9 சுங்கச்சாவடிகளில் 60 சதம் கட்டணம் குறைகிறது..
செங்கல்பட்டு பரனுர், மேல்மருவத்தூர் ஆத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா சென்னை புறவழிச் சாலையிலுள்ள வானகரம், சூரப்பட்டு, சென்னை -தடா வழியிலுள்ள நல்லூர், மதுரை- திருச்சிராப்பள்ளி இடையே பூதக்குடி, சிட்டம்பட்டி ..
ஆகிய சுங்கச்சாவடிகளில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டணம் குறைக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் செய்யப்பட்ட முதலீடு, திரும்ப எடுக்கப்பட்ட பின்னரும் கட்டணம் குறைக்கப்படாதது ஏன் எனக் எனக்கேட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் எழுதிய கடிதத்தின் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர்
இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பாடுகின்றதில் சுமார் 700 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. வசூலிக்கப்படும் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி வருவதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிக் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென்று திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வைத்த கோரிக்கையடுத்து அமைச்சர் அனுப்பியிருக்கும் கடிதம் தான் பேசு பொருள்.
இதுகுறித்து திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
வில்சன் தனது ட்விட்டர் பதிவில், “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக வாகனப்பதிவின் போதே ஒரு சிறிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அதற்கு தற்போது பதிலளித்திருக்கும் ஒன்றிய அமைச்சர் 'நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணமானது பொது நிதியுதவி திட்டங்களில் 40 சதம் வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சாலைப்பயனாளர்களின் சுமையைக் குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறை சிறிய கட்டணமாக வசூலித்துக் கொள்ள ஆவண செய்யுமாறு ஒன்றிய அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்.
· அதற்கு தற்போது பதிலளித்திருக்கும் மத்திய அமைச்சர் 'நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணமானது பொது நிதியுதவி திட்டங்களில் 40 சதவீதம் வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சாலைப்பயனாளர்களின் சுமையைக் குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறை சிறிய கட்டணமாக வசூலித்துக் கொள்ள ஆவண செய்யுமாறு மத்திய அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்
கருத்துகள்