வடகிழக்குப் பிராந்தியம், சிக்கிம்-இல் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் ஆய்வு
வடகிழக்குப் பிராந்தியம், சிக்கிம்-இல் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 3 நாட்கள் ஆய்வு
வடகிழக்கு பிராந்தியம், சிக்கிம்-இல் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மூன்று நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்வு நிகழ்ச்சியின் முதல் நாளில் அசாம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, அசாம் முதல்வர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய இணை அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் மற்றும் மத்திய, மாநில மூத்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிகழ்வில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சிக்கல்கள், நிறைவேறி கொண்டிருக்கும் திட்டங்களின் முன்னேற்றம், முன்மொழியப்பட்ட திட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு, பிரச்சனைகள், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
ஏற்கனவே, தொடங்கப்பட்ட திட்டங்களை விரைந்து முடிக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அமைச்சர் திரு கட்கரி உத்தரவிட்டார். வடகிழக்கு மாநிலங்களில் உயர்தர போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
கருத்துகள்