நவம்பர் 10,11 தேதிகளில் குடியரசுத் தலைவர் ஒடிசா பயணம்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நவம்பர் 10,11 தேதிகளில் ஒடிசாவுக்கு செல்கிறார். குடியரசுத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அவர் செல்கிறார்.
10.11.2022 அன்று குடியரசுத் தலைவர் பூரியில் உள்ள சுவாமி ஜெகன்நாதர் கோவிலுக்குச் சென்று வழிபடுகிறார். அதன் பிறகு புவனேஷ்வர் வந்தடையும் குடியரசுத் தலைவர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் புவனேஷ்வர் ராஜ்பவனில் அவருக்கு மரியாதை அளிக்கப்படுகிறது.
11.11.2022 அன்று குடியரசுத் தலைவர் புவனேஷ்வரில் உள்ள தபோபன் உயர் நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் குன்தாலா குமாரி சாபத் ஆதிவாசி பெண்கள் விடுதி போன்றவற்றை பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் புவனேஷ்வர் ஜெயதேவ் பவனிலிருந்து மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
கருத்துகள்