ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நந்திவர்மன் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார்.
அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த ஊரே பூமிக்கடியில் புதைந்து விடுகிறது. அந்த சம்பவத்திலிருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய துஷ்ட விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருப்பதால், தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்திவர்மனின் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு வருகிறார்கள்.
அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைவதன் பின்னணியை சுவாரஸ்யமான வரலாற்றுக் கதையுடன், தற்போதைய காலக்கட்டத்துடன் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளதுஐந்து நிமிடம் பல்லவர்களின் வரலாற்றை 2 டி அனிமேஷன் மூலம் சொல்கிறோம். அதை தொடர்ந்து தொல்லியல்துறையினர் ஒரு கிராமத்தில் நந்திவர்மன் வாழ்ந்த இடத்தை தேடிச் செல்கிறார்கள்.
அப்போது அவர்களுக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களும் அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களில் பல்லவர்கள் பற்றிய பல ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சொல்லாத பல தகவல்களை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். என்றார் இயக்குனர் செஞ்சிகோட்டைக்கு ஒரு முறை சென்றிருந்த போது, அப்பகுதியிலுள்ள ஒரு பெரியவர் அங்கு நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்களைக் கூறினார். அதை கேட்கவே வியப்பானது. மறுநாள் அதே இடத்திற்கு நான் சென்றேன், அப்போது மற்றொருவர் அதே விஷயங்களை சொன்னார். இப்படி அப்பகுதியிலிருக்கும் பலர் அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து சொன்னார்கள். அப்போது அங்கு யார் ஆட்சி செய்தது என்று விசாரித்ததில், பல்லவ மன்னர்கள் தான் அப்பகுதியை ஆண்டதாகச் சொன்னார்கள்.பிறகு தான் பல்லவர்கள் பற்றியும், அங்கு நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது ஒரு ஐந்து பல்லவ மன்னர்களின் பெயர்கள் தெரிய வந்தது, அதில் நந்திவர்மன் முக்கியமானவராக இருந்ததால் அவருடைய பெயரை தலைப்பாக வைத்துவிட்டேன். அதுமட்டும் அல்ல, செஞ்சிகோட்டையில் நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது,
இப்போதும் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் யாராலும் செல்ல முடியாது. வழி இருக்கிறது, அது நமக்கும் தெரிகிறது, ஆனால் அங்கு நம்மால் செல்ல முடியாது. வெறும் அமானுஷ்ய விஷயங்களை மட்டும் சொல்லாமல் பல்லவர்களின் பெருமைகள் பற்றியும் படத்தில் சொல்லியிருக்கிறோம். பாண்டிச்சேரி கடற்கரையில் சில தூண்கள் இருக்கும், அவை செஞ்சி கோட்டையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தூண்களாகும். பல்லவர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன, அவற்றில் அந்த தூண்களும் ஒன்றாகும். இந்தியாவிலேயே முதன்மை சுற்றுலாத்தலமாக மகாபலிபுரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை உருவாக்கிய பல்லவர்கள் பற்றியும், அவர்களுடைய பெருமைகள் பற்றியும் மக்கள் அறிய முடிகிறது இதற்கு முன் மரகத நாணயம், ராட்சசன், புரூஸ்லி உள்ளிட்ட படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், 'கன்னி மாடம்' படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமாள் வரதன், 'நந்திவர்மன்' படத்தை இயக்கியிருக்கிறார், ஏ.கே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தில் 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாக நடித்திருக்கிறார். ஆஷா கவுடா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே.கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பல்லவர்களின் ஆட்சி வலுப்பெற்று. தந்தையின் காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த பல்லவர்கள் ஆட்சியை மீண்டும் வலுப்படுத்தினார்.
இராஷ்டிரகூடர்களுடன் கங்கர்களுடனும் கூட்டணி அமைத்து பாண்டியர்களை காஞ்சிக்கருகில் உள்ள தெள்ளாறு போரில் தோற்கடித்தார். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை வைகையாறு வரை விரட்டிச் சென்ற பின்பு பாண்டிய மன்னன் சீவல்லபன் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைக் கும்பகோணத்தில் தோற்கடிக்கவும் செய்தார்
இம்மன்னரின் கப்பற்படை மிகவும் வலிமைமிக்கதாக இருந்துள்ளது. இவர் கடல்கடந்து ஷயாம் மற்றும் மலேசியா நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. நந்திக் கலம்பகத்தில் ‘கழல் நந்தி’ எனவும், ‘பல்லவர் கோன் அரி என்றும் கூறப்படுகிறான். ‘அரி என்றால் சிங்கம்’ எனவே மூன்றாம் நந்திவர்மன் கழல்சிங்கன்றான் என்பதில் ஐயமின்மை உணர்க. ஆயின்.
“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற் சிங்கன் அடியார்க்கும் அடியேன்”
என்று சுந்தரர் தொகையிற் சுட்டப்பட்டவன் இவனா? எனின். ஆம் மேற்சொன்ன சையாம் செய்தியை நேர்க்க. இவன் காலத்தில் கடல்கடந்த நாடுகளில் இவன் பெற்றிருந்த செல்வாக்கையும் கடல்வாணிகத்தையம் நன்குணரலாம் அன்றோ? இன்னபிற சான்றுகளால். இம் மூன்றாம்நந்திவர்மனே பெரியபுராண நாயன்மாருள் ஒருவனான கழற்சிங்கன் என்பது நன்கு விளங்குகிறது.
கருத்துகள்