முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இட ஒதுக்கீட்டில் முடிவு செய்ய சட்டமன்றப் பேரவையின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நவம்பர் 12 ல் முதல்வர் தலைமையில்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை யடுத்து


மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமையில் சட்டமன்றப் பேரவையின்  அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நவம்பர் 12 ஆம் தேதி  (சனிக்கிழமை) காலை 10-30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.  நாட்டிலுள்ள 82 /100 விழுக்காடு பட்டியலின, மற்றும் பழங்குடியினர், (SC,ST)இதர பிற்படுத்தப்பட்ட.                ( BC +MBC,DNC = OBC) இன மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றிட,

அரசியலமைப்புச்  சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிலைநாட்டிட, சமூகநீதிக்காகப்போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு (Review petition) தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென



திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரான. துரைமுருகன்  அறிக்கையில் கூறியுள்ளார்.





பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லுமென்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு “சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு” என்று திமுக தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.




இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்விலிருந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்கள் “செல்லுமென்று அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல்” நீதிபதி ரவீந்திர பட் அவர்களின் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.




திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை இந்த வழக்கில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தது. ஆனாலும்      “கேசவானந்த பாரதி”, “இந்திரா சாஹ்னி” (மண்டல் ஆணையத் தீர்ப்பு) உள்ளிட்ட, இந்த அமர்வை விட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எல்லாம் முரணாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது. அரசியல் சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்டத்திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொன் வரிகள். அரசியல்சட்டம் வகுத்துத் தந்துள்ள சமத்துவத்திற்கு எதிராக எந்தச் சட்டத் திருத்தங்களும் அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக கவனமாக நிலை நாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள்!





ஆனால் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் அமைந்திருக்கிறதால் “இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னேறிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது” என்று இரண்டு  நீதிபதிகள் கொண்ட மைனாரிட்டித் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரபட் அவர்கள், தனது தீர்ப்பின் துவக்கத்திலேயே “நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறையாக பாரபட்சமுள்ள, விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிப்பதால், மெஜாரிட்டி (மூன்று நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டு விட்டே தனது தீர்ப்பை எழுதியுள்ளார். இறுதியில் “இந்த அரசியல் சட்டத்திருத்தம் சமூகநீதியை வலுவிழக்கச் செய்து, அதன் மூலம் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பைத் தகர்க்கும் விதத்தில் உள்ளது” என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.



பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்தில் உள்ள ஏழைகள் அறவே போட்டியிட முடியாது.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தனது கருத்தாக




`ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல இடஒதுக்கீடு! பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமை! எனக் குறிப்பிட்ட நிலையில் 

இந்திய அரசியல்லமைப்புச் சட்டத்தில் புகுந்திருக்கும் இந்தப் “பொருளாதாரப் பிரிவு”, இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போகச் செய்து விடும்.




சமூக நீதி மட்டுமே இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை அம்சம்!

அரசியல் சட்டத்தின் 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளின் படி சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்று தெளிவாக இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என்று எந்த சொற்றொடரும் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் இடம் பெறவில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல - இந்திய அளவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சமூக நீதி மட்டுமே அடிப்படை அம்சம் (BASIC STRUCTURE) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.





 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தும் நிலையில்  10 விழுக்காடு உயர் ஜாதி ஏழைக்களுக்கான இட ஒதுக்கீட்டை திராவிடக் கொள்கை  எதிர்ப்பதென்பது அந்த 3500 இடங்களுக்கான மருத்துவ நீட் தேர்வு எதிர்ப்பைப்  போன்றது தான். 





பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கு மட்டும் தந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அப்போது அட்டவணைப் பிரிவிலிருந்து வெளியேறி கிறுஸ்துவ மதத்துக்கு மாறியவர்களுக்கு ஏன் தனி ஒதுக்கீடு தரவில்லை? என்ற எழு வினா வந்தது. 

இதனால் பெரும்பாலனவர்கள் மதம் மாறினாலும் தங்களை அட்டவணைப்பிரிவில் தான் வைத்துக் கொண்டு, அனைத்து சலுகைகளையும் பெற்று வருகிறார்கள் என்பதற்கு எல்காட் புகழ் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உமா சங்கர் போன்றோர் ஒரு உதாரணமாகும். 


மேலும் 68 (டினோட்டிபைடு இனமாகும்)  சீர்மரபினர்-DNC ஜாதிகளும், 22 மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளும் MBC உரியவர்களுக்கு 7 விழுக்காடும், 28 மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைக் கொண்டவர்களுக்கு 2.5 விழுக்காடும் தந்து விட்டு 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 10.5 விழுக்காட்டை வன்னியர்(கவுன்டர்,படையாச்சி, நாயக்கர்)களுக்கு தற்காலிகமாகத் தந்த முன்னால் முதல்வர்  எடப்பாடி.கே.பழனிச்சாமியைத் தாண்டி நிரந்தரமாக தனி இட ஒதுக்கீடு வழங்கியது திமுக.ஆட்சியில் தான்  


அரசாணை வெளியிட்டது திமுக அரசு . சென்னை உயர் நீதி மன்றம் இரத்து செய்த 10.5 விழுக்காடு அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது திமுக. 


தற்போது அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க குழு அமைத்து வேலை செய்வதும் திமுக.தான் 

ஆனால், 3 விழுக்காட்டினர் உள்ள உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கிய 10 விழுக்காடு அரசியலமைப்பு திருத்தத்தை சரி என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த தகுதியில் எதிர்த்து அரசியல் பேசுகிறார்கள் திராவிடக் கட்சியினர் என்று தான் விவாதமே தற்போது நடக்கிறது.


பாரதிய ஜனதா கட்சிக்கு  எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் என, தற்போதய தமிழக அரசியல் களம் தான் சமூக நீதி தேடித்தருமா என்பது அவர்கள் கூட்டணிக்  கட்சியின் நிலை வித்தியாசம் (காங்கிரஸ் மாற்றும் கம்யூனிஸ்ட்) உள்ளது .உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் அதிமுக பிரிவுகள் அனைத்தும் தொடர்ந்து மௌனம் காக்கிறது. அதற்குக் காரணம் பல, உள் அரசியல் பல, 

உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில்  முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதில், . சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. என அறிக்கை வந்தது, 


பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பாரதிய ஐனதா கட்சியின்  அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில்  வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது. தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி.


இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக இந்த விவகாரத்தில் நிலைப்பாடும்  எந்த முடிவும் எடுக்காமல் அதிமுக தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. முன்னதாக நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் அதிமுக ஆதரவும் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக வெளிநடப்பு செய்தது.

இந்த நிலையில் தான் வழக்கு விவகாரத்திலும் அதிமுக நிலைப்பாடு எதுவும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது. அதிமுக தலைவர்கள் யாரும் இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி  இந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சிறிய சிறிய கட்சிகள் கூட இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ளன. ஆனால் அதிமுக சார்பாக யாரும் இதில் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை. அதிமுக இந்த விவகாரத்தில் மட்டுமின்றி சமீப நாட்களாக முக்கியமாக பல விஷயங்களில் மௌனம் காத்து வருகிறது. செய்தியாளர்களை அடிக்கடி சந்திக்கும் முன்னால் அமைச்சர் டி. ஜெயக்குமாரும் இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை. எடப்பாடி கே.பழனிசாமி இதுவரை தொடர்ச்சியாக முக்கியமான 5 விஷயங்களில் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார். 

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என உயர் நீதிமன்றம் மதுரை  கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 2001-ஆம் ஆண்டில் ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய சமூக நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் அதுபோல கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை. ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் இடஒதுக்கீடு சலுகை வழங்க தலைக்கேற்ப இட ஒதுக்கீடு முடியும்.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எஸ்.சி, எஸ்.டி போல் ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக் குழு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கொரேனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது. எனவே, 2021 ஆம் ஆண்டு  - மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு போல் ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக் குழு அளித்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கனவே  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவு அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டதையடுத்து நீதிபதிகள், ஓபிசி பிரிவு அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என மத்திய அரசு எதன் அடிப்படையில் தெரிவிக்கிறது. 1951- ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை தற்போது மக்களின் நலனுக்காக மாற்றி அமைக்கலாமே என்றனர். பின்னர், மத்திய அரசு தரப்பில் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர். 22-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.                            கடந்த காலம் ஒருபார்வை 


 “சமூக நீதி காத்த வீராங்கனை” முன்னால் முதல்வர்  ஜெ.ஜெயலலிதாவின் அதிமுக இப்போது இட ஒதுக்கீட்டில் வாய்திறக்க முடியாத செயலற்ற கட்சியாக மாறிவிட்டது காரணம் அதன் தலைவர்கள் சிலர் செய்த ஊழல் தான் அவர்கள் கையும் வாயும் கட்டப்பட்ட நிலை வரக் காரணம்.  

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னால் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா தனது உரையில் கூறியது :- மறந்து போன பலருக்கும் நினைவூட்டுகிறது பப்ளிக் ஜஸ்டிஸ்....முன்னால் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா:-  "இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் நான் எடுத்த உறுதியான நடவடிக்கைக்காகத் தான் “சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டம் எனக்கு அளிக்கப்பட்டது.  ஏதாவது சந்தேகம் இருப்பின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.     


      பெரியார், அண்ணா ஆகியோர் போராடிப் பெற்றுத்தந்த பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான உரிமை, எம்.ஜி.ஆரால் 1980 ஆம் ஆண்டு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டதுடன், தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் , ஆக மொத்தம் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழகத்தில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்தது.இந்தச் சூழ்நிலையில், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கென 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்வதென மத்திய அரசு 13.8.1990 அன்று ஆணை வெளியிட்டது

1991 ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், மண்டல் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் 27 சதவீதம் என்பதற்குப் பதிலாக, 50 சதவீதமென்று இட ஒதுக்கீடு செய்வதைக் கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசுத் துறைகள், மத்திய அரசுத் துறை சார்ந்த  நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலை வாய்ப்புகளில் மட்டுமின்றி அனைத்துக் கல்வி நிலையங்களின் அனுமதியிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி, 30-9-1991 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஓரு தீர்மானம் என்னால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.13.8.1990 ஆம் தேதியிலிருந்து 30.1.1991 அலாம் தேதி வரை திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றும், இது போன்ற ஒரு தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை. மாறாக, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முடிவினைப் பாராட்டி 21.8.1990 ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் மீதான தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 16-11-1992 ஆம் தேதியன்று வழங்கியது. அந்தத் தீர்ப்பில், 4 மாத காலத்திற்குள்ளாக, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றைப் பரிசீலனை செய்ய நிரந்தரக் கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும், 6 மாத காலத்திற்குள்ளாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து முன்னேறிய பகுதியினரை நீக்க வேண்டும்.

மொத்த இட ஒதுக்கீடுகள் 50 சதவீத உச்ச வரம்பை மீறாத வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.குறித்து 7-1-1993 ஆம் தேதியன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர், இட ஒதுக்கீட்டிற்கு 50 விழுக்காடு உச்சவரம்பு விதித்துள்ள ஆணைக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து முன்னேறிய பகுதியினரை நீக்க வேண்டுமென்ற ஆணைக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தில் 22.3.1993. ஆம் தேதியன்று தமிழக அரசின் சார்பில் 'மறு ஆய்வு மனு" தாக்கல் செய்யப்பட்டது.

 மட்டுமல்லாமல், 'தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கமிஷன்" ஒன்று 15-3-1993 ஆம் தேதியன்று எனது அரசால் அமைக்கப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினையடுத்து, எனது ஆட்சியில் சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டம் 9.11.1993 ஆம் தேதியன்று கூட்டப்பட்டு, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் சமூக மறுமலர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் ஊறு நேரா வண்ணம் எப்பொழுதும் போல், இனி வருங்காலம் முழுவதிலும், அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களின் அனுமதியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருக்கத்தக்க வகையில், இந்திய அரசியல் அமைப்பு லச்  சட்டத்தில் விரைவில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் என்னால் முன்மொழி யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்தத் தமிழகமே இந்தத் தீர்மானத்தோடு ஒன்றியுள்ளது என்பதைப் பறைசாற்றும் வகையில், தமிழகம் தழுவிய பொதுவேலை நிறுத்தம் ஒன்று 16-11-1993 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. மேலும் இது குறித்து விவாதிக்க, 26.11.1993 ஆண் தேதியன்று என்னால் அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டப்பட்டது.

இதனையடுத்து, சட்ட முன்வடிவு சட்டப் பேரவையில் 30.12.1993 ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டு, 31.12.1993 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவிற்கு 19.7.1994 தேதியன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அன்றே இச்சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.

 மட்டுமல்லாமல், இந்த சட்டத்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும் வகையில், இதற்கான திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 31.8.1994 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் வரிசை எண் 257ஏ-ல் சேர்க்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் எனது விடா முயற்சியால் நடைபெற்றன. இதன் இன்றியமையா அவசியத்தை உணர்த்த, தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, அன்றைய பிரதமரை சந்தித்து, இதைப் பற்றி விரிவாக விளக்கினேன். இதவே

உண்மை நிலை இட ஒதுக்கீடு பிரச்சனையில் நான் எடுத்த உறுதியான நடவடிக்கைக்காகத் தான் “சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டம் எனக்கு அளிக்கப்பட்டது..என அவரது உரை உள்ளன  என்பதாகும். ஆனால் இன்று அவரது கட்சி சார்ந்த தலைவர்கள் நிலை மற்றும் கொள்கை  அக் கட்சியின் தொண்டர்களுக்கே புரியாததுதான் உண்மை.   அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி கே.பழனிச்சாமியும்  இடையே மோதல் நிலவி வருகிறது. மேலும்

 அதிமுக சட்ட விதி 20 அ பிரிவு படி  பொதுக் குழு தொட்ர்பான வழக்கு   உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷ்னா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் கேட்டு எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரம் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது," என்று உத்தரவிட்டு அடுத்த விசாரணையை நவம்பர் மாதம்  21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொது செயலாளர் தேர்தலை நடத்த முடியாத சூழலுக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது உச்சநீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக. இரண்டு  தரப்பும் நம்புகிறது. உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு நிரந்தரத் தடையை விதிக்கவில்லை. என ஒரு தரப்பு தாமாக முன்வந்து இந்த தேர்தலை நடத்த மாட்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியது என மற்றொரு தரப்பு கூறுகிறது.

பொதுக்குழு விவகாரத்தில் நவம்பர் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி பிறப்பிக்கும் இறுதி உத்தரவே, அதிமுக கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்றாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதனால் அதிமுக சார்பில் சட்டமன்றப் பேரவை சார்பில் முதல்வர் கூட்டும் அணைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் இரண்டு தரப்பிலும்  கருத்து தெரிவிப்பது என்பது சந்தேகமே..மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்கள் நலனை விட அதிமுக உள்கட்சி பதவிதான் இவர்கள் நிலை,  இவர்களைப் புரிந்து கொள்ள மக்களுக்கான வாய்ப்பு தான் இப்போது உள்ள நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த