சென்னை, அம்பத்துார் பள்ளி மாணவர் தற்கொலை தொடர்பாக, பள்ளி ஆசிரியையை காவல்துறையினர் 'போக்சோ'வில் கைது செய்தனர்.
சென்னை அம்பத்துார், கள்ளிகுப்பத்தை் சேர்ந்த 17 வயது்ச் சிறுவன், பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு, கல்லுாரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.
ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி நண்பர்களுடன் கலந்தாய்வுக்கு் சென்றார்.
அன்று மாலை வீட்டிற்கு வந்து, படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் அவரை மீட்டு அம்பத்துாரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மாணவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அம்பத்துார் காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அம்பத்துார் தனியார் பள்ளியில் சிறுவன் படிக்கும் போது, தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய சர்மிளா, வயது 24, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி, இருவரும் நெருங்கி பழகியதனிடையே, சர்மிளாவுக்கு அவரது வீட்டில் வரன் பார்த்து, நிச்சயம் முடிந்துள்ள நிலையில், மாணவனுடன் உறவை தவிர்த்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், அந்த மாணவர் துாக்கிட்டு்த் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, ஆசிரியை சர்மிளாவை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் சிறையில்டைத்தனர்.
கருத்துகள்