அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த இளம் ஆராய்ச்சியாளர்கள் 2022-ன் இந்தியா-ஜெர்மனி வாரம் தொடங்கப்பட்டது
இளம் ஆராய்ச்சியாளர்கள் 2022-ன் இந்தியா-ஜெர்மனி வாரம் இன்று தொடங்கப்பட்டது. இந்த இரு நாடுகளைச் சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தை பகிர்வதும், நீண்ட கால ஆராய்ச்சி பங்களிப்பை கட்டமைப்பதும் இதன் நோக்கமாகும்.
இந்த ஒரு வார கால திட்டத்தை அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் செயலாளரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகருமான டாக்டர் அகிலேஷ் குப்தா தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவுடன் நீண்ட கால ஒத்துழைப்பை கொண்டுள்ள ஜெர்மனி, இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சியில் முதன்மையான கூட்டாளிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த ஒருவார கால நிகழ்ச்சியின் போது, இந்தியா-ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த 30 இளம் ஆராய்ச்சியாளர்கள் சமகால வேதி அறிவியல் விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிப்பார்கள்; கலந்துரையாடுவார்கள். பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகில் இரு நாடுகளின் ஆராய்ச்சியாளர்களிடையே இவ்வாறு கலந்துரையாடல் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.
கருத்துகள்