வரைவு தொலைத்தொடர்பு மசோதா 2022 குறித்த பொதுமக்கள் கருத்து வழங்கும் கால அளவை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நீட்டித்துள்ளது
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ‘வரைவு தொலைத்தொடர்பு (ஒளிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் இணைப்பு (தீர்வுகாணும் அமைப்புகள்) (நான்காவது திருத்தம்) ஒழுங்குமுறை விதிகள் 2022 குறித்து துறைசார்ந்தவர்களிடமிருந்து கருத்துகள், எதிர் கருத்துகளுக்கான கால அளவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
துறைச்சார்ந்தவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்துகளைப் பெறுவதற்கான கடைசித் தேதி அக்டோபர் 7, 2022 என்றும், எதிர் கருத்துகள் ஏதேனும் இருந்தால், அக்டோபர் 21, 2022 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. துறைச்சார்ந்தவர்களில் சிலர் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், எழுத்துப்பூர்வ கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 4 நவம்பர் 2022 வரை என்றும் எதிர் கருத்துகளுக்கு, ஏதேனும் இருந்தால், கடைசி தேதி நவம்பர் 18, 2022 வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்போது, துறைச்சார்ந்தவர்களில் சிலர் 'வரைவு தொலைத்தொடர்பு (ஒளிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் இணைப்பு (தீர்வுகாணும் அமைப்புகள்) (நான்காவது திருத்தம்) ஒழுங்குமுறை விதிகள் 2022' குறித்து தங்கள் கருத்துக்களை அனுப்ப மேலும் கால நீட்டிப்பை கோரியுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வ கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நவம்பர் 18, 2022 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர் கருத்துகள் ஏதேனும் இருந்தால், டிசம்பர் 2, 2022க்குள் சமர்ப்பிக்கலாம். மேலும் நீட்டிப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது
கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை - advbcs-2@trai.gov.in மற்றும் jtadv-bcs@trai.gov.in. போன்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு, திரு அனில் குமார் பரத்வாஜ், ஆலோசகரை (தகவல் ஒளிபரப்பு மற்
றும் கேபிள் சேவைகள்) இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். எண்: +91-11-23237922.
கருத்துகள்