காரைக்குடியில் பட்டா மாறுதலுக்கு ரூபாய் ஆறாயிரம் லஞ்சம் வாங்கிய நகர சர்வேயர், மற்றும் அலுவலகத்திலேயே பணியிலிருந்த ஏஜன்டுடன் கைது .
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் கழனிவாசல் பகுதி திவ்யதர்ஷன் (வயது 38). நகரப்பகுதி ஏல்லையிலுள்ள அவரது தந்தை பெயரிலிருந்த அவரது வீட்டின் பட்டா மாறுதலைத் தாயார் பெயருக்கு மாற்றுவதற்காக காரைக்குடி நகராட்சியில் செயல்படும் வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றும் நகர் சர்வேயர் சரவணனைச் சந்தித்தார். அப்போது அவர், பட்டா மாறுதலுக்கு ரூபாய் .6 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என அவரிடம் கேட்டாராம் .
அது குறித்து திவ்யதர்ஷன், சிவகங்கையிலுள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்ததையடுத்து சிவகங்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையில் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய். ஆறாயிரத்தை திவ்யதர்ஷனிடம் பெற்றுக் கொடுத்து அதை நகராட்சி அலுவலகத்திலிருந்த சர்வேயர் சரவணனிடம் கொடுக்கக் கூறினர்
அந்த பணத்தை சர்வேயர் சரவணனிடம் அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்த போது அவர் வாங்க மறுத்த நிலையில் அங்கிருந்த படி அங்கு உதவி பணியினைச் செய்த ஏஜன்ட் மணியிடம் கொடுக்கும்படி கூறியதையடுத்து அந்தப் பணம் ஏஜண்டு மணி பெற்றபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜான்பிரிட்டோ, ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ், உதவி ஆய்வாளர் ராஜாமுகமது மற்றும் காவல்துறை பணியாளர்கள் சர்வேயர் சரவணன் மற்றும் அவரது ஏஜண்டு மணி ஆகிய இருவரையும் இலஞ்சம் வாங்கியதாக கைது செய்தனர்.
அந்த நிலையில், திருப்புவனம் மன்னா் குடியிருப்பு மேல ரத வீதியில் உள்ள நில அளவையா் சரவணன் வீட்டில் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ தலைமையிலான. காவலர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு கணக்கில் வராத ரூபாய். 5 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்