குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, நடிகை ரம்பாவின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இளையமகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுகிறார். ரம்பா என்ற விஜயலட்சுமி. கடந்த 20 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1990 ஆம் ஆன்டுகளில் பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர். ஒரு காலகட்டத்தில் இவருக்கும்
திவ்யபாரதிக்கும் கடும் போட்டிகள் இருந்தன. 2000 ஆம் ஆண்டு வரை ஹிந்தித் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தினார் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்
நடிகை ரம்பா. அதன்பின் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சாரக் கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் என தமிழ் படங்கள் குவிந்தது. நடிகை ரம்பாவிற்கு இந்திர குமார் பத்மநாதன் என்பவருடன் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் தகவல் தெரிவித்துள்ளார். காரில் அவருடன் குழந்தைகள் மற்றும் ஆயாவும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக,
யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை, ஆனால் அவரது மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்காக பிரார்த்திக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள்