபனை குறித்து பரிசீலனை செய்ததாகவும். இது தொடர்பாக கடந்த 9.10.22 அன்று நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், ‘‘எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவின் சுவீகாரம் சட்டத்துக்குப் புறம்பாக இருப்பதாலும் நகரத்தார்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாட்டுக்கு எதிராக இருப்பதாலும் மேற்கண்ட தீர்மானம் 557 (முத்தையாவை மீண்டும் பட்டிணசாமி பிரிவில் புள்ளியாக சேர்த்துக்கொண்ட தீர்மானம்) ரத்து செய்யப்படுகிறது’’ என தீர்மானம் நிறைவேற்றியதுடன், ‘‘மீண்டும் புள்ளியில் சேர்த்துக்கொண்டது தொடர்பாக நகரத்தார்களின் மற்ற 8 கோயில் நிர்வாகத்திடமும் இளையாத்தங்குடி கோயிலின் 7 உட்பிரிவினரிடமும் முத்தையா ஒப்புதல் பெற்று வரவேண்டும். அதுவரைக்கும் இடைப்பட்ட காலத்தில் தீர்மானம் எண் 541 (முத்தையாவை பட்டிணசாமி பிரிவு புள்ளியிலிருந்து ரத்து செய்த தீர்மானம்) மீண்டும் அமல்படுத்தப்படுகிறது’’ எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அய்யப்பன் என்ற
முத்தையாவை புள்ளியிலிருந்து நீக்கியதால் அவருக்காக ஆயுள் சந்தாவாக (2-வது முறையாக செலுத்தப்பட்ட புள்ளி வரி) செலுத்தப்பட்ட 151 ரூபாயையும் முத்தையாவின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டதாம் கோவில் நிர்வாகம். இந்த விவரங்கள் அனைத்தையும் குமார ராணி மீனா முத்தையாவுக்கும், ஏ.சி.முத்தையாவுக்கும் கடந்த 11-ஆம் தேதி கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது கோவில் டிரஸ்டி நிர்வாகம். இதில் அய்யப்பன் ஆதரவு டிரஸ்ட்டியும் ஒருவர் உண்டு. இந்தச் சூழ்நிலையில் தற்போது செட்டிநாடு இதழில் கலைமாமணி டாக்டர்
ஆறு.அழகப்பன் மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் , அண்ணாமலை பல்கலைக்கழகம் இதுகுறித்து சில விபரங்களைப் பதிவு செய்த நிலை அதில் குறிபிட்டுள்ள தகவல் :- "ராஜாசார் அண்ணாமலை செட்டியார் வழி இராமசாமி செட்டியார் குடும்பம் தழைத்தோங்க தகுதியானவரை பிள்ளை கூட்ட விரும்பியது பற்றி நாம் நன்கு அறிவோம்.
அந்தச் சூழ்நிலையில், இளையாத்தங்குடி நகரத்தார்களில் ஒருவரைத் தேடினர். அதன்படி இளையாத்தங்குடி கோவிலைச் சேர்ந்த ஐய்யப்பனை இனம் கண்டு பிள்ளை கூட்டியது இராமசாமி செட்டியார் குடும்பம். சமூகப் பெரியவர்களும் அதற்கு ஆதரவு தந்தனர்.
பிள்ளை கூட்டிய நிகழ்வுகள் அனைத்திற்கும் நகரத்தார்கள் திறமையான தொழிலதிபரும், கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத விருப்பம் கொண்டவருமான ஏ.சி..முத்தையாவின் தந்தையுமான எம்.ஏ. சிதம்பரம் செட்டியாரும், டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரின் அண்ணியான குமாரராணி மீனா முத்தையாவும் முன்னின்று நடத்தினர். அவர்களின் பெயர்கள் அழைப்பிதழில் அச்சிடப்பட்டன. இவ்வழைப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வந்தன. பிள்ளை கூட்டிய பிறகு சில சந்தர்ப்பங்களில் அது தொடர்பான விவரங்களை, ஆவணங்களைப் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
ஒருவரைப் பற்றி ஓர் விபரம் அல்லது குற்றச்சாட்டு கூறும் பொழுது அதனை அவர்களுக்கு அளித்து விளக்கம் கேட்டு பிறகுதான் நிர்வாகக்குழு முடிவெடுப்பர். இது உலகியல் நடைமுறை மற்றும் சட்டமும் ஆகும். இந்த மரபு நடைமுறை முற்றிலும் கோவில் அறங்காவலர்களால் பின்பற்றப்படவில்லை என 11.10.2022 தேதியிட்ட கடிதத்தில் தெரிய வருகிறது. இளையாத்தங்குடி கோவிலின் Bye-Law என்பது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (அறநிலைய) லா போர்ட்டால் 1926-ஆம் ஆண்டு ஸ்கீமாக நிறைவேற்றப்பட்டது தான் இன்று வரை தொடர்கிறது இந்த விதிகளில் ஒருவரை புள்ளியிலிருந்து நீக்குவதற்கு எவ்விதம் அதிகாரமும் கோர்ட்டார், ட்ரஸ்டிகாருக்கு அதில் கொடுக்கவில்லை. இப்படியான நிலையில், அதிகாரத்திற்கு உட்படாத செயலான, புள்ளியிலிருந்து நீக்குவது போன்ற செயல்களில் எந்த அதிகாரத்தின்படி போர்டு செயல்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகும்.
ஏ.சி. முத்தையா மற்றும் குமாரராணி மீனா முத்தையா இருவரும. எம்.ஏ.எம். ஆர். முத்தையாவின் குடும்ப விடயங்களில் தலையிட உரிமை இல்லை. மேலும்,.எம்.ஏ.எம். ஆர். முத்தையாவை செட்டிநாடு நகரத்தார்க்குரிய குல வழக்கப்படியும், சம்பிரதாயப்படியும் நகரத்தார் உரவினார்கள் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் சுவிகாரம் எடுத்ததும். பிறகு சுவீகாரப் பத்திரம் எழுதி அதனை சட்டப் பூர்வமாக பதிவும் செய்துள்ளனர். எனவே.எம்.ஏ.எம்.ஆர். முத்தையாவை சுவீகாரம் கொடுத்த பெற்றோர்கள் அல்லது சுவீகாரம் எடுத்த பெற்றோர்கள் ஆகியோரால் மட்டுமே எம்.ஏ.எம்.ஆர். முத்தையாவின் சுவிகாரம் செல்லும் அல்லது செல்லாது என நீதிமன்றத்தில் பரிகாரம் கோர முடியும். நீதிமன்றத்தைத் தவிர வேறு எவருக்கும் எம்.ஏ.எம்.ஆர். முத்தையாவின் சுவீகாரத்தையும், அவர் காலஞ்சென்ற எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் - சிகப்பி ஆச்சியின் வாரிசு இல்லை அல்லது செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் இல்லை .
27 ஆண்டுகள் கடந்த பிறகு. எம்.ஏ.எம்.ஆர் முத்தையாவின் சுவீகாரத்தைப் பற்றி மீண்டும் விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அதற்கான கால அளவும் கடந்து விட்டது.
ஒக்கூர் சேக்கப்ப செட்டியார் புதல்வரான. ஐயப்பனை, கானாடுகாத்தான் மு.அ.மு, இராசாமி செட்டியார் - சிகப்பி ஆச்சி சுவீகாரம் கூட்டிக் கொள்ள விரும்பிய போது நகரத்தார் நடைமுறைப்படி முறி எழுதப்பட வேண்டும். கவிகாரத்தில் இது முக்கியமான நடைமுறையாகும். அவர்கள் பெரிதும் விரும்பி சுவிகாரம் எடுத்த பொழுது முறைப்படி எழுதிய முறியில் நகரத்தார் சமூக மரபுப்படி ஐயப்பன் என்ற பெயர் முத்தையா எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்முறியில் கையொப்பமிட்ட ஏழு பேர்களில் ஏ சி..முத்தையாவும் கையொப்பமிட்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. முறியில் உள்ள அவரது கையொப்பத்தை வட்டமிட்டு கொடுத்துள்ளேன்.
சுவீகாரம் கூட்டும் பொழுது குடும்பத்தில் உள்ள பெரியவர் பெயரால் அழைப்பிதழ் அடிக்க வேண்டும். இந்த சுவீகாரத்தை ஏற்று குடும்பப் பெரியவரான மு.அ. சிதம்பரம் செட்டியார் அவர்கள் பிரியப்பட்டு அழைப்பிதழ் சிறப்பாக அடித்து அந்த அழைப்பிதழை ஆங்கிலத்திலும், தமிழிலும் மரபுப்படி அடித்துள்ளார்கள். அந்த இரு அழைப்புகளிலும் அவ்வண்ணமே அழைக்கும் என்ற அடிப்படையில் தங்கள் நல்வரவை விரும்பும் என்ற வாசகத்தில் மீனா முத்தையா, ஏ.சி. முத்தையா, மு.அ.மு. இராமசாமி, விசாலாட்சி இராமசாமி, M.A.M.M. அண்ணாமலை M அஷ்வின் சிதம்பரம் ஆகியோர் பெயர்கள் உள்ளன. சுவிகாரம் கூட்டும் பொழுது தொழில் மேதை MA, சிதம்பரம் செட்டியார், ஏ.சி. முத்தையா, மீனா முத்தையா, முதலியோர் மகிழ்ச்சி பொங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். பல படங்களைப் பார்க்கலாம், ஏ.சி.முத்தையா சுவிகாரம் வரும் ஜயப்பனுக்கு பக்கத்தில் திருமணத் தாம்பூலத் தட்டில் மாலைகள் இருக்க ஏந்தி மகிழ்ச்சியுன் வருகிறார்.)
முக்கியமாக இரசாசார் குடும்பத்தில் நடந்த இந்த செட்டிநாடு சார்ந்த நிகழ்ச்சி இந்திய அளவில், ராஜாசார் குடும்பத்திற்கு வாரிசாக ஐயப்பன் என்ற முத்தையா வந்துள்ளார் என்பதனை அறிமுகப்படுத்த கானாடுகாத்தான் வீட்டில் ஒரு பெரிய வரவேற்பு விழா நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழ் குமாரராணி என அழைக்கப்படும் மீனா பெயரில் சிறப்பாக அடிக்கப்பட்டுள்ளது
அந்த அழைப்பிதழில் தங்கள் நல்வரவை விரும்பும் என்று குமார ராசாவின் சுங்காரப் புத்திரரான MAM.M அண்ணாமலை பெயரும் உள்ளது. வரவேற்பில் முன்னாள் பாரதப் பிரதமர் தேவகவுடாவும், அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா, முன்னாள் கர்நாடக முதல்வர் PH. பாட்டல் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியும் வருகைதந்து விழாவினை சிறப்பித்தனர்.
இந்த அழைப்பிதழில் ஐயப்பனை பிறைக்கோட்டிற்கு கீழ், Son of Mrs. & Dr.M.A.M. Ramasamy என்று பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு சுவீகாரம் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் A.C.முத்தையா, குமாரராணி மீனா முத்தையா ஆகியவர்கள் முன்னின்றும், அழைப்பிதழிலும் அவர்களின் பெயர் அச்சிட்டு அனைவரையும் மேற்கண்ட வைபோகங்களுக்கு நேரிலும், பத்திரிகை மூலமாகவும் அழைத்தும் சீரும் சிறப்புமாக நடந்தேறியதற்கு
உறுதுணையாக இருந்துள்ளார்கள் எனத் தெரிகிறது. இவ்வாறிருக்க அவர்கள் இருவரும் புள்ளியிலிருந்து நீக்குமாறு கோவிலுக்கு கோரிக்கை விடுப்பது வியப்பாக உள்ளது. உண்மை இப்படி இருக்க அவர்கள் எவ்வாறு இப்படி செயல்பட முடிகிறது என்ற கேள்வி எழுவது நியாயமே.
சுவீகாரம் சட்டப்படி உடடினயாக பதிவுத் துறையில் பதிவு செய்வார்கள்.காரைக்குடி இணை சார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 08.02.1996 ஆம் நாள் பதிவு செய்துள்ளார்கள். பத்திரப் பதிவு அலுவலகத்தில் மு.அ.மு. இராமசாமி, சிகப்பி இராமசாமி, M.A.M.R.முத்தையா, சே.நாகம்மை முதலானோர்
கையெழுத்திட்டுள்ளனர். சாட்சிகளாக குமார ராசாவின் கவிகாரப் புதல்வர் அண்ணாமலை மற்றும் குடும்பப் பணியாளர். வைத்திய சுப்பிரமணிய ஐயரின் மகன் வி. ஜெயராமன் கையெழுத்திட்டுள்ளனர். அதன் பின்னர் நடந்த எம்.ஏ.எம்.ஆர். முத்தையா - கீதா முத்தையா திருமண அழைப்பிதழை M.A. சிதம்பரம் செட்டியார் அழகுற அடித்தார்கள் எம் எ எம் இராமசாமி செட்டியாரின் மாத சதாபிஷேக விழாஅழைப்பிதழிலும் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா அவர்கள் பெயர் அச்சடிக்கப்பட்டுள்ளதை யாரும் காணலாம்.
நகரத்தார் மரபுபடியும், அரசு சட்டங்களின் படியும் இவ்வளவு ஆவணங்கள் உள்ள நிலையில் இவ்வளவையும் மறைத்து புள்ளி நீக்கம் செய்திட எப்படி எழுத முடியும். சுவீகார நிகழ்ச்சிட திருமண நிகழ்ச்சி டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரின் 80-வது சதாபிஷேக விழா நிகழ்ச்சி அனைத்திலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இளையாத்தங்குடி திருப்பணிகளில், முன்பு நடந்த குடமுழுக்கு. தற்பொழுது நடைபெற்ற குடமுழுக்கு, இரண்டிலும் முழுமையாக பணியாற்றிய எம்.ஏ.எம்.ஆர். முத்தையா அவர்களை எப்படி தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் அறங்காவலர் குழு தலைவர் மனச்சாட்சி இல்லாமல் தெரிவித்துள்ளார்
இவ்வளவையும் மறைத்து, கைலாசநாதர் நித்திய கல்யாணி தெய்வங்களுக்கும் அஞ்சாமல். தவறான முறையில் அறங்காவலர்களுக்கு கடிதங்கள் எழுதியதால் அவர்கள் இருவரையும் தான் கோவில் புள்ளிகளில் இருந்து நீக்க வேண்டும்.
மேலும், "இதுபோன்ற செயல்கள் நகரத்தார் சமுதாய வழக்கத்திற்கு மாறான செயல் என்பதால், டிரஸ்ட் போர்ட் மட்டும் எடுத்த முடிவாக இல்லாமல் தீர்மான எண்.557.கோவிலைச் சேர்ந்த 7 பிரிவினருக்கும். மீதமுள்ள நம் 8 நகரக் கோயில்களுக்கும் அனுப்பி அவர்களுடைய ஒப்புதலை பெற்று
சமர்ப்பிக்குமாறு M.A.M.R, ஐயப்பன் (ஏ) முந்தையா அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு முடிவு செய்ய இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவ்வாறு செய்வதாக இருந்தால், அந்த நிகழ்வுகளில் ஏ.சி. முந்தையாவும் குமார ராணி மீனா முத்தையாவும் நேரில் கலந்து கொண்டு தங்கள் தரப்பு வாதத்தை வைப்பார்களா?.
இளையாத்தங்குடி கோயில் சட்ட முறையான டிரஸ்டிகளான வி.ஆர்.என்.ராமனாதன்செட்டியார் (பட்டினசாமி பிரிவு, பரம்பரை டிரஸ்டி) மற்றும் கப. கண்ணப்ப செட்டியார் ஆகியோர் எம்.ஏ.எம். ஆர். முத்தையா அவர்களை புள்ளியிலிருந்து நீக்குவதாக ஃபோர்ட் எடுத்த முடிவினை ஆட்சேபித்து, அந்த முடிவை எம்.ஏ.எம்.ஆர். முத்தையா அவர்கள் பொருட்படுத்த வேண்டியது இல்லை என்றும், இதுகுறித்து திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக 14.10.2022 தேதியிட்ட தங்கள் கடிதத்தில் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா அவர்களுக்குத் தெரிவித்து அதன் நகலை ஃபோர்டுக்கும் அனுப்பி உள்ளார்கள்."
மேலும் மற்றொரு ட்ரஸ்டியான சக்கந்தி க. ராஜா சுவாமிநாதன் இதற்கு முன் 2017ஆம் ஆண்டு நடந்த கமிட்டி கூட்ட தீர்மானம் எண்.557-ன்படி எம்.ஏ.எம்.ஆர். முத்தையா அவர்களை புள்ளியில் இருந்து நீக்கியதை ரத்து செய்தும், மீண்டும் பட்டினசாமி பிரிவு புள்ளியாக ஏற்றுக்கொண்டது சரி என்ற தீர்மானத்தை ஏற்றுக் கையெழுத்திட்டுள்ளார். ஆக மொத்தம் ஐந்து ட்ரஸ்டிகளில் மூன்று டிரஸ்டிகள் எம்.ஏ.எம். ஆர். முத்தையா அவர்களை புள்ளியில் இருந்து நீக்குவதற்கு சம்மதிக்கவில்லை என்பது இதிலிருந்தே தெளிவாகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இரண்டு டிரஸ்டிகளைக் கொண்டு 09.10.2022-ஆம் தேதி நடந்த கூட்டத்திற்கு மற்ற டிரஸ்டிகளுக்கு Bye-Law சட்டதிட்டத்தின்படி முறையாக அறிவிக்காமல் கூட்டம் கூட்டி எம்.ஏ.எம்.ஆர், முத்தையா அவர்களை புள்ளியிலிருந்து நீக்குவது சம்மந்தமாக நிகழ்ச்சி நிரலிலும், பொருண்மையிலும் (Agenda) குறிப்பிடாமல், ஏ.சி முத்தையா செட்டியார் மற்றும் குமாரராணி மீனா முத்தையா கொடுத்த கடிதம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக போர்டு ஒருதலைபட்சமாக, கோவில் தெய்வமான ஸ்ரீ கைலாசநாதர் சுவாமிக்கு அஞ்சாமல் செயல்பட்டுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது. ஒருவேளை அன்றைய கூட்ட நிகழ்ச்சிநிரலில் (Agenda) எம்.ஏ.எம், ஆர். முத்தையா அவர்களை புள்ளியிலிருந்து நீக்கப் போவது சம்மந்தமாக குறிப்பிட்டிருந்தால் ஏனைய டிரஸ்டிகளான வி.ஆர்.என். ராமனாதன் செட்டியார் (பட்டினசாமி பிரிவு, பரம்பரை டிரஸ்டி மற்றும் சுப. கண்ணப்ப செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டு இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து நிறைவேற்ற விடாமல் செய்து விடுவார்கள் என்பதால் திட்டமிட்டு நிகழ்ச்சி நிரலில் அந்த பொருண்மையை குறிப்பிடாமல் ஃபோர்டு தலைவர் இருந்துள்ளார். இதன் மூலம் மன்னிக்க முடியாத குற்றத்தை ஃபோர்டு தலைவர் செய்துள்ளார். இது சம்மந்தமாக இளையாத்தங்குடி கோவிலில் உள்ள ஏழு பிரிவினருக்கும் மற்றும் 8 நகர கோவில்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய கருத்தில் இதுவும் ஒன்றாகும்.
மேலும், நமது நாட்டின் சட்ட திட்டப்படி சுவீகாரம் எடுக்கப்படும் சிறுவர் சிறுமிகள் 5 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும் அல்லது நகரத்தார் சமுதாயத்தில் சுவிகாரம் எடுக்கும் போது இதற்கு வயது வரம்பு இல்லை என்பது மட்டுமே சட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் கரிகாரம் என்பது சமூகத்தின் நடைமுறைப்படியும், சட்டதிட்டத்திகள் படியும் நடைபெற்றுள்ளது. இதைத் தவிர சுவிகாரம் தொடர்பாக முடிவு செய்ய வேறு காரணங்கள் ஏதும் இல்லை என்பதே சட்டம்.
- ட்ரஸ்டின் தலைவர் தீர்மான நகலை, அது ஒருவர் தனிப்பட்ட நபரின் விஷயம் என்று கூட அறியாமல் சமுதாயத்தில் ளம்.ஏ.எம்.ஆர். முத்தையா அவர்களுக்கு உள்ள நல்ல மரியாதையை சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் விஷயத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது ஒருவர் தனிப்பட்ட உரிமையில் தலையிட்ட குற்றச்சாட்டிற்கு உள்ளாகிறது. இச்செயல்களுக்காக ட்ரஸ்டின் தலைவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர முடியும்...
- கோவிலின் Bye-Law என்பது மெட்ராஸ் ஹை கோர்ட்டால் 1926-ஆம் ஆண்டு ஸ்கிமாக நிறைவேற்றப்பட்டது தான் இன்று வரை தொடர்கிறது. இந்த விதிகளில் ஒருவரை புள்ளியிலிருந்து நீக்குவதற்கு எவ் விதம் அதிகாரமும் கோர்ட்டார் ட்ரஸ்டிகளுக்கு கொடுக்கவில்லை. இப்படியான கழ்நிலையில் தங்கள் அதிகாரத்திற்கு உட்படாத செயலான, பள்ளியிலிருந்து நீக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டது கோர்ட் அதிகார வரம்பை மீறிய செயலாகப் பார்க்கப்படுகிறது
இதற்கிடையில் கானாடுகாத்தானில் நடைபெற்ற சிவன் கோவில் கும்பாபிஷேகம், இளையாத்தங்குடி பெரிய கோவில் கும்பாபிஷேகங்களில் டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரும், ளம்.ஏ.எம்.ஆர். முத்தையா செட்டியாரும் இணைந்தே கலந்து கொண்டுள்ளனர்.அது மட்டுமல்லாது
இரண்டு கும்பாபிஷேகங்களுக்கு எம்.ஏ.எம். ஆர். முத்தையா செட்டியார் முதல் சங்கல்பம் செய்துள்ளார்கள்.
இதுபோன்று தன்னியோன்யமாக எம்.ஏ.எம்.ஆர். முத்தையா - கீதா முத்தையா தம்பதியினருக்கு இரண்டு பெண் மகவுகள், ஒரு ஆண் மகவு பிறந்து சிறப்பாகவும் அன்பாகவும் குடும்பம் நடத்தி வங்கனார். டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரும், பேரன் பேத்ரிகள் மீது மிகுந்த அன்பு செலுத்தி வந்துள்ளார்.
- 2015- ஆம் ஆண்டில் டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார். தன் அப்பச்சி உடலுக்கு இறுதி சடங்குகளை எம்.ஏ.எம்.ஆர் முத்தையா அவர்கள் செய்தார்கள். தாயார் சிகப்பி ஆச்சிக்கும் இறுதிச் சடங்குகள் செய்துள்ளார். -
தனது அப்பச்சியின் ஆன்மா சாந்தியடைய நகரத்தார்கள் காசியில் செய்யும் காரியங்களை எம்.ஏ.எம்.ஆர். முத்தையாசெட்டியார் தனது மனைவியுடன் காசிக்குச் சென்று நிறைவேற்றியுள்ளார். இது தொடர்பான செய்திகளை நமது செட்டிநாடு இதழ் மூலம் நாம் அறியலாம்.
தனது குடும்ப கடமைகளை ஆர். முத்தையா செட்டியார் தவறாமல் நிறைவேற்றியதோடு ராஜாசார் குடும்பத் தொழில் வளத்தையும் மென்மேலும் உயர்த்தியது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந் நிலையில் ஏ.சி. முத்தையா மற்றும் குமாரராணி மீனா முத்தையாவுடன் சேர்ந்து பங்காளிகள் முழு ஈடுபாட்டில் நடந்த கவிகாரத்திற்கு எதிராக இளையாத்தங்குடி கோவிலுக்கு கடிதம் எழுதி தங்கள் செல்வாக்கு மூலம் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா செட்டியார் குடும்பத்திற்கு இடைஞ்சல் செய்வதைத் தொடர்ந்து செய்து வருவது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஏசி. முத்தையாவிற்கு M.A.M. அறக்கட்டளை கிடைத்தது போல ஐயப்பனின் அனைத்து சொத்துக்களும் கிடைக்கலாம் எனப் பகல் கனவு காண்கிறார் போல
கோவிலில் ஏற்றுக்கொண்ட முறைப்படியும் இந்திய நாட்டின் சட்டப்படியும் நடந்த சுவீகாரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வாகும் தலைவர் மற்றும் அறங்காவலர் குழு புள்ளியிலிருந்து நீக்க எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா செட்டியாரை புள்ளியில் இருந்து நீக்கியதாக அறங்காவலர் குழு தலைவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டது சட்டத்திற்கு முரணானது. மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக புள்ளி நீக்கத் தீர்மானத்தை திரும்பப் பெற்று நடுநிலையாக நடந்து கொள்வது தான் முறையான செயலாகும்.
கோவில் பொறுப்பிற்கு வருபவர்கள் கோவில் இறைவன் - இறைவி மீது முழு நம்பிக்கை வைத்து நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்பது நகரத்தார்களின் தர்மம், தர்மம் மீறி நடப்பவர்களின் குடும்பம் வாழையடி வாழையாக பழி ஏற்க வேண்டும். இராமாயணத்தில் லெட்சுமணன் போட்ட கோட்டினைத் தாண்டியதால் சீதாதேவிக்கு நேர்ந்ததை நாம் அறிவோம். இதை மனதில் கொண்டு லெட்சுமணன் உயர்நீதிமன்றம் போட்ட Bye-Law என்ற கோட்டினைத் தாண்டி தேவையில்லாமல் சிக்கவில் மாட்ட வேண்டாம். எனவும் -
மேலும், எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் சட்டபூர்வமான வாரிசு. எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா தான் என சென்னை , மைலாப்பூர் தாசில்தார் வழங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த தொழிலதிபர் ஆங்கிலேய பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியில் ராஜாசார் பட்டம் வாங்கிய எஸ்.அண்ணாமலை செட்டியார் பேரன் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரின் சுவீகார மகன் ஐயப்பன்.என்ற முத்தையாவுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து அவரது ஒன்றுவிட்ட உறவுக்காரத் தொழிலதிபர் ஸ்பிக் ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் முன் உத்தரவிட்டுள்ளது.
செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் டாக்டர்.ஏ.சி முத்தையா கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "எம்.ஏ.எம். ராமசாமியின் தந்தையும் எனது தந்தையும் உடன் பிறந்த சகோதரர்கள். நாங்கள் நாட்டுகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எம்.ஏ.எம். ராமசாமி கடந்த 1996-ஆம் ஆண்டு ஐயப்பன் என்பவரை தத்து எடுத்துக்கொண்டார். இது நகரத்தார் சமூகத்தின் கட்டுப்பாடான பழக்கவழக்கங்களுக்கு எதிரானது. எதிர்ப்புகளை மீறி ஐயப்பன் தத்து எடுக்கப்பட்டுள்ளார். சட்டவிதிகளுக்கு மாறாக தத்து எடுக்கப்பட்ட நிலையில் சுவீகார மகன் அந்தஸ்தில் இருந்து கொண்டு, ஐய்யப்பன் தனது உறவையும் பதவியையும் துஷ்பிரோயகம் செய்து, எம்.ஏ.எம் ராமசாமியை செட்டிநாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். தொடர்ந்து அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார். மேலும் எம்.ஏ.எம்.ராமசாமி தனது உயிலை பதிவு செய்யும்போது தனது அசையும் அசையா சொத்துகளை செட்டிநாடு அறக்கட்டளைக்கே எழுதிவைத்ததால், அவரை ஐயப்பன் முறையாக நடத்தவில்லை.
எம்.ஏ.எம் ராமசாமி வாழ்ந்த காலத்தில் அவருக்கு துரோகம் செய்த ஐயப்பன், மயிலாப்பூர் தாசில்தார் முன்பு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு நானும் டாக்டர் மீனா முத்தையா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களது எதிர்ப்பையும் மீறி அவருக்கு மயிலாப்பூர் தாசில்தார் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழை ரத்து செய்யவேண்டும்" என்று கோரியிருந்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "சுவீகார மகனான ஐயப்பன் சார்பில் வாரிசு சான்றிதழ் கேட்டு உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு உள்ளதா என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏ.சி.முத்தையா மற்றும் மீனா முத்தையா சார்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வழக்கறிஞர் மூலம் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. எதிர்ப்பு மனுவில் தத்து எடுத்ததை எம்.ஏ.எம் ராமாமி ரத்து செய்து விட்டதாக கூறினாலும் அதற்கான ஆணவத்தை தாக்கல் செய்யவில்லை. எனவே அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக பரீசிலித்தே பின்னரே ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்தது. அப்போது, மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண், "வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு தாசில்தாருக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஏ.சி.முத்தையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறும் உத்தரவிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக் ஏ.சி.முத்தையா மீது பல குற்றச்சாட்டு உண்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட
பிரபல தொழிலதிபர் ஏ.சி. முத்தையா மீதான வங்கி மோசடி வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிண்டிகேட் வங்கியில் கடன் பெற்றதன் மூலம் அந்த வங்கிக்கு ரூபாய்.103 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்பது ஏ.சி. முத்தையா மீதான குற்றச்சாட்டு. தனது நிறுவனத்தின் வருவாயை அதிகமாகக் காட்டி, வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றதுடன், இந்தக் கடன் தொகையைத் தனது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இதர நிறுவனங்களுக்குக் கைமாற்றிவிட்டார் என்றும் முத்தையா உள்ளிட்ட 23 பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இவர்கள் மீது கூட்டுச்சதி, மோசடி, குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் சில மாதங்களுக்குணமுன்பு சென்னை பெருநகர நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.. 274 கோடி வங்கி மோசடி புகாருக்கு தொழிலதிபர் ஏ.சி முத்தையா மறுப்பு தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் பெயரளவுக்கே தாம் தலைவராக இருந்ததாக தெரிவித்துள்ளார். சிபிஐ நடத்திய சோதனையின்போது, முறையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஏ.சி முத்தையா கூறியுள்ளார்.
274 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஐ.டி.பி.ஐ. வங்கி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உட்பட 8 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் செலுத்தி ஏமாற்றியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஃபர்ஸ்ட் லீசிங் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஏ.சி. முத்தையா உட்பட 8 பேர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. பெங்களூரில் இருந்து வந்த சி.பி.ஐ. போலீஸ் அதிகாரிகள் சென்னையில் 7 இடங்களிலும், ஹைதராபாத்தில் ஒரு இடத்திலும் சில மாதம் முன்பு காலை முதல் இரவு வரை நடத்திய அதிரடி சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. புகார் கூறப்பட்ட சென்னை நிறுவனத்தில் புகார் கூறப்பட்ட காலகட்டத்தில் சேர்மனாக தொழில் அதிபர் ஏ.சி.முத்தையாவும், மேலாண்மை இயக்குனராக பரூக்இரானி என்பவரும், சீனியர் துணை தலைவராக டில்லிராஜூவும், தலைமை பைனான்ஸ் அதிகாரியாக சிவராமகிருஷ்ணா என்பவரும் செயல்பட்டுள்ளனர் என்றும் எனவே அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் சி.பி.ஐ.தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஏ.சி. முத்தையா, குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் பெயரளவுக்கே தாம் தலைவராக இருந்ததாக தெரிவித்துள்ளார். சிபிஐ நடத்திய சோதனையின்போது, முறையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஏ.சி முத்தையா கூறியுள்ளார். ஏ.சி.முத்தையா செட்டியார் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் 13.10.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மைலாப்பூர் தாசில்தார் வழங்கிய வாரிசு சான்றிதழ் செல்லுபடியாகும் என தெரிவித்து ஏ.சி.முத்தையா செட்டியார் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்